நீளவீடு (Longhouse) எனப்படுவது, ஓர் அறை கொண்ட, நீளமானதும் ஒடுங்கியதுமான அளவு விகிதமுடையதுமான ஒரு வகை வீடு ஆகும். ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளில் வாழும் மக்கள் குழுக்கள் பல இவ்வகையான வீடுகளைக் கட்டுகிறார்கள்.[1]

பசிபிக் வடமேற்கு கரையோரப் பாணியில் அமைந்த நீளவீடு ஒன்று. பிரித்தானியக் கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் மானிடவியல் அருங்காட்சியகத்தில் உள்ளது.

இவற்றுள் பல மரத்தால் கட்டப்பட்டவை. பெரும்பாலான பண்பாடுகளில் இவை நிரந்தர அமைப்புக்களின் தொடக்ககால வடிவங்களாகக் காணப்படுகின்றன.

ஐரோப்பாவின் புதியகற்கால நீளவீடுகள், கால்நடைகள் வளர்ப்பதற்கும் பயன்பட்ட மத்தியகால தாட்மூர் நீளவீடுகள் (Dartmoor longhouse), அமெரிக்காக்களின் தாயக மக்களுள் பல பண்பாட்டினர் பயன்படுத்திய பல விதமான நீளவீடுகள் என்பன இவ்வீடு வகையுள் அடங்குவன.[2]

ஐரோப்பா தொகு

புதியகற்கால நீளவீட்டு வகையை கி.மு. 5000-ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் நடு ஐரோப்பா, மேற்கு ஐரோப்பாவில் வாழ்ந்த முதல் வேளாண்மைச் சமூகத்தினர் அறிமுகம் செய்தனர்.

போர்னியோ தொகு

 
சரவாக், பெலகா பகுதியில் ஒரு நவீன மர நீண்ட வீடு.

தென்கிழக்கு ஆசியத் தீவான போர்னியோவில் (இப்போது இந்தோனேசிய கலிமந்தான், (Indonesian Kalimantan) கிழக்கு மலேசியா மற்றும் புரூணை) வசிப்பவர்களில் பலர், குறிப்பாக டயாக் மக்கள், பாரம்பரியமாக நீள வீடுகள் எனப்படும் நீளமான வீடுகளில் வாழ்கின்றனர்.

இந்தோனேசியாவில் இந்த நீள வீட்டை, இந்தோனேசிய மொழியில் ரூமா பேத்தாங் (rumah betang) என்றும்; மலாய் மொழியில் ரூமா பாஞ்சாங் (rumah panjang) என்றும் அழைக்கிறார்கள்.

மேற்கோள்கள் தொகு

  1. Pollard, Elizabeth (2015). Worlds Together, Worlds Apart concise edition vol.1. New York: W.W. Norton & Company, Inc.. பக். 34. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780393250930. 
  2. Medieval Peasant Long-house at the English Heritage website.

மேலும் காண்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீளவீடு&oldid=3434687" இலிருந்து மீள்விக்கப்பட்டது