நெல்லி பிளை

நெல்லி பிளை (Nellie Bly, நெலி பிளை, மே 5, 1864 – சனவரி 27, 1922) என்ற புனை பெயர் கொண்ட அமெரிக்க இதழியலாளரின் இயற்பெயர் எலிசெபத் ஜானே காக்ரான் ஆகும்.[1]

நெல்லி ப்ளை
Nellie Bly
பிறப்புஎலிசெபத் ஜானே காக்ரான்
(1864-05-05)மே 5, 1864
காக்ரன்சு மில்சு, பென்சில்வேனியா, அமெரிக்கா
இறப்புசனவரி 27, 1922(1922-01-27) (அகவை 57)
நியூயார்க், அமெரிக்கா
தேசியம்அமெரிக்கன்
பணிபத்திரிக்கையாளர், புதின எழுத்தாளர், கண்டுபிடிப்பாளர்
வாழ்க்கைத்
துணை
ராபர்ட் சீமன் (1895)
விருதுகள்National Women's Hall of Fame (1998)
கையொப்பம்Signature reads: "Nellie Bly"
Notes
திருமணத்திற்குப் பிறகு‍ "எலிசெபத் காக்ரான் சீமன்," என்று‍ மாற்றிக் கொண்டார்.

வாழ்க்கை வரலாறு தொகு

வறுமையால் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டார். பெண்களைப் பற்றி வெறுப்போடு‍ எழுதிய ஒரு‍ பத்திரிக்கைக்கு‍ பதிலளித்து‍ நெல்லி ப்ளை என்ற புனை பெயரில் கடிதம் எழுதினார். அந்த பத்திரிக்கை ஆசிரியர் அவரை வேலைக்கு‍ அழைத்தார். ஆனால் பெண் என்பதால் வேலை தர மறுத்தார். பின் தொடர்ந்து‍ முயன்று‍ வேலையில் அமர்ந்தார். பெண் தொழிலாளிகளின் துயரங்களை எழுதினார். ஒரு‍ கட்டத்துக்கு‍ மேல் சாதாரண விசயங்களை எழுதுமாறு‍ கட்டாயப்படுத்தப்பட்டார். ஒரு‍ மனநோயாளியாக நடித்து‍ பத்து‍ நாட்கள் போய்க் காப்பகத்தில் இருந்து‍ அதை எழுதினார். மனநோய் பற்றிய மருத்துவம், நீதித்துறை, காப்பக நிர்வாகம் அனைத்தையும் அம்பலப்படுத்தினார்.

உலகைச் சுற்றி தொகு

80 நாட்களில் உலகம் சுற்றி வரும் பணியை ஏற்று‍ புறப்பட்டார். மிகத் திறமையாக செயல்பட்டு‍ நீராவிக் கப்பல்கள், ரயில்கள் மூலம் 72 நாட்களிலேயே உலகம் சுற்றி திரும்பினார். செய்திகளும் அனுப்பினார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. Bill DeMain. "Ten Days in a Madhouse: The Woman Who Got Herself Committed". mental floss. பார்க்கப்பட்ட நாள் 2010-05-10.
  2. "அந்த நாள் ஞாபகம் 1889 நவம்பர் 14", தி இந்து‍ (தமிழ்), p. 2, நவம்பர் 14 {{citation}}: |access-date= requires |url= (help); Check date values in: |date= and |year= / |date= mismatch (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெல்லி_பிளை&oldid=3577669" இலிருந்து மீள்விக்கப்பட்டது