பண்டைய அசிரியா

பண்டைய அசிரியா (Early Period (Assyria) என்பது கிமு 2500 முதல் கிமு 2025 வரையிலான மெசொப்பொத்தேமியாவின் அசிரியர்களின் பண்பாட்டு வரலாற்றை குறிக்கும். இது அசிரிய மக்களின் நான்கு இராச்சியங்களில் முதலாவதாகும்.

பண்டைய அசிரியா
Aššūrāyu
c. கிமு 2500–c. கிமு 2025
கிமு 2500ல் பண்டைய அண்மைக் கிழக்கில் அசிரியாவின் வரைபடம்
கிமு 2500ல் பண்டைய அண்மைக் கிழக்கில் அசிரியாவின் வரைபடம்
தலைநகரம்அசூர்
பேசப்படும் மொழிகள்அக்காதியம், சுமேரிய மொழி
சமயம்
பண்டைய மெசபடோமிய சமயம்
அரசாங்கம்முடியாட்சி
மன்னர் 
• புளோரியுட் கிமு 2500
துடியா (முதல்)
• புளோரியுட், கிமு 2025
இல்லு-சுமா (இறுதி)
வரலாற்று சகாப்தம்வெண்கலக் காலம்
• தொடக்கம்
c. கிமு 2500
• முடிவு
c. கிமு 2025
முந்தையது
பின்னையது
[[பண்டைய மெசொப்பொத்தேமியாவின் அரச வம்ச காலம்]]
[[பழைய அசிரியப் பேரரசு]]
தற்போதைய பகுதிகள்

பழைய அசிரியப் பேரரசு (கிமு 2025 - 1378),, மத்திய அசிரியப் பேரரசு (கிமு 1392 - 934) மற்றும் புது அசிரியப் பேரரசு (கிமு 911 - 609) பிற மூன்று அசிரியப் பேரரசுகள் ஆகும்.

முதன் முதலாக அசிரியர்கள் கிமு 2500ல் மெசொப்பொத்தேமியாவின் அசூர் நகரத்தில் நகர இராச்சியத்தை நிறுவினர். பண்டைய அசிரிய மக்கள் கிழக்கு செமித்திய மொழியைப் பேசினர்.[1]

பெயர் காரணம் தொகு

பழைய அசிரியப் பேரரசு காலத்தில், அசிரியா எனும் பெயர், அசிரியர்கள் ஆண்ட அசூர் நகரத்தின் பெயரால் அழைக்கப்பட்டது. அசிரியர்கள் தாங்கள் வணங்கும் அசூர் எனும் காக்கும் கடவுளின் பெயரால் தங்கள் நகரத்திற்கு அசூர் எனப் பெயரிட்டனர்.

தோற்றம் தொகு

சுமேரியர்களின் அக்காடியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், அக்காடியப் பேரரசின் வடக்குப் பகுதிகளை அசிரியர்களும், தெற்குப் பகுதிகளை பாபிலோனியர்களும் கைப்பற்றி ஆண்டனர்.

பண்டைய அசிரியாவின் முதல் ஆட்சியாளன் துடியா கிமு 2450 முதல் கிமு 2450 வரை ஆண்டான். அவனுக்குப் பின் ஆதமு ஆண்டான்.[2] அசூர் நகர அரசு நிலை அடைவதற்கு முன், ஆதாமுக்குப் பின்னர் 13 மன்னர்கள் பண்டைய அசிரியாவை ஆண்டனர். இவ்வரசர்கள் நாடோடி வாழ்க்கையை மேற்கொண்டிருந்தனர்.

கிமு 2300ல் சர்கோர் அக்காத் எனும் மன்னர் மொசபடோமியாவில் அக்காதியம் மற்றும் சுமேரிய மொழி பேசும் மக்களை ஒன்றிணைத்து, அக்காடியப் பேரரசை (கிமு 2334 -2154) நிறுவினான்.[3]

புவியியல் தொகு

யூப்பிரடிஸ் மற்றும் டைகிரிசு ஆறுகள் இப்பகுதியை செழிப்பாக்குகிறது.

அசூர் நகரம் தொகு

தொல்லியல் அகழ்வாராய்ச்சி படி, அசிரியர்களின் தலைநகரமான அசூர, கிமு 2400 ஆண்டிற்கு முன்னர் நிறுவப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளது.

பண்டைய மெசபடோமியா நாகரீக காலத்தின் சிறந்த நகரமாக அசூர் விளங்கியது. இப்பகுதியின் இஸ்தர் கோயில் மற்றும் பழைய அரண்மனையில் தொல்லியல் அகழ்வாராய்ச்சி செய்கையில் அசூர் நகரத்தின் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.

மொழிகள் தொகு

பண்டைய அசிரியர்கள், செமிடிக் மொழியின் கிழக்கு வட்டார மொழியான அக்காதியம் மற்றும் சுமேரிய மொழிகளைப் பேசினர்.

சமயம் தொகு

 
அசிரியர்களின் கடவுள் ஆதாத்தின் சிலையை சுமந்தபடி அசிரியாவின் வீரர்கள்

பல கடவுட் கொள்கை கொண்ட பண்டைய அசிரியர்கள், தெய்வங்களின் தலைவரான அசூர் மற்றும் ஆதாத் தெய்வங்களை அதிகம் வணங்கினர்.

அசிரியப் பேரரசர்கள் தொகு

இதனையும் காண்க தொகு

அடிக்குறிப்புகள் தொகு

ஆதாரங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Georges Roux (1964), Ancient Iraq, pp. 161–191.
  2. Roux, Georges (1992). Ancient Iraq. Penguin Books Limited (published Aug 27, 1992). பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0140125238. https://archive.org/details/ancientiraq0000roux_h6g4. 
  3. Georges Roux - He united all the Akkadian and Sumerian speaking peoples of Mesopotamia under the (1964), Ancient Iraq, pp. 161–191.
  4. 4.0 4.1 4.2 4.3 Meissner, Bruno (1990). Reallexikon der Assyriologie. 6. Berlin: Walter de Gruyter. பக். 101–102. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3110100517. https://books.google.com/books?id=OIeiZaIo91IC&printsec=frontcover&cad=0#PPA101,M1. 
  5. 5.0 5.1 Hildegard Levy, "Assyria c. 2600-1816 B.C.", Cambridge Ancient History. Volume 1, Part 2: Early History of the Middle East, pp. 729-770 and pp. 745-746.
  6. Hamilton, Victor (1995). The Book of Genesis, Chapters 1 - 17. Wm. B. Eerdmans Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780802825216. 
  7. Rowton, M.B. (1970). The Cambridge Ancient History. 1.1. Cambridge University Press. பக். 202–204. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0521070511. https://books.google.com/books?id=7SOL7ypj7bAC&printsec=frontcover&cad=0#PPA202,M1. 
  8. 8.0 8.1 8.2 Glassner, Jean-Jacques (2004). Mesopotamian Chronicles. Society of Biblical Literature. பக். 137. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1589830903. https://books.google.com/books?id=1i5b6STWnroC&printsec=frontcover&cad=0#PPA137,M1. 
  9. Meissner, Bruno (1990). Reallexikon der Assyriologie. 6. Berlin: Walter de Gruyter. பக். 103. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3110100517. https://books.google.com/books?id=OIeiZaIo91IC&printsec=frontcover&cad=0#PPA103,M1. 
  10. Meissner, Bruno (1990). Reallexikon der Assyriologie. 6. Berlin: Walter de Gruyter. பக். 104. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3110100517. https://books.google.com/books?id=OIeiZaIo91IC&printsec=frontcover&cad=0#PPA104,M1. 
  11. J. A. Brinkman (2001). "Assyria". in Bruce Manning Metzger, Michael David Coogan. The Oxford companion to the Bible. Oxford University Press. பக். 63. 
  12. Meissner, Bruno (1990). Reallexikon der Assyriologie. 6. Berlin: Walter de Gruyter. பக். 105. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3110100517. https://books.google.com/books?id=OIeiZaIo91IC&printsec=frontcover&cad=0#PPA105,M1. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டைய_அசிரியா&oldid=3725988" இலிருந்து மீள்விக்கப்பட்டது