நிலைத்த வளையங்கள் (சீருடற்பயிற்சி)

நிலைத்த வளையங்கள் (still rings) அல்லது சுருக்கமாக வளையங்கள், ( பறக்கும் வளையங்களுக்கு வேறானது), ஓர் கலைநய சீருடற்பயிற்சிக் கருவி ஆகும். இதனைப் பயன்படுத்தி நிகழ்த்தும் விளையாட்டும் வளையங்கள் என்றே அழைக்கப்படுகிறது. இது மரபுவழியாக ஆண் சீருடற்பயிற்சியாளர்களாலேயே பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் பயிற்சிகள் நிகழ்த்த மிகுந்த உடல் வலிமைத் தேவைப்படுகிறது. சீருடற்பயிற்சியாளர்கள் பொதுவாக வளையப் பிடிப்புகளை பயன்படுத்துகின்றனர்.

இரும்புச் சிலுவை நிகழ்த்திக் காட்டும் ஓர் சீருடற்பயிற்சியாளர்.
அமர்ந்த நிலையில் ஓர் பயிற்சியாளர்
வளையப் பிடிப்புகள்.

பயிற்சிக் கருவி தொகு

திண்மையான மாழை சட்டகத்திலிருந்து கட்டற்றுத் தொங்கும் இரு வளையங்களே பயிற்சிக் கருவியாகும். ஒவ்வொரு வளையத்திற்கும் ஆதரவாக அமைந்துள்ள வார் மேலேயுள்ள மாழை சட்டகத்திலிருந்து தொங்கவிடப்பட்டுள்ள எஃகு வடத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கையிலும் ஒவ்வொரு வளையத்தைப் பற்றியுள்ள போட்டியாளர் வளையங்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.

அளவைகள் தொகு

 
1896 ஒலிம்பிக்கில் நிலைத்த வளையங்கள் நிகழ்ச்சி

பன்னாட்டு சீருடற்பயிற்சிகள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள கருவி அளவைகள் சிற்றேட்டின்படி:

  • உள்வட்ட விட்டம்: 18 சென்டிமீட்டர்கள் (7.1 அங்) ± 0.1 சென்டிமீட்டர்கள் (0.039 அங்)
  • பிணைக்கப்பட்டுள்ள புள்ளியிலிருந்து வளையத்தின் கீழ் உள்வட்டம் வரையிலான தொலைவு: 300 சென்டிமீட்டர்கள் (9.8 அடி) ± 1 சென்டிமீட்டர் (0.39 அங்)
  • இரு பிணைப்புப் புள்ளிகளுக்கிடையேயான தொலைவு: 50 சென்டிமீட்டர்கள் (1.6 அடி) ± 0.5 சென்டிமீட்டர்கள் (0.20 அங்)

பிறப் பயன்பாடுகள் தொகு

சீருடற்பயிற்சிகளில் மட்டுமன்றி வளையங்கள் ஆண்களாலும் பெண்களாலும் தங்கள் உடல் நலம் பேண் பயிற்சிகளில் ஒன்றாகவும் பாவிக்கப்படுகின்றன.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Still rings
என்பதில் ஊடகங்கள் உள்ளன.