பகலவர்கள் அல்லது பஹலவர்கள் (Pahlavas) பண்டைய பாரசீக இன மக்கள் ஆவர். பகலவர்கள் பாரசீகத்திலிருந்து பரத கண்டத்தின் மேற்கு, வடமேற்கு, தென் மேற்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் குடியேறியவர்கள். பகலவர்கள் குறித்தான செய்திகள் புராணங்கள், இராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் மற்றும் மனுதரும சாஸ்திரத்தின் மூலம் அறியப்படுகிறது.

பெயர் பொருத்தத்தின் காரணமாக பகலவர்களின் வழித்தோண்றல்களே பல்லவர்கள் எனச் சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். [1]

பார்த்தியாவின் பலூவி மொழி பேசியவர்களை பகலவர்கள் எனக்குறிப்பதாக வரலாற்று ஆராய்வாளர் பி. கார்னெஜி கூறுகிறார். [2]

கி மு நான்காம் நூற்றாண்டின் சமஸ்கிருத மொழியின் இலக்கண ஆசிரியர் பாணினியின் கூற்றுப்படி, பகலவர்கள் சக - பார்த்தியா வழித்தோன்றல்கள் எனத் தெரியவருகிறது.[3]

இலக்கியக் குறிப்புகள் தொகு

புராணக் குறிப்புகள் தொகு

பகலவர் இன மக்கள் குறித்து வாயு புராணம், பிரம்மாண்ட புராணம், மார்கண்டேய புராணம், மச்ச புராணம், வாமண புராணம் முதலியவைகளில் குறிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமேற்கு, மேற்கு பரத கண்டத்தின் காந்தாரரகள், காம்போஜர்கள், சீனர்கள், பரதவர்கள், பாஹ்லீகர்கள் போன்று பண்டைய அரச குலங்களில் ஒன்றாக பகவலர்கள் கருதப்பட்டனர். மர்கண்டேய புராணத்தின் 58-வது அத்தியாயத்தில் பகலவர்கள் வாழ்ந்த பகுதிகளாக சிந்து, சௌராட்டிர நாடு, சௌவீரதேசம் குறிக்கப்பட்டுள்ளது.

கி பி ஆறாம் நூற்றாண்டின் வராகமிகிரர் எழுதிய பிரகத்சம்ஹிதா எனும் நூலில் பகலவர்கள் மற்றும் காம்போஜர்கள் குஜராத் பகுதிகளை ஆண்டதாக குறிப்பிடுகிறார்.[4]

மச்ச புராணம் மற்றும் வாயு புராணத்தின் படி நடு ஆசியாவின் ஆமு தாரியா ஆறு பாயுமிடங்களில் பகலவரகள், சகர்கள் முதலிய இனக் குழுக்கள் வாழ்ந்ததாக கூறுகிறது.[5]

பாஞ்ச கணங்கள் தொகு

புராணங்களில் சத்திரியர்களான பகலவர்களுடன் காம்போஜர்கள், சகர்கள், யவனர், பரதர்கள் எனும் ஐந்து இனக்குழுக்களைச் சேர்த்து பாஞ்ச கணங்கள் என்று குறிப்பிடுகிறது. இந்த பாஞ்ச கண சத்திரியர்கள் யது குல ஹேஹேயர்களின் இராணுவக் கூட்டாளிகள் என்றும் குறிப்பிடுகிறது. பாஞ்ச கண சத்திரியர்களின் உதவியுடன் ஹேஹேயர்கள் கோசல நாட்டின் மன்னர் பாகுவை வீழ்த்தியதாகவும், பின்னர் பாகுவின் மகன் சகரன் வலுப்பெற்று ஹேஹேயர்களையும், பாஞ்ச கண சத்திரியர்களையும் வென்று, பாஞ்ச கண சத்திரியர்களை சத்திரிய நிலையிலிருந்து மிலேச்ச நிலைக்கு சமூகத் தரம் தாழ்த்தினார் என புராணங்கள் கூறுகிறது.

இராமயணத்தில் பகவலவர்கள் தொகு

பகலவர்கள், கிராதர்கள், மிலேச்சர், யவனர், காம்போஜர்கள் மற்றும் சகர்களை, இராமாயணத்தின் பால காண்டத்தில், விசுவாமித்திரருக்கு எதிரான போரில் ஈடுபட்ட வசிஷ்டரின் படைக் குழுவினர் என கூறுகிறது.[6]

மகாபாரதத்தில் தொகு

ஆதி பருவம் தொகு

பாண்டவர்களில் நான்காமவரான நகுலன் பரத கண்டத்தின் மேற்கில் படையெடுத்து சென்று பகலவர்களை வென்றதாகவும்; தருமர் செய்த இராஜசூய யாகத்தில் பகலவ மன்னர்கள் கலந்து கொண்டதாகவும் மகாபாரதத்தின் ஆதி பருவத்தில் குறிப்புகள் உள்ளது.

மேலும் பகலவர்களை சகர்கள், யவனர்கள், காம்போஜர்கள், காந்தாரர்கள், சபரர்கள், பார்பரர்கள் போன்று, வடக்கு மற்றும் வடமேற்கு இந்தியப் பகுதிகளின் பழங்குடி மக்கள் எனக் கூறுகிறது.

உத்தியோகப் பருவம் தொகு

மகாபாரதத்தின் உத்யோக பருவத்தில் பகலவர்கள் மேற்கு இந்தியாவின் சௌராஷ்டிரா பகுதிகளில் வாழ்ந்தவர்கள் எனக் கூறுகிறது.

குருச்சேத்திரப் போரில் தொகு

குருச்சேத்திரப் போரில் சகர்கள், கிராதர்கள், யவனர் முதலானர்களுடன் பகலவர்களும் கிருபாச்சாரியருடன் இணைந்து போர்க்களத்தின் வடக்கில் பாண்டவர் படையணிகளுக்கு எதிராக போரிட்டனர். [7][8]

மனுதர்ம சாத்திரத்தில் தொகு

யவனர்கள், சகர்கள், காம்போஜர்கள் போன்று உயர்ந்த சத்திரிய நிலையிலிருந்த பகலவர்கள், பின்னர் சத்திரிய தருமத்திற்கு புறம்பாக செயல்பட்டதால், மிலேச்ச நிலைக்கு தள்ளப்பட்டனர் என மனுதரும சாத்திரம் குறிப்பிடுகிறது.[9]

நவீன வரலாற்று குறிப்புகள் தொகு

ஈரான் நாட்டின் பேரரசர் முகம்மத் ரிசா ஷா பஹ்லவி பகலவி வம்சத்தவத்தின் இரண்டாம் மன்னரும், இறுதிப் பேரரசரும் ஆவார். 1979 ஆண்டின் ஈரானியப் புரட்சியின் போது இவரது ஆட்சி வீழ்ந்ததுடன், ஈரானில் மன்னராட்சி ஒழிககப்பட்டது.[10]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. The Pallavas and the Pahlavas
  2. The Geographical Data in Early Puranas, a Critical Studies, 1972, p 135, Dr M. R. Singh; Sacred Books of the East, XXV, Intr. p cxv; Rapson, Coins of Ancient India, p 37, n.2.
  3. India as Known to Panini, 1954, p 444, Dr V. S. Agarwala.
  4. See also: Geographical Data in the Early Puranas, 1972, p 134-135, Dr M. R. Singh.
  5. Vayu Purana I.58.78-83.
  6. Ramayana, 55/2-3
  7. Mahabharata Bhishma Parva, Ch. 20.
  8. Since the armies of the Sakas, Yavanas, Tukharas, Khasas, Daradas had fought under the supreme command of Sudakshin Kamboja (See ref: The Nations of India at the Battle Between the Pandavas and Kauravas, Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland, 1908, pp 313, 331, Dr F. E. Pargiter, (Royal Asiatic Society of Great Britain and Ireland), it is highly likely that the Pahlavas too fought under Sudakshina Kamboj.
  9. Manu Samhita, X.43-44.
  10. Pahlavi Dynasty

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகலவர்கள்&oldid=3284682" இலிருந்து மீள்விக்கப்பட்டது