நூருல் அசன்

வங்காளதேச துடுப்பாட்டக்காரர்

குவாசி நூருல் அசன் சோஹன் (Quazi Nurul Hasan Sohan பிறப்பு: நவம்பர் 21, 1993) [1] ஓர் வங்காளதேசத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் வங்காளதேச அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார்.மேலும் இவர் முதல் தரத் துடுப்பாட்டம் , பட்டியல் அ துடுப்பாட்டம் மற்றும் இருபது20 ஆகிய போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இவர் 2010 ஆம் ஆண்டில் தனது பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளிலும் 2011 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் அறிமுகமானார். 2016 ஆம் ஆண்டில் இவர் சர்வதேச அளவில் வங்காளதேச அணியின் சார்பாக விளையாடினார். இவர் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் 4046 ஓட்டங்களையும் , பட்டியல் அ போட்டிகளில் 2420 ஓட்டங்களையும் எடுத்தார். மேலும் இவர் 19 வயதிற்கு உட்பட்ட வங்காளதேச அணி , வங்காளதேச அ அணி சார்பாகவும் இவர் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டார். இவர் வங்காளதேச துடுப்பாட்ட அணியின் முதனமைக் குச்சக் காப்பாளராக உள்ளார். இவர் வங்காளதேசத்தின் குல்னாவில் பிறந்தார்.

உள்ளூர்ப் போட்டிகள் தொகு

அவர் 2015 இல் வங்காளதேச பிரீமியர் லீக்கில் சில்ஹெட் சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். [2] [3]

2017–18 டாக்கா பிரீமியர் லீக்கில் இவர் விளையாடினார். அந்தத் தொடரில் ஷேக் ஜமால் தன்மொண்டி சங்கத்தின் சார்பாக விளையாடினார். அதில் 12 போட்டிகளில் 546 ஓட்டங்கள் எடுத்தார். [4]

2018–19 வங்காளதேச பிரீமியர் லீக்கிற்கான வரைவு பட்டியலில் இடம் பெற்றதனைத் தொடர்ந்து, அக்டோபர் 2018 இல், டாக்கா டைனமைட்ஸ் அணிக்கான அணியில் இவர் இடம் பெற்றார். [5] இவர் 2017-18 மற்றும் 2018-19 ஆம் ஆண்டுகளில் பட்டியல் அ மற்றும் இருபது 20 துடுப்பாட்டப் போட்டியில் ஷேக் ஜமால் தன்மொண்டி சங்கத்தின் தலைவராக இருந்தார்; 2018–19ல் டாக்கா பிரீமியர் பிரிவு இருபதுக்கு துடுப்பாட்ட லீக்கின் துவக்க தொடரின் வாகையாளர் பட்டத்தினை வென்றனர்.

2018–19 டாக்கா பிரீமியர் பிரிவு துடுப்பாட்ட லீக் போட்டியில் ஷேக் ஜமால் தன்மொண்டி சங்கத்துன் சார்பாக இவர் விளையாடினார். அந்தப் போட்டித் தொடரில் 16 போட்டிகளில் விளையாடி 524 ரன்கள் எடுத்தார். [6]

சர்வதேச வாழ்க்கை தொகு

2016 ஆம் ஆண்டில் இவர் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான துடுப்பாட்டத் தொடரில் விளையாடுவதற்காகத் தேர்வானார். சனவரி 15 இல் சிம்பாப்வே அணிக்கு எதிரான இருபது20 போட்டித் தொடரில் இவர் அறிமுகமானார்.[7]

அதே ஆண்டில் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக இவர் தேர்வானார். அந்தத் தொடரில் தேர்வாகிய முஷ்பிகுர் ரஹீம் காயம் காரணமாக தொடரில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக இவர் தேர்வானார். டிசம்பர் 29 இல் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[8] [9] 2017 ஆம் ஆண்டில் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணி வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. சனவரி 20 அன்று இந்த அணிக்கு எதிரான இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[10]

டிசம்பர் 2018 இல், 2018 ஏ.சி.சி வளர்ந்து வரும் அணிகள் ஆசியா கோப்பைக்கான வங்காளதேச அணியின் தலைவராக இவர் தேர்வு செய்யப்பட்டார். [11]

குறிப்புகள் தொகு

  1. "Nurul Hasan". cricket.com.pk. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-10-25.
  2. "Quazi Nurul Hasan Profile & Career Stats". cricwaves.com. பார்க்கப்பட்ட நாள் 2015-10-25.
  3. "Cricket World Cup - Bangladesh Portrait Session". gettyimages.ca. பார்க்கப்பட்ட நாள் 2015-10-25.
  4. "Dhaka Premier Division Cricket League, 2017/18: Sheikh Jamal Dhanmondi Club". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 April 2018.
  5. "Full players list of the teams following Players Draft of BPL T20 2018-19". Bangladesh Cricket Board. Archived from the original on 28 மார்ச் 2019. பார்க்கப்பட்ட நாள் 29 October 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Dhaka Premier Division Cricket League, 2018/19 - Sheikh Jamal Dhanmondi Club: Batting and bowling averages". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 April 2019.
  7. "Zimbabwe tour of Bangladesh [Jan 2016], 1st T20I: Bangladesh v Zimbabwe at Khulna, Jan 15, 2016". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 15 January 2016.
  8. "Mushfiqur ruled out with hamstring injury". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 28 December 2016.
  9. "Bangladesh tour of New Zealand, 2nd ODI: New Zealand v Bangladesh at Nelson, Dec 29, 2016". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 December 2016.
  10. "Bangladesh tour of New Zealand, 2nd Test: New Zealand v Bangladesh at Christchurch, Jan 20-24, 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 January 2017.
  11. "Media Release : ACC Emerging Teams Asia Cup 2018: Bangladesh emerging squad announced". Bangladesh Cricket Board. Archived from the original on 3 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 3 December 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நூருல்_அசன்&oldid=3652835" இலிருந்து மீள்விக்கப்பட்டது