நீர்வர்ணம்

நீர்வர்ணம் (Watercolour) என்பது ஓவியம் வரையப் பயன்படுத்தும் திரவ வர்ணமாகும். நீரில் கலந்து பயன்படுத்துவதால் இந்தப்பெயர் பெற்றது. நீர் வர்ணங்கள் திரவமாக பல்வேறு தன்மைகளில் கிடைக்கின்றன. அதற்கமைய கட்டிகளாகவும், பசையாகவும், தூள்களாகவும் கிடைக்கின்றன. இதை நீரில் தகுந்த அளவில் கலந்து பயன்படுத்துவர்.

நீர்வர்ணம்

நீர்வண்ண ஊடகம் தொகு

 
நீர் வண்ணத்தில் வரைந்த ஓவியம்

நீர்வண்ண ஊடகம் என்பது ஓவியத்தில் ஒரு பிரிவைக் குறிக்கும். இதில் சிகப்பு, மஞ்சள், நீலம் ஆகிய நிறங்கள் முதன்மை நிறங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த முதன்மை நிறங்கள் கொண்டு மற்ற வண்ணங்களை உருவாக்கும் முறை வண்ணச் சக்கரம் மூலம் விளக்கப்படுகிறது.[1]மற்ற வண்ண ஊடகங்களை விட நீர்வண்ண ஓவியத்தில் தவறுகள் செய்துவிட்டால் திருத்துவது சிரமம். இந்தியாவில் இதில் முதன்மையான ஓவியர்களாக வாசுதேவ காமத்,[2] மணியம் செல்வன் போன்ற பல ஓவியர்கள் உள்ளனர்.

மேற்கோள்கள் தொகு

  1. http://www.watercoloursecrets.com/
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-06-28. பார்க்கப்பட்ட நாள் 2014-07-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்வர்ணம்&oldid=3714377" இலிருந்து மீள்விக்கப்பட்டது