பங்கனப்பள்ளி சமஸ்தானம்

பங்கனப்பள்ளி இராச்சியம் அல்லது பங்கனப்பள்ளி சமஸ்தானம் (Banganapalle State) பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் கீழ் இருந்த 565 சுதேச சமஸ்தானங்களில் இதுவும் ஒன்றாகும். பங்கனப்பள்ளி இராச்சியம், தற்கால ஆந்திராவின் கர்நூல் மாவட்டத்தில் 1665-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதன் ஆட்சியாளர்கள் சியா பிரிவு இசுலாமியர்கள் ஆவார். 712 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டிருந்த பங்கனப்பள்ளி இராச்சியத்தின் 1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகை 32,279 ஆகும். இங்கு விளையும் பங்கனப்பள்ளி மாம்பழம் அதிக ருசி கொண்டதுடன், புவிசார் குறியீடும் பெற்றுள்ளது.

பங்கனப்பள்ளி சமஸ்தானம்
బనగానపల్లె
பிரித்தானிய இந்தியா
1665–1948

Flag of பங்கனப்பள்ளி

கொடி

வரலாறு
 •  நிறுவப்பட்டது 1665
 •  இந்திய விடுதலை|சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் 1948
பரப்பு
 •  1901 712 km2 (275 sq mi)
Population
 •  1901 32,279 
மக்கள்தொகை அடர்த்தி Expression error: Unrecognized punctuation character ",". /km2  (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi)
தற்காலத்தில் அங்கம் கர்நூல் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
சென்னை மாகாணத்தின் வரைபடத்தில் பங்கனப்பள்ளி சமஸ்தானத்தின் அமைவிடம், ஆண்டு 1913

வரலாறு தொகு

1601-இல் பங்கனப்பள்ளி இராச்சிய மன்னர் இராஜா நந்த சக்கரவர்த்தியை, பிஜப்பூர் சுல்தான் இஸ்மாயில் அடில் ஷா வென்று, பிஜப்பூர் சுல்தானகத்துடன் இணைத்துக் கொண்டார். ஆப்பிரிக்க வம்சா வழி படைத்தலைவராக சித்திக் சம்பாலை பங்கனப்பள்ளி இராச்சியத்தின் நிர்வாகியாக பிஜப்பூர் சுல்தான் நியமித்தார். 1665-இல் பிஜப்பூர் சுல்தான் பங்கனப்பள்ளி இராச்சியத்தையும், அதன் சுற்றுப்புறப் பகுதிகளையும் தனது படைத்தலைவரான முகமது பெக் ரோஸ்பாஹானிக்கு பரிசாக வழங்கினார்.

1686-இல் முகலாயப் பேரரசு பிஜப்பூர் சுல்தானகத்தை வென்றது. முகலாயப் படைத்தலைவர் மூபாரிஸ் கானின் உறவினரான பைசல் அலி பங்கனப்பள்ளி இராச்சியத்தின் சிற்றரசர் ஆனார். முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் இந்த இந்த இராச்சியம் ஐதராபாத் இராச்சியத்தின் கீழ் ஒரு சிற்றரசாக விளங்கியது.

பின்னர் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டு வந்த இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் கீழ் இந்த இராச்சியம் 1818-ஆம் ஆண்டு முதல் பிரித்தானிய இந்தியா அரசுக்கு கட்டுப்பட்டு, ஆண்டுதோறும் திறை செலுத்தும் சமஸ்தானமானது.[1][2][3]

15 ஆகஸ்டு 1947 அன்று இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்த இராச்சியம் அரசியல்சட்ட முடியாட்சியாக 6 ஏப்ரல் 1949 வரை இருந்தது. பின்னர் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி 23 பிப்ரவரி 1948 அன்று இந்த சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.[4] 1956-ஆண்டின் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ், பங்கனப்பள்ளி சமஸ்தானம், தற்கால ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் கர்நூல் மாவட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது.

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. [WorldStatesmen - India Princely States K-Z
  2. http://www.thefreedictionary.com/Princely+state
  3. http://www.amazon.com/Indian-Princes-States-Cambridge-History/dp/0521267277
  4. "Banganapalle Princely State (9 gun salute)". Archived from the original on 1 April 2017. பார்க்கப்பட்ட நாள் 17 June 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பங்கனப்பள்ளி_சமஸ்தானம்&oldid=3711198" இலிருந்து மீள்விக்கப்பட்டது