நெய்க்காரப்பட்டி

இது தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் பேரூராட்சி ஆகும்.

நெய்க்காரப்பட்டி (ஆங்கிலம்:Neikkarapatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வுநிலை பேரூராட்சி ஆகும்.

நெய்க்காரப்பட்டி
—  பேரூராட்சி  —
நெய்க்காரப்பட்டி
இருப்பிடம்: நெய்க்காரப்பட்டி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°26′51″N 77°27′43″E / 10.447362°N 77.462068°E / 10.447362; 77.462068
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
வட்டம் பழனி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மொ.நா. பூங்கொடி, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

11,753 (2011)

784/km2 (2,031/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

15 சதுர கிலோமீட்டர்கள் (5.8 sq mi)

320 மீட்டர்கள் (1,050 அடி)

இணையதளம் www.townpanchayat.in/neikkarapatti

இது பழநியிலிருந்து 8 கிமீ தொலைவில் பழநி - உடுமலைப்பேட்டை (வழி:கொழுமம்) சாலையில் உள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 11,753 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 15 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும் கொண்டது. இது பழனி (சட்டமன்றத் தொகுதி)க்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,113 வீடுகளும், 11,753 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 78.5% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,023 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 929 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 3,104 மற்றும் 115 ஆகவுள்ளனர்.[5]

புவியியல் தொகு

இவ்வூரின் அமைவிடம் 10°16′N 77°16′E / 10.26°N 77.27°E / 10.26; 77.27 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 402 மீட்டர் (1322 அடி) உயரத்தில் இருக்கின்றது.

ஆதாரங்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. நெய்க்காரப்பட்டி பேரூராட்சியின் இணையதளம்
  5. Neikkarapatti Town Panchayat Population Census 2011
  6. "Neikkarapatti". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெய்க்காரப்பட்டி&oldid=3594665" இலிருந்து மீள்விக்கப்பட்டது