பண்டா கடல்

இந்தோனேசியப் பகுதியில் உள்ள கடல்


பண்டா கடல் (Banda Sea), பசிபிக் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியின் நீட்சியாகும். தென்கிழக்கு ஆசியாவின் இந்தோனேசியா நாட்டின் மலுக்கு தீவுகளை பசிபிக் பெருங்கடலுடன் இணைக்கும் கடலாகும். பண்டா கடல், கிழக்கிலிருந்து மேற்காக 1,000 கிலோ மீட்டர் நீளமும், 500 கிமீ அகலமும் கொண்டது. [1] பண்டா கடல் பவளப் பாறைகளைக் கொண்டது.

பண்டா கடல்
பண்டா கடலின் இடதில் ரன் தீவும், வலதில் நய்லகா தீவும்
தென்கிழக்காசியாவில் அமைந்த பண்டா கடல்
ஆள்கூறுகள்6°S 127°E / 6°S 127°E / -6; 127
வகைகடல்
முதன்மை வெளியேற்றம்பசிபிக் பெருங்கடல், திமோர் கடல், மொலக்கா கடல், செரம் கடல்
அதிகபட்ச நீளம்1,000 km (620 mi)
அதிகபட்ச அகலம்500 km (310 mi)

பண்டா கடலை ஒட்டி, மேற்கே சுலாவெசி தீவும், கிழக்கில் திமோர் தீவும் மற்றும் பிற தீவுகளும் உள்ளது. மேலும் பண்டா கடலில் பண்டா தீவுக்கூட்டங்களும் உள்ளது.

பண்டா கடல் பரப்பின் அடியில் யுரேசியன், பசிபிக் மற்றும் இந்தோ-ஆஸ்திரேலியேசன் கண்டத் தட்டுகள் அடிக்கடி மோதிக் கொண்டதால், பண்டா கடலில் 1629, 1938 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டா_கடல்&oldid=2642287" இலிருந்து மீள்விக்கப்பட்டது