நெக்ரோபொலிசு


நெக்ரோபொலிசு அல்லது கல்லறை நகரம் (necropolis) இறந்தவர்களின் சடலங்களை பதப்படுத்தி, நகரத்தின் அருகில் உள்ள பகுதியில் பெரிய அளவிலான கல்லறைகளில் அடக்கம் செய்யப்படுவதை, பண்டைய கிரேக்க மொழியில் νεκρόπολις (nekropolis) நெக்ரோபொலிசு என்பர். இதன் பொருள் இறந்தவர்களின் நகரம் என்பதாகும்.[1] முதன்முதலில் பண்டைய எகிப்தில் இறந்து போன பார்வோன்கள் மற்றும் அவரது குடும்பத்தினரின் உடலைகளைப் பதப்படுத்தி, நகர்புறத்தில், பிரமிடுகளில் அடக்கம் செய்யும் முறை தோன்றியது.

கிளாஸ்கோ நகரத்தின் நெக்ரோபொலிசின் நுழைவாயில்

வரலாறு தொகு

 
கீசா நெக்ரோபொலிசு, ஆறு பிரமிடுகளின் தொகுதி

பண்டைய எகிப்து இராச்சியத்தில் இறந்த பார்வோன் எனும் மன்னர் குடும்பத்தவர்களின் பதப்படுத்திய மம்மி எனும் சடலங்களை பெரிதும் சிறிதுமான ஆறு பிரமிடுகளில் அடக்கம் செய்யப்பட்டது. இறந்த பார்வோன்களின் கல்லறைகள் மன்னர்களின் சமவெளியிலும், இராணிகள், இளவரசிகள் மற்றும் அரச குழந்தைகளின் கல்லறைகள் அரசிகளின் சமவெளியில் அடக்கம் செய்யப்பட்டது. இவற்றில் பெரியது கீசா நெக்ரோபொலிசு என்பர். இந்த நெக்ரோலிசு நைல் நதிக்கரையில் அமைந்துள்ள பழைய கிசா நகரத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் பாலைவனப் பகுதியில் அமைந்துள்ளது. இதுவே உலகின் முதல் நெக்ரோபோலிசு ஆகும். [2]

பின்னர் கிரேக்கம் போன்ற பண்டைய ஐரோப்பிய நாடுகளில் இறந்தவர்களின் உடலை அழகிய கல்லறைகளில் அடக்கம் செய்யும் முறை பின்பற்றப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெக்ரோபொலிசு&oldid=3060785" இலிருந்து மீள்விக்கப்பட்டது