நீர்க்கோவை

நீர்க்கோவை (Ascites, கிரேக்கம் askites, "baglike")[1] இரையகக் குடலியவியல் மருத்துவத்தில் பரிவிரிக்குழியில் பாய்மச் சேகரிப்பினைக் குறிக்கும் ஓர் கலைச்சொல்லாகும். இந்த மருத்துவ நிலமை பரிவிரிக்குழி பாய்மம், பரிவிரிப் பாய்ம மிகுதி, பரிவிரிநீர்த்தல் அல்லது அடிவயிற்று நீர்வீக்கம் என்றெல்லாமும் அறியப்படுகிறது. இந்த நிலைமை பெரும்பாலும் கல்லீரல் இழைநார் வளர்ச்சியாலும் தீவிர கல்லீரல் நோயினாலும் ஏற்பட்டாலும் இதன் இருப்பினைக் கொண்டு பிற முக்கிய மருத்துவச் சிக்கல்களையும் அடையாளம் காண முடியும். குருதிப் பரிசோதனை, அடிவயிற்று மீயொலி நோட்டம் , ஊசி கொண்டு பாய்ம வெளியேற்றம் அல்லது துளைத்து வடித்தல் (சில நேரங்களில் மருத்துவ சிகிட்சையாகவும்) ஆகியன கொண்டு இதன் காரணங்களை அறுதியிட இயலும். மருந்துகள் (சிறுநீரிறக்கிகள்), துளைத்து வடித்தல், மற்றும் அடையாளம் காணப்பட்ட காரணத்தை குவியப்படுத்திய பிற சிகிட்சை முறைகள் கொண்டு இதற்கான சிகிட்சை அளிக்கப்படுகிறது.

நீர்க்கோவை
மகோதரம்
இதய செயலிழப்பிற்கான முதன்மை தன்மைகளும் அறிகுறிகளும். (நீர்க்கோவை ஏறத்தாழ நடுவில் குறியிடப்பட்டுள்ளது.)
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புஇரையகக் குடலியவியல்
ஐ.சி.டி.-10R18.
ஐ.சி.டி.-9789.5
நோய்களின் தரவுத்தளம்943
ஈமெடிசின்ped/2927 med/173
பேசியண்ட் ஐ.இநீர்க்கோவை
ம.பா.தD001201

மேற்கோள்கள் தொகு

  1. "Ascites". Dictionary.com: An Ask.com Service. Oakland, CA: IAC. 2010. பார்க்கப்பட்ட நாள் March 29, 2010). {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்க்கோவை&oldid=1801129" இலிருந்து மீள்விக்கப்பட்டது