நுஜூத் அலி

கட்டாயத் திருமணங்களை எதிர்ப்பவர்

நுஜூத் அலி (Nujood Ali, அரபு மொழி: نجود علي‎ ) (பிறப்பு 1998) என்பவர் கட்டாயத் திருமணம் மற்றும் குழந்தைத் திருமணத்திற்கு எதிரான யெமனில் நடக்கும் இயக்கத்தில் ஒரு முக்கிய நபர் ஆவார். இவர் பத்து வயதில், பழங்குடி பாரம்பரியத்தை மீறி விவாகரத்து பெற்றவர் ஆவார்.[2][3] இதனால் உலகில் மிகச்சிறிய வயதில் மணமுறிவு பெற்ற பெண் என்று அடையாளப்படுத்தப்பட்டார்.[4] 2008 நவம்பரில், அமெரிக்க பெண்கள் பத்திரிகையான கிளாமர், நுஜூத் அலியை ஆண்டின் சிறந்த பெண்மணியாக தேர்ந்தெடுத்தது. மேலும் இவரின் வழக்கறிஞர் ஷதா நாசருக்கும் சேர்த்து அந்த விருதை வழங்கியது.[3][5] அலியின் துணிவை இலரி கிளின்டன் , காண்டலீசா ரைஸ் உள்ளிட்ட முக்கிய பெண்கள் பாராட்டினர்.

நுஜூத் அலி
பிறப்பு1998 (அகவை 25–26)
தேசியம்யெமனி
மற்ற பெயர்கள்நோஜூம்[1]
அறியப்படுவதுமிக இளவயதில் திருமண முறிவு பெற்றவர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்I Am Nujood, Age 10 and Divorced
வாழ்க்கைத்
துணை
Faez Ali Thamer
(தி. 2008; ம.மு. 2008)

?? (தி. 2014)
விருதுகள்கிளாமர் இதழ் வழங்கிய ஆண்டின் சிறந்த பெண் விருது (ஷதா நாசருடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது)

அலியின் வழக்கறிஞரான ஷாதா நாசர் 1964 இல் பிறந்தவராவார். அவர் ஒரு பெண்ணியவாதி மற்றும் மனித உரிமைகளில் நிபுணத்துவம் பெற்றவராவார், அலியின் வழக்கில் அவரது ஈடுபாடு மிகவும் பாராட்டைப் பெற்றது.[5] அலி பிரெஞ்சு பத்திரிக்கையாளர் டெல்ஃபின் மினோயியுடன் இணைந்து என் ஐயெம் நூஜூத், ஏஜ் 10, அண்ட் டைவர்ஸ்டு என்ற ஒரு நூலை எழுதியுள்ளார்.

வாழ்கை வரலாறு தொகு

நுஜூத் அலிக்கு ஒன்பது வயதாகும் போது, இவரது பெற்றோர்கள் முப்பதுகளில் இருக்கும் பேஸ் அலி தாமர் என்பவருக்கு இவரை மணமுடித்தனர்.[6] இவரது மாமியார்களால் தொடர்ந்து அடிக்கப்பட்டும், கணவனால் வன்கலவி செய்யப்பட்டார். இந்நிலையில் திருமணமான இரண்டு மாதங்களுக்குப் பிறகு அலி 2008, ஏப்ரல், 2 அன்று கணவன் வீட்டிலிருந்து தப்பி வெளியேறினார். தன் தந்தையின் இரண்டாவது மனைவியின் ஆலோசனையின் பேரில், இவர் விவாகரத்து கோரி, தனியாக நீதிமன்றத்திற்கு நேரடியாகச் சென்றார். அரை நாள் காத்திருப்புக்குப் பிறகு, இவர் ஒரு நீதிபதியால் கவனிக்கப்பட்டார், முகமது அல்-கிகாதா இவருக்கு தற்காலிக அடைக்கலம் கொடுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். மேலும் இவரது தந்தை மற்றும் கணவர் இருவரையும் காவலில் எடுத்தார்.[7]

வழக்கறிஞர் ஷதா நாசர் அலியை கட்டணமின்றி ஆதரிக்க ஒப்புக்கொண்டார். அந்த வழக்கறிஞரைப் பொறுத்தவரை 1990 களில் ஒரு பெண் வழக்கறிஞரின் தலைமையில் செயல்படும் ஒரு சட்ட அலுவலகத்தை சனாவில் திறந்து வழக்குகளை நடத்தத் தொடங்கியவுடன் தொடங்கிய ஒரு போராட்டத்தின் தொடர்ச்சி இதுவாகும். பெண் கைதிகளுக்கு தேவைப்படும் சட்ட உதவிகள் மூலம் அவர் தனது வாடிக்கையாளர்களை அடைந்தார்.[8]

அந்த நேரத்தில் யெமன் நாட்டுச் சட்டமானது திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதை நிர்ணயிக்கவில்லை. மேலும் திருமண ஒப்பந்தத்தில் குடும்பங்கள் குழந்தைத் திருமணத்தின்போது திருமணமாகும் மணப்பெண்கள் வயதுக்கு வரும்வரை கணவர் அவளுடன் உடலுறவு கொள்வதில்லை என்று ஒப்புக்கொள்வதாக கருதப்பட்டது. நீதிமன்றத்தில், நாசர் அலியின் திருமணம் சட்டத்தை மீறியதாக வாதிட்டப்பட்டது. ஏனெனில் அலியின் கணவரால் அலி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.[5] மூன்று முதல் ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு இவர் தன் கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்ற நீதிபதியின் முன்மொழிவை அலி நிராகரித்தார். இதன்பிறகு 2008, ஏப்ரல், 15 அன்று,[9] நீதிமன்றம் இவருக்கு விவாகரத்து வழங்கியது (மேலும் இவரது முன்னாள் கணவர் திருமணத்தின்போது அளித வாக்குறுதியை காப்பாற்றத் தவறியதற்காக 250 டாலர்கள் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது).[5]

வழக்கின் முடிவுக்குப் பிறகு, அலி மீண்டும் சனாவின் புறநகர்ப் பகுதியில் இருந்த தனது குடும்பத்துடன் சென்று சேர்ந்தார். இவர் 2008 இலையுதிர்காலத்தில் பள்ளிக்குச் செல்லத் துவங்கினார். திருமணத்திற்குப் பிறகு முதல் முறையாக, வழக்கறிஞராகும் திட்டத்துடன் பள்ளிக்குச் செல்லத் துவங்கினார்.[10] அலியின் நினைவுக் குறிப்புகளைக் கொண்டு பிரஞ்சு பத்திரிக்கையாளர் டெல்ஃபின் மினோயால் நூல் எழுதப்பட்டு, 2009 இல் வெளியிடப்பட்டது. மேலும் இந்த புத்தகத்தின் சர்வதேச விற்பனையில் இருந்து ஒரு பங்குத் தொகை இவரது பள்ளிப்படிப்புக்காக செலுத்தப்பட்டது; ஆனால் இவர் தொடர்ச்சியாக பள்ளிக்குச் செல்லவில்லை.[11] இந்த வழக்கின் விளைவாக யெமன் பற்றிய எதிர்மறையான செய்திகள் உலக பத்திரிகைகளில் வெளியாயின. இதனால் 2009 மார்ச்சில் அலியின் கடவுச்சீடு பறிமுதல் செய்யப்பட்டது. அதன்மூலம் இவர் ஆத்திரியாவின் வியன்னாவில் நடந்த உலக மகளிர் விருது விழாக்களில் கலந்து கொள்ளாமல் தடுக்கப்பட்டார். புத்தகத்தின் வருமானம் உண்மையில் இவரது குடும்பத்திற்குச் செல்கிறதா என்றும் ஊடங்கள் கேள்வி எழுப்பின.[12]

2010 ஆம் ஆண்டில், அலியின் குடும்பம் பிரெஞ்சு பதிப்பகத்தின் உதவியுடன் வாங்கிய புதிய இரண்டு மாடி குடியிருப்பில் வசித்து வந்தது. கட்டடத்தின் தரை தளத்தில் ஒரு மளிகைக் கடையை நடத்தி வந்தது. இந்த நேரத்தில், அலியும், இவரது தங்கையும் தனியார் பள்ளியில் முழுநேரமாக படித்து வந்தனர்.[11] ஏமன் சட்டத்தின்படி நூல் வெளியீட்டாளர்கள் நேரடியாக அலிக்கு பணம் செலுத்த முடியாததால், அலிக்கும் அவரது கல்விக்குமாக அவரது 18 வயது வரை மாதம் $1000 அவரது தந்தையிடம் வழங்க ஒப்புக்கொண்டனர்.[13]

அலியின் நினைவுக் குறிப்பின் ஆங்கில மொழிப் பதிப்பு 2010 மார்ச்சில் வெளியிடப்பட்டது. த நியூயார்க் டைம்ஸ் கட்டுரையாளர் நிக்கோலஸ் கிறிஸ்டோஃப் பலதார மணம் மற்றும் குழந்தைத் திருமணம் போன்ற சமூகப் பிரச்சனைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட பணிகளைப் பாராட்டினார்.[14] உண்மையில், அலியின் வழக்கை மீது பாய்ச்சப்பட்ட ஊடக வெளிச்சம் மற்ற குழந்தை திருமணங்களை இரத்து செய்வதற்கான முயற்சிகளை ஊக்குவித்ததாகக் கூறப்படுகிறது. 2009 ஆம் ஆண்டில் ஒரு நடுத்தர வயது ஆணிடமிருந்து எட்டு வயது சவூதி சிறுமிக்கு விவாகரத்து வழங்கப்பட்டது. அதற்கு முந்தை ஆண்டு அவரது தந்தை அவரை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தி அதற்கு ஈடாக சுமார் $13,000 பெற்றிருந்தார்.[14][15][16]

2013 ஆம் ஆண்டில், அலி தன் தந்தையால் தனது வீட்டை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், நூல் வெளியீட்டாளர்கள் செலுத்திய பெரும்பகுதி பணத்தை அவரே எடுத்துக் கொண்டதாகவும் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். அவரது தங்கையான ஹைஃபாவிற்கும் அவரது தந்தை திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார்.[13] அலியின் கல்விக்காக ஒதுக்கப்பட்ட பணத்தைக் கொண்டு அவர் தனக்காக இரண்டு புதிய மனைவிகளை அடைந்தார். மேலும் haaretz.com இன் படி, ஹைஃபாவை மிகவும் வயதான ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தார். அலியின் முன்னாள் கணவர் அவருக்கு மாதம் $30 மட்டுமே ஜீவனாம்சம் கொடுத்தார்.

2015 சூன் நிலவரப்படி தற்போது பதினாறு வயதாகும் அலி, அதிகாரப்பூர்வமற்ற முறையில் தனது பெயரை "மறைக்கப்பட்ட" என்று பொருள்படும் நுஜூத் என்பதிலிருந்து "வானத்தில் நட்சத்திரங்கள்" என்ற பொருளில் நோஜூம் என மாற்றினார்.[1]

ஹஃபிங்டன் போஸ்ட் படி, அவர் 2014 இல் திருமணம் செய்து கொண்டார், இப்போது அவருக்கு இரண்டு பெண்கள் பிள்ளைகள் உள்ளனர். அவருடைய கல்வியில் அவர் முதலில் திட்டமிட்டபடி முன்னேற்றம் காணமுடியவில்லை. மேலும் பணம் கேட்டு அவரது குடும்பத்தினர் நச்சரிப்பதாக கூறப்படுகிறது.[17]

நூல் பட்டியல் தொகு

2010 - I Am Nujood, Age 10 and Divorced, நியூயார்க், 2010 (ISBN 978-0307589675)

தமிழ் மொழிபெயர்ப்பு தொகு

நூஜூத்தின் நினைவுக் குறிப்புகள் அடங்கிய I Am Nujood, Age 10 and Divorced நூலை தமிழில் சூ. ம. ஜெயசீலன் என் பெயர் நுஜூத், வயது 10, விவாகரத்து ஆகிவிட்டது! என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார்.

குறிப்புகள் தொகு

 

  1. 1.0 1.1 Boitiaux, Charlotte (June 10, 2015). "'I Am Nojoom, Age 10 and Divorced' tackles tradition". France 24. http://www.france24.com/en/20150610-yemen-child-marriage-salami-nojoom-age-10-divorced. 
  2. Daragahi, Borzou (June 11, 2008), Yemeni bride, 10, says I won't, Los Angeles TimesmznfzKLDhjsd'gV, பார்க்கப்பட்ட நாள் 16 February 2010
  3. 3.0 3.1 Walt, Vivienne (3 February 2009), A 10-Year-Old Divorcée Takes Paris, Time/CNN, archived from the original on February 5, 2009, பார்க்கப்பட்ட நாள் 16 February 2010
  4. "நூல்நோக்கு: இருளைக் கிழித்து ஒளி ஏற்றிய சிறுமி". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-11-09.
  5. 5.0 5.1 5.2 5.3 Power, Carla (12 August 2009), Nujood Ali & Shada Nasser win "Women of the Year Fund 2008 Glamour Award", Yemen Times, archived from the original on 5 ஏப்ரல் 2011, பார்க்கப்பட்ட நாள் 16 February 2010 {{citation}}: Check date values in: |archive-date= (help)
  6. Borzou Daragahi (June 11, 2008). "Yemeni Bride, 10, says I Won't". Los Angeles Times. https://articles.latimes.com/2008/jun/11/world/fg-childbride11. 
  7. Loving, James (September 5, 2009), Video Beat Part 4 - CNN Explosher= National Radio Text Service, archived from the original on 5 June 2011, பார்க்கப்பட்ட நாள் 16 February 2010. Note: Apart from other details, this website names the judge.
  8. Madabish, Arafat (28 March 2009), Sanaa's first woman lawyer, Asharq Alawsat: English edition, archived from the original on 11 May 2011, பார்க்கப்பட்ட நாள் 16 February 2010
  9. Ali 2010, p. 107
  10. Mullins, K.J (August 27, 2009), Child bride Nujood Ali's life after the divorce, Digital Journal, பார்க்கப்பட்ட நாள் 16 February 2010
  11. 11.0 11.1 Hersh, Joshua (4 March 2010), A TEN-YEAR-OLD’S DIVORCE LAWYER, The New Yorker, retrieved March 4, 2010.
  12. Bobi, Emil (14 March 2009). "Kleine große Frau: profil besuchte die zehnjährige Jemenitin Nojoud Ali in Sanaa" [Little big woman: Profil visits the ten-year-old Yemeni Ali Nojoud in Sanaa] (in ஜெர்மன்). Profil (Austrian news magazine). Archived from the original on 22 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் April 10, 2010.
  13. 13.0 13.1 Sheffer, Joe (March 12, 2013). "Yemen's youngest divorcee says father has squandered cash from her book". theguardian.com. Guardian News and Media Limited. பார்க்கப்பட்ட நாள் September 10, 2013. Nujood Ali claims father has used proceeds from her book deal to marry and has arranged wedding for her younger sister
  14. 14.0 14.1 Kristof, Nicholas (3 March 2010), "Divorced Before Puberty", New York Times, பார்க்கப்பட்ட நாள் 4 March 2010
  15. Saudi child 'files for divorce', BBC News, 24 August 2008, பார்க்கப்பட்ட நாள் 7 April 2010
  16. Young Saudi girl's marriage ended, BBC News, 30 April 2009, பார்க்கப்பட்ட நாள் 7 April 2010
  17. "Here's What Happened to the Yemeni Child Bride Hillary Clinton Wanted to Help". 5 November 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நுஜூத்_அலி&oldid=3931738" இலிருந்து மீள்விக்கப்பட்டது