பங்கஜ் திரிபாதி

இந்திய நடிகர்

பங்கஜ் திரிபாதி (Pankaj Tripathi) ஒரு இந்திய பாலிவுட் நடிகர் ஆவார். இவர் 2004 ஆம் ஆண்டில் ரன் என்ற திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கி தற்போது வரை 40 திரைப்படங்களிலும், 60 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி இசைத் தொடர்களிலும் நடித்துள்ளார்.[1]  திரிபாதி 2012 ஆம் ஆண்டில் கேங்ஸ் ஆப் வாசிப்பூர் என்ற படத் தொடரில் நடிக்கும் போது புகழின் உச்சிக்குச் சென்றார்.[2] மாசாண், நில் பேட்டி சன்னதா, பாரெய்லி கி பர்பி, பர்கி ரிடர்ன்ஸ் மற்றும் நியூட்டன் (திரைப்படம்) ஆகியவற்றில் நடித்துள்ளார்.

பங்கஜ் திரிபாதி

தொடக்க வாழ்க்கை தொகு

இவர், பீகார் மாநிலத்தில் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் பெல்சாண்ட் எனும் கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பண்டிட் பனாரஸ் திரிபாதி மற்றும் ஹேமவன்டி தேவி ஆகியோருக்கு பிறந்தார். தனது 11 ஆம் வகுப்பு வரை விவசாயியாகவே வாழ்ந்தார். கிராமத்தில், விழாக்காலங்களில் நாடகங்களில் பெண் கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். இவரது கூற்றின்படி கிராமத்து மக்களால் வழங்கப்பட்ட பாராட்டும் அங்கீகாரமுமே நடிப்பைத் தனது தொழிலாகத் தேர்ந்தெடுக்கக் காரணமாய் அமைந்தது.[3] பின்னர் இவர் உயர்நிலைப்பள்ளி முடித்த பிறகு பாட்னாவிற்குச் சென்றார். தனது நாடகக்கலையை கற்றுக்கொண்ட இடத்தில் கல்லுாரி அரசியலில் அகில பாரத வித்தியார்த்தி பரிசத் அமைப்பில் உறுப்பினராக செயல் மிக்க நிலையில் இருந்தார். தான் நடிப்புத் தொழிலில் தோல்வியைச் சந்திக்க நேரிடுமோ என்ற பயனத்தில் ஓட்டல் தொழிலையும் கற்றுக் கொண்டார். பாட்னாவில் 7 ஆண்டுகள் இருந்த பிறகு இவர் புதுதில்லிக்குச் சென்று தேசிய நாடகப் பள்ளியில் சேர்ந்தார். 2004 ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை முடித்தார்.[4][5]

தொழில் வாழ்க்கை தொகு

தேசிய நாடகப் பள்ளியில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்த பிறகு, திரிபாதி மும்பைக்கு 2004 ஆம் ஆண்டில் வந்தார். அதே ஆண்டில் ரன் (2004) திரைப்படத்தில் நடித்தார். இருப்பினும், இதன் பிறகு எட்டு ஆண்டுகள் கழித்து 2012 ஆம் ஆண்டில் கேங்ஸ் ஆப் வாசேய்புர் என்ற திரைப்படத்தில் நடித்ததற்குப் பிறகே, பரவலாக அங்கீகரிக்கப்பட்டு புகழடைந்தார். சுல்தான் குரேசி என்ற கறிக்கடைக்காரர் வேடத்திற்காக இவரைத் தேர்வு செய்வதற்கான நேர்காணல் 8 மணி நேர அளவிற்கு நடந்தது.[6][7] 2008 ஆம் ஆண்டில் அவர் பாகுபலி தொலைக்காட்சித் தொடருக்காகTவும் பவுடர் என்ற தொலைக்காட்சித் தொடரிலும் சோனி தொலைக்காட்சிக்க பணிபுரிந்தார். அவரது தொடக்க கால தொழில் வாழ்வில், அவர் பெரும்பாலும் தாதா அல்லது தாதாவுக்கு நிகரான எதிர்மறைக் கதாபாத்திரங்களிலேயே நடித்தார்.[8][9] பின்னர் பலதரப்பட்ட கதாபாத்திரங்களிலும் நடித்து அதற்காக திறனாய்வு அடிப்படையிலான பாராட்டுதல்களைப் பெற்றார்.[10] முன்னணி கதாபாத்திரமாக அவர் நடித்த திரைப்படம் 2017 இல் வெளிவந்த குர்கான் ஆகும். 2017ஆம் ஆண்டில் அவர் நடித்த மற்றொரு திரைப்படமான நியூட்டன் சிறந்த அந்நிய மொழித் திரைப்படத்திற்கான அகாதமி விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்ட படமாகும்.[11] தமிழ் திரைப்படத்துறையில் திரிபாதியின் அறிமுகத் திரைப்படமாக ரஜினிகாந்த் நடித்து வெளிவர உள்ள காலா அமைகிறது.[12]

திருமண வாழ்க்கை தொகு

2004 ஆம் ஆண்டு சனவரி 15 ஆம் நாள் அவர் மிருதுளா என்பவரை மணந்தார். அவருக்கு மகள் ஒருவர் உண்டு.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "कभी गेट पर रोक देते थे गार्ड, आज इस एक्टर की फिल्म पहुंची ऑस्कर" (in hi). Dainik Bhaskar. 26 September 2017 இம் மூலத்தில் இருந்து 22 ஜூன் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190622040912/https://www.bhaskar.com/news/c-268-bollywood-actor-pankaj-tripathi-life-story-pt0171-NOR.html. பார்த்த நாள்: 29 September 2017. 
  2. Jamkhandikar, Shilpa (20 September 2017). "Q&A: Pankaj Tripathi on surviving in frog-in-the-well Bollywood" (in en-IN). Reuters. https://in.reuters.com/article/interview-pankaj-tripathi/qa-pankaj-tripathi-on-surviving-in-frog-in-the-well-bollywood-idINKCN1BV0YL. பார்த்த நாள்: 29 September 2017. 
  3. 3.0 3.1 "Oscar में इस बिहारी एक्टर की मूवी, अभी भी मिट्टी के चूल्हे पर बनता है खाना" (in hi). dainikbhaskar. 22 September 2017. https://www.bhaskar.com/news/BIH-PAT-HMU-pankaj-tripathi-newton-nominated-for-oscar-5702111-PHO.html. பார்த்த நாள்: 29 September 2017. 
  4. Danish Raza (5 August 2017). "Pankaj Tripathi, the scene-stealer of ‘Gurgaon’" (in en). Hindustan Times. http://www.hindustantimes.com/bollywood/pankaj-tripathi-the-scene-stealer-of-gurgaon/story-47lVowafdXhQJKUQPbelJJ.html. பார்த்த நாள்: 29 September 2017. 
  5. Ramnath, Nandini (20 April 2016). "The Pankaj Tripathi interview: ‘The audience should be in the same room as the character’". Scroll.in. https://thereel.scroll.in/806894/the-pankaj-tripathi-interview-the-audience-should-be-in-the-same-room-as-the-character. பார்த்த நாள்: 30 September 2017. 
  6. Joshi, Namrata (19 September 2017). "Acting is like a journey into unexplored terrain, says Pankaj Tripathi" (in en-IN). The Hindu. http://www.thehindu.com/entertainment/movies/acting-is-like-a-journey-into-unexplored-terrain/article19715919.ece. பார்த்த நாள்: 29 September 2017. 
  7. "Kaala Karikaalan actor Pankaj Tripathi: Gurgaon is a very special film for me". The Indian Express. 8 July 2017. http://indianexpress.com/article/entertainment/bollywood/gangs-of-wasseypur-actor-pankaj-tripathi-gurgaon-is-a-very-special-film-for-me-4741452/. பார்த்த நாள்: 1 October 2017. 
  8. Kaushal, Ruchi (28 January 2017). "'Nil Battey Sannata' is my story: Pankaj Tripathi - Times of India". The Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Nil-Battey-Sannata-is-my-story-Pankaj-Tripathi/articleshow/51940287.cms. பார்த்த நாள்: 29 September 2017. 
  9. "Don’t like people appreciating my negative roles: Pankaj Tripathi". The Indian Express. 30 April 2016. http://indianexpress.com/article/entertainment/bollywood/dont-like-people-appreciating-my-negative-roles-pankaj-tripathi-2777706/. பார்த்த நாள்: 1 October 2017. 
  10. Rishabh Suri (20 September 2017). "Bareilly Ki Barfi actor Pankaj Tripathi: Cinema is not just a medium of entertainment" (in en). Hindustan Times. http://www.hindustantimes.com/bollywood/bareilly-ki-barfi-actor-pankaj-tripathi-cinema-is-not-just-a-medium-of-entertainment/story-nGBi1vJuJmGQiw2kZ9OlAI.html. பார்த்த நாள்: 1 October 2017. 
  11. "‘Newton’ is India’s official entry to Oscars 2018" (in en-IN). The Hindu. 22 September 2017. http://www.thehindu.com/entertainment/movies/newton-indias-official-entry-for-the-oscars/article19734480.ece. பார்த்த நாள்: 30 September 2017. 
  12. "Rajini is my idol, working with him has been so enriching: Pankaj Tripathi on ‘Kaala’". The News Minute. 22 September 2017. http://www.thenewsminute.com/article/rajini-my-idol-working-him-has-been-so-enriching-pankaj-tripathi-kaala-68846. பார்த்த நாள்: 1 October 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பங்கஜ்_திரிபாதி&oldid=3758338" இலிருந்து மீள்விக்கப்பட்டது