நேவார் மக்கள்

நேவார் மக்கள் அல்லது நேவா மக்கள் (Newar or Newah) நேபால் பாசா: नेवा:)[2]நேபாள நாட்டின் காட்மாண்டு சமவெளியில் வரலாற்றுக் காலம் முதல் வாழும் மக்கள் ஆவார்.[3]இந்தோ ஆரிய மக்களான நேவாரிகள் மற்றும் திபெத்தோ-பர்மிய மக்கள், தங்களுக்கென தனி மொழி மற்றும் பண்பாட்டுக் கூறுகள் கொண்டிருந்தனர். நேவாரி மொழி மற்றும் திபெத்தோ-பர்மிய மொழிகள் பேசிய நேவாரி மக்கள் இந்து சமயம் மற்றும் பௌத்த சமயங்களை கடைப்பிடித்தனர்.[4] பண்டைய பரத கண்டத்தின் இந்து சமயத்தவர்கள் போன்று, நேவார் இந்து சமய மக்களும், வர்ணாசிரம வாழ்க்கை முறையை கடைப்பிடிக்கின்றனர்.[5] நேவார் மக்கள், தங்கள் முன்னோர்களின் பழக்க வழக்கங்கள், பண்பாடு மற்றும் நாகரீகத்தைத் தொடர்ந்து கடைபிடித்து வாழ்கின்றனர்.[6][7]

நேவார் மக்கள்
ஒரு நேவார் பெண்
மொத்த மக்கள்தொகை
1,321,933[1]
(நேபாள மக்கள் தொகையில் 5%)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
நேபாளம், இந்தியா
மொழி(கள்)
நேவார் மொழி, நேபால் பாசா
சமயங்கள்
நேபாள இந்து மற்றும் பௌத்தம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
இந்தோ ஆரிய மக்கள் , திபெத்தோ-பர்மிய மக்கள், நேபாள் மண்டல மக்கள்

வேத கால லிச்சாவி மற்றும் மல்ல நாட்டுப் பகுதிகளிலிருந்து நேபாளத்தின் காட்மாண்டு சமவெளிகளில் குடிபெயர்ந்த நேவாரி மக்கள் ஆரியர்களின் மொழியையும், பண்பாட்டையும் கொண்டிருந்தனர். [3] நேவாரிகள் ஆட்சி செய்த நேவார் மண்டலம், 1768இல் கோர்க்கா நாட்டவரால் வெல்லப்பட்டது.[8][9]

தோற்றம் தொகு

 
சுயம்புநாதர் கோயில், காட்மாண்டு
 
நய்யதபோலா கோயில், பக்தபூர் நகர சதுக்கம்
 
பதான் அரண்மனை சதுக்கத்தில் ஒரு சிலை

நேபாளம், நேவார், நேவால் மற்றும் நேபார் எனும் சொற்கள் உச்சரிப்பில் வேறுபட்டாலும், ஒரே பொருளைக் குறிக்கும். நேபாள மொழி சமசுகிருத மொழியை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் நேவாரி மொழி பிராகிருத மொழியை அடிப்படையாகக் கொண்டதாகும்.[10]

நேவார் எனும் சொல்லிற்கு நேபாள நாட்டின் மண்ணின் மைந்தர்கள் எனப்பொருள் என்பதை 1654-இல் காத்மாண்டில் கிடைத்த கல்வெட்டுக் குறிப்பினால் அறியப்படுகிறது.[11] 1721-இல் நேபாளத்தில் பயணம் செய்த இத்தாலிய இயேசு சபையைச் சேர்ந்த கிறித்துவ மதப்பிரசாரகர் இப்போலித்தோ தேசிதேரி என்பவர், நேவாரிகளை நேபாள நாட்டின் பழங்குடி மக்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.[12]

 
பக்தப்பூர் நகர சதுக்கத்தின் தங்க வாசல் கதவு

சமயம் தொகு

 
பசுபதிநாத் கோவில், காட்மாண்டு, நேபாளம்
 
வைரோசனா புத்தரின் சிலை, காத்மாண்டு
 
பௌத்த சமய தேவதை, மஞ்சுஸ்ரீ

2001ஆம் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நேவாரி மக்களில் 84.13 விழுக்காட்டினர் இந்துக்களாகவும், 15.31 விழுக்காட்டினர் பௌத்த சமயத்தவர்களாகவும் இருந்தனர். மிகக் குறைந்த அளவு நேவாரி மக்கள் கிறித்தவ, இசுலாமிய சமயங்களைப் பயில்கின்றனர். பதான் நகரத்தில் அசோகர், நான்கு தூபிகள் நிறுவியுள்ளார். மகர், ராய், லிம்பு, குரூங் மக்களைப் போன்று நேவாரிகள் நேபாள மண்ணின் மைந்தர்கள் ஆவார்.

மொழி தொகு

நேவாரி மக்கள் தாய் மொழியான நேவாரி மொழியுடன் நேபால் பாசாவும் அறிந்துள்ளனர்.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Census of Nepal, 2011. https://books.google.co.in/books?id=3LffAAAAMAAJ. 
  2. "Newar"
  3. 3.0 3.1 von Furer-Haimendorf, Christoph (1956). "Elements of Newar Social Structure". Journal of the Royal Anthropological Institute (Royal Anthropological Institute of Great Britain and Ireland) 86: 15–38. doi:10.2307/2843991.  Page 15.
  4. Levy, Robert I. (1991). "Nepal, the Kathmandu Valley, and Some History". Mesocosm: Hinduism and the Organization of a Traditional Newar City in Nepal. University of California Press. p. 34. பார்க்கப்பட்ட நாள் 22 May 2011.
  5. Gellner, David N. (1986). "Language, Caste, Religion and Territory: Newar Identity Ancient and Modern". European Journal of Sociology. http://journals.cambridge.org/action/displayAbstract?fromPage=online&aid=5461620. பார்த்த நாள்: 2 May 2011. 
  6. Tree, Isabella. "Living Goddesses of Nepal". www.nationalgeographic.com. National Geographic. 2011-ஆம் ஆண்டு நேபாள மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி நேவாரி மக்கள் தொகை 13,21,933-ஆக உள்ளது. இது நேபாளத்தின் மொத்த மக்கள் தொகையில் ஐந்து விழுக்காடு ஆகும்.
  7. Census of Nepal, 2011. https://books.google.co.in/books?id=3LffAAAAMAAJ. 
  8. Waller, Derek J. (2004). The Pundits: British Exploration Of Tibet And Central Asia. University Press of Kentucky. பக். 171. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0813191003. 
  9. Lewis, Todd T.; Tuladhar, Subarna Man (2009). Sugata Saurabha An Epic Poem from Nepal on the Life of the Buddha by Chittadhar Hridaya. Oxford University Press. பக். 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0199712014. 
  10. Malla, Kamal P. "Nepala: Archaeology of the Word". பார்க்கப்பட்ட நாள் 5 May 2011. Page 7.
  11. "The Newars". Archived from the original on 17 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 5 May 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  12. Desideri, Ippolito and Sweet, Michael Jay (2010). Mission to Tibet: The Extraordinary Eighteenth-Century Account of Father Ippolito Desideri, S.J.. Wisdom Publications. ISBN 978-0861716760. Page 463.

மேலும் படிக்க தொகு

  • Bista, Dor Bahadur (2004). People of Nepal. Kathmandu: Ratna Pustak Bhandar.
  • Encyclopædia Britannica (2011). Newar.
  • Kayastha, Chhatra Bahadur (2003). Nepal Sanskriti: Samanyajnan. Nepal Sanskriti. ISBN 99933-34-84-7.

Toffin, Gérard, "Newar Society", Kathmandu, Socia Science Baha/Himal Books, 2009.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேவார்_மக்கள்&oldid=3886349" இலிருந்து மீள்விக்கப்பட்டது