நிலைக்குத்துகளிடை நீளம்

கப்பல்களில் நிலைக்குத்துகளிடை நீளம் (Length between perpendiculars) என்பது. நீர்மட்டத்துக்கு இணையாக மிக முன்புறத்தில் இருக்கும் மேற்பரப்புக்கும், கப்பலின் பின்புறக் கம்பத்தின் பின் மேற்பரப்பு அல்லது பின்புறத்தின் முதன்மை நிலைக்குத்து உறுப்புக்கும் இடையில் உள்ள தூரம் ஆகும். கப்பலில் பின்புறக் கம்பம் இல்லாவிடில், சுக்கானின் நிலைக்குத்துத் தண்டின் முதன்மை அச்சு இந்த நீளத்தின் பின் முடிவிடமாகப் பயன்படுகிறது.[1]

கப்பல்களை விவரிப்பதற்கான அளவுகளைக் காட்டும் ஒரு வரைபடம்.

இந்த நீளத்தைப் பின்புறத்தில் பின்புறக் கம்பம் அல்லது சுக்கான் வரை அளப்பது, கப்பலின் தாங்குதிறன் குறித்த நியாயமான அளவைக் கொடுக்கும் என நம்பப்படுகிறது. சிலவகைக் கப்பல்களில் எல்லா நடைமுறை நோக்கங்களுக்கும் இது, நீர்மட்ட நீளத்தையே குறிக்கிறது. ஆனால், சரிவான முகப்பைக் கொண்ட கப்பல்களில் மிதப்புயரம் மாறும்போது நீர்மட்ட நீளமும் மாறுவதால், ஒரு குறித்த அளவு சுமைதாங்கும் நிலையிலேயே இந்நீளம் அளக்கப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "Perpendiculars and Length Between Perpendiculars". Archived from the original on 2016-04-04. பார்க்கப்பட்ட நாள் 2015-11-20.

இவற்றையும் பார்க்கவும் தொகு

வெளியிணைப்புக்கள் தொகு