பக்த கௌரி 1941-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். நோதானி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். டி. சுப்பையா, யு. ஆர். ஜீவரத்தினம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

பக்த கௌரி
இயக்கம்எஸ். நோதானி
தயாரிப்புடி. ஆர். சுந்தரம்
மாடர்ன் தியேட்டர்ஸ்
நடிப்புஎஸ். டி. சுப்பையா
நாகர்கோவில் கே. மகாதேவன்
கே. கே. பெருமாள்
காளி என். ரத்னம்
எல். நாராயணராவ்
யு. ஆர். ஜீவரத்தினம்
பி. ஏ. ராஜாமணி
பி. எஸ். சிவபாக்கியம்
வெளியீடுஏப்ரல் 5, 1941
நீளம்18700 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

யு. ஆர். ஜீவரத்தினம் முதன் முதலில் இத்திரைப்படம் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் அவர் பாடிய தெருவில் வாராண்டி, வேலன் தேடி வாராண்டி பாடல் இவருக்குப் புகழ் பெற்றுக் கொடுத்தது.

கதைச் சுருக்கம் தொகு

இத்திரைப்படத்தின் கதை திருவிளையாடல் புராணத்தில் வரும் ஒரு பகுதியை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. சிவனும் விஷ்ணுவும் ஒருவரா அல்லது வேறு வேறா என்பதே கதையின் கரு. இது குறித்து பூலோகத்தில் பல வாக்குவாதங்கள் நிகழ்ந்தன. நாரத முனிவரின் படி இருவரும் ஒருவரே. நாரதர் இவ்வாக்குவாதம் குறித்து சிவனுக்குத் தெரிவிக்கிறார். இதனை நிரூபிக்க, சைவத் தம்பதிகள் இருவரையும் (கே. கே. பெருமாள், ராஜாமணி) ஆசீர்வதிக்கிறார். இவர்களது மகள் (ஜீவரத்தினம்) வைணவ இளைஞர் ஒருவரை (எஸ். டி. சுப்பையா) சந்தித்து மணந்து கொள்கிறாள். அவளது மாமியார் (சிவபாக்கியம்) இவர்களது திருமணத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறாள். பல இன்னல்களுக்கு மத்தியில் இருவரும் ஒன்றிணைந்து சிவனும் விஷ்ணுவும் ஒருவரே என நிரூபிக்கின்றனர்.

நடிகர்கள் தொகு

பக்த கௌரி நடிகர்கள்
நடிகர் பாத்திரம்
எஸ். டி. சுப்பையா நரசிம்மன்
நாகர்கோவில் கே. மகாதேவன் -
கே. கே. பெருமாள் விருபாக்கன்
எல். நாராயணராவ் குப்பண்ணா
சி. வி. வி. பந்துலு பரமசிவன்
சேலம் சுந்தர சாஸ்திரி அனந்தாச்சாரி
காளி என். ரத்தினம் அம்பட்டச் சின்னான்
டி. எஸ். துரைராஜ் திருவேங்கடத்தான்
எம். ஆர். சுவாமிநாதன் பண்டாரம்
எம். வி. ஏழுமலை வித்தைக்காரன்

இவர்களுடன் சேதுமாதவன், சந்தானம் ஆகியோரும் நடித்தனர்.

நடிகைகள் தொகு

பக்த கௌரி நடிகைகள்
நடிகை பாத்திரம்
யூ. ஆர். ஜீவரத்தினம் கௌரி
பி. எஸ். சிவபாக்கியம் ஆண்டாள்
பி. ஏ. ராஜாமணி சுபவரதை
சி. டி. ராஜகாந்தம் பகவதி
டி. ஆர். சுப்புலட்சுமி ரமணி
சி. கே. கமலம் கமலம்

இவர்களுடன் பேபி ஜெயலட்சுமி, லீலா ஆகியோரும் நடித்தனர்.

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்துக்கான பாடல்களை யாத்தவர் எஸ். வேலுசாமி கவி.

இசை வழங்கிய வாத்தியக் குழுவினர்
கலைஞர் இசைக்கருவி
டி.எம்.இப்ராகீம் ஆர்கன், பியானோ
பி. ரெங்கையா நாயுடு கிளாரினெட்
எம். கே. நடராஜா பாகவதர் பிடில்
எஸ். ஆர். மருத பிள்ளை புல்லாங்குழல்
கே. ஆர். ஹரிஹர ஐயர் ஜலதரங்கம்
எஸ். அப்துல் காதர் சாரங்கி
டி. பி. சின்னையா தபேலா
டி. ஆர். ராவ் கடம்
எஸ். பி. பொன்ராஜ் உடோபோன்
பக்த கௌரி பாடல்கள்
எண். பாடல் பாடியோர் மெட்டு-இராகம்-தாளம்
1. ஈசா - பாபவிநாசா பி. ஏ. ராஜாமணி -
2. கண்மணியே கனியே பி. ஏ. ராஜாமணி, லீலா -
3. ஏற்றுக் கொள்வீர் தேவா தேவா லீலா, யு. ஆர். ஜீவரத்தினம் -
4. மதமெனும் பேதம் வீண் அபவாதம் எஸ். டி. சுப்பையா -
5. வாராயோ மாமதி வதன சிங்காரி பேபி ஜெயலட்சுமி, யூ. ஆர். ஜீவரத்தினம் -
6. தெருவில் வாராண்டி வேலன் யூ. ஆர். ஜீவரத்தினம், குழுவினர் துதினியாதிவானி மெட்டு
7. சீதையும் ராமரும் போலே டி. எஸ். துரைராஜ், வேலம்மா -
8. போதும் போதும் ஜன்மமிதே யூ. ஆர். ஜீவரத்தினம் -
9. என்ன சொல்வேன் நான் அந்தப் பேயாண்டியை பி. எஸ். சிவபாக்கியம் -
10. பொருத்து நான் பார்த்துப் பார்த்து கமலம், டி. ஆர். சுப்புலட்சுமி -
11. மாயா உலகை நீ மதியாதே எஸ். டி. சுப்பையா ராகமாலிகை
12. நான்முகன் படைப்பில் யாவரும் சமமே எஸ். டி. சுப்பையா கரகரப்பிரியா
13. காணேன் காணேன் காணேன் பி. எஸ். சிவபாக்கியம் சோஜா மெட்டு
14. நானும் பிச்சைக்காரன் தானுங்கோ எம். ஆர். சுவாமிநாதன், டி. எஸ். துரைராஜ் -
15. ஆதார முந்தன் திவ்யபாதமே யூ. ஆர். ஜீவரத்தினம் கல்யாணி
16. தாயை ஏசல் என்னாளுமே எஸ். டி. சுப்பையா, யூ. ஆர். ஜீவரத்தினம் -
17. நான் உனதடிமை அன்றோ யூ. ஆர். ஜீவரத்தினம் அரிகாம்போதி-ஆதி
18. குடித்தன வேலையிலே அடிக்கடி பி. எஸ். சிவபாக்கியம், எல். நாராயணராவ் -
19. கண்டு கொண்டேன் ஆகா என்ன சொல்வேன் யூ. ஆர். ஜீவரத்தினம் -
20. மருமாளை யேநீங்கோ மனசார பூஜியுங்கோ பி. எஸ். சிவபாக்கியம், எல். நாராயணராவ் -
21. கண்டகாலம் முதல்கொண்டு காளி என். ரத்தினம், சி. டி. ராஜகாந்தம் -
22. தீராவிசாரம் - ஓயாதபாரம் சி. வி. வி. பந்துலு ஆவோமுராரி மெட்டு
23. எங்கேதான் சென்றிடுவேன் யூ. ஆர். ஜீவரத்தினம் நீலாம்புரி-சாபு
24. தேவா இனியுன் சேவடி தாரீர் பி. எஸ். சிவபாக்கியம், குழுவினர் -

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்த_கௌரி&oldid=3733845" இலிருந்து மீள்விக்கப்பட்டது