நீரின் தன்னயனாக்கல்

நீர் மூலக்கூறு தனது தூய வடிவிலோ அல்லது கரைசலொன்றிலோ ஒரு ஐதரசன் அணுவின் கருவை இழந்து ஐதரொக்சைட்டு அயனை (OH-)உருவாக்கல் நீரின் தன்னயனாக்கல் எனப்படும். இழக்கப்பட்ட ஐதரசன் அயன் (H+) வேறொரு நீர் மூலக்கூறொன்றுடன் இணைந்து ஐதரோனியம் அயனை (H3O+)உருவாக்கும். நீரின் இத்தன்னயனாக்கல் இயல்பு நீரின் ஈரியல்பைக் காட்டுகின்றது.

சமநிலை மாறிலி தொகு

தூய நீர் மிகவும் குறைவாகவே மின்னைக் கடத்தும். இவ்வளவு 0.055 µS∙cm−1 என கணிப்பிடப்பட்டுள்ளது. இவ்வளவு நீரின் தன்னயனாக்கத்தால் உருவாகும் அயன்களாலேயே என்க் கருதப்படுகின்றது.

H2O + H2O   H3O+ + OH

அயன்களின் செறிவின் அடிப்படையில் மேற்படி தாக்கத்துக்கான சமநிலை மாறிலி பின்வருமாறு வழங்கப்படும்.

 

நீரின் அயனாக்கல் மாறிலியை (Kw) நீரிலுள்ள அயன்களின் செறிவையும் சமநிலை மாறிலியையும் கொண்டு கணிக்கலாம்.

 

இதில் [H3O+] என்பது ஐதரோனியம் அயனின் செறிவையும், [OH] என்பது ஐதரொக்சைட்டு அயனின் செறிவையும் குறிக்கின்றது.

25 °C வெப்பநிலையில் Kwஇன் அளவு 1.0×10−14 ஆகக் காணப்படும். இவ்வளவீட்டைக் கொண்டு நீரின் தன்னயனாக்கல் தூய நீரில் மிக அரிதாகவே நிகழ்கின்றதென அறிந்து கொள்ளலாம்.

 

அமுக்கம், வெப்பநிலை, அயன் திறன் ஆகிய காரணிகளின் செல்வாக்கு தொகு

 
25 MPa மாறா அமுக்கத்தில் நீரின் தன்னயனாக்கல் வெப்பநிலையில் தங்கியிருத்தல்
 
25 °C மாறா வெப்பநிலையில் நீரின் தன்னயனாக்கல் அமுக்கத்தில் தங்கியிருத்தல்
 
25 °C மாறா வெப்பநிலையில் NaClஇன் அயன் திறனுக்கமைய pKw அளவு மாறுபடல்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீரின்_தன்னயனாக்கல்&oldid=2746290" இலிருந்து மீள்விக்கப்பட்டது