பண்டைய இந்தியக் கல்வெட்டுக்கள்

கிமு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிந்து வெளியில் கிடைத்த கல்வெட்டுக் குறிப்புகள்

பண்டைய இந்தியக் கல்வெட்டுக்கள், இந்தியத் துணைக்கண்டத்தில் முதன் முதலாக கிடைத்த கல்வெட்டுக்கள், கிமு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிந்து வெளியில் கிடைத்த கல்வெட்டுக் குறிப்புகள் ஆகும். ஆனால் இக்கல்வெட்டுக் குறிப்புகள் இதுவரை யாராலும் முழுமையாக படித்து அறியப்படவில்லை..

கிமு 250 காலத்திய பிராமி எழுத்தில் அசோகர் கல்வெட்டுகளில் ஒன்று, லௌரியா-ஆராராஜ், பிகார்
கிமு இரண்டாம் நூற்றாண்டின் தமிழ் பிராமி எழுத்தில் மாங்குளம் கல்வெட்டுகள் மாங்குளம், மதுரை மாவட்டம், தமிழ்நாடு[1][2]
குப்தர்கள் காலத்திய எழுத்துமுறையில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள், கான்கேரி குகைகள் மகாராட்டிரம்
பாதமி சாளுக்கியர் காலத்திய, கிபி 875-ஆம் ஆண்டின், பழைய கன்னட மொழி வெற்றித் தூண் கல்வெட்டு, விருபாட்சர் கோயில், பட்டடக்கல், அய்கொளெ, கர்நாடகா

வட இந்தியாவில், கிமு மூன்றாம் நூற்றாண்டில் பிராமி எழுத்தில் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட அசோகரின் கல்வெட்டுகளும், தமிழ்நாட்டில் தமிழி எழுத்தில், தமிழ் மொழியில் எழுதப்பட்ட மாங்குளம் கல்வெட்டுகள் முதலில் அறியப்பட்டதாகும்.

தென்னிந்தியாவில் சமணர்களின் தமிழ் பிராமி, பட்டிபிரோலு எழுத்து முறையிலும் கடம்ப எழுத்துமுறையிலும் பொறித்த கல்வெட்டுக்கள் கண்டறியப்பட்டுள்ளன.

மேலும் பழனி[3][4]கொடுமணல்[5] மற்றும் ஆதிச்சநல்லூரில்[6] கிமு 500 ஆண்டுகளுக்கு முந்தைய பண்டைய தமிழ் பிராமி கல்வெட்டுக்கள் கண்டறியப்பட்டுள்ளது.

அசோகர் காலத்திற்கு முந்தைய கல்வெட்டுகள் இலங்கையின் அனுராதபுரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.[7]

கிபி நான்காம் நூற்றாண்டு காலத்திய சமசுகிருத மொழி கல்வெட்டுக் குறிப்புகள் முதன்முதலில் அடையாளம் காட்டப்பட்டுள்ளது.[8]

கிபி முதல் ஆயிரமாண்டிற்குப் பின்னர் பாறை, தூண், சமணர் படுகைகள் மற்றும் குடைவரை சுவர்களில் கல்வெட்டுகள் மற்றும் செப்புப் பட்டயங்கள் அதிகம் கண்டறியப்பட்டது.[9]

இந்தியத் தொல்லியல் ஆய்வகம் கண்டெடுத்த ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுகளில், 60,000 கல்வெட்டுக்கள் தமிழ் மொழி கல்வெட்டுகளாகும்.[10] ஒரு இலட்சம் கல்வெட்டுகளில், 5% கல்வெட்டுக்கள் மட்டுமே தெலுங்கு, கன்னடம், சமசுகிருதம், மராத்தி மொழி கல்வெட்டுகளாகும். [11] .

இந்தியத் துணைக்கண்டத்தில் அறியப்பட்ட முதல் எழுத்துமுறைகள் தொகு

வெண்கலக் காலத்திய சிந்து வெளி எழுத்துக்களுக்குப் பின்னர் இந்தியத் துணைக்கண்டத்தில் முதன்முதலாக அறிமுகமான எழுத்துமுறைகளில், கிமு 250-களில் அசோகரின் கல்வெட்டுக்களில் எழுதப்பட்ட பிராமி எழுத்துமுறை ஆகும். [12][13]

அசோகர் காலத்திற்கு முந்தைய, கிமு 5-ஆம் நூற்றாண்டின் தமிழ் பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள், தமிழ்நாட்டின் பழனி [3][4] ஈரோடு, (கொடுமணல்)[5] and ஆதிச்சநல்லூர்,[14] மற்றும் இலங்கையின் அனுராதபுரம் போன்ற இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[15]

வரலாறு மற்றும் ஆய்வு தொகு

இந்தியத் துணைக்கண்டத்தில் கிடைத்த கல்வெட்டுகளையும், மற்றும் செப்புப் பட்டயங்களையும், 1886 முதல் தொல்லியல் அறிஞர்கள் ஆய்வு செய்து, அவைகளை தமிழ் பிராமி மற்றும் பிராமி என வகைப்படுத்தி, ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தனர்.[16]

வட இந்தியவில் அசோகரின் கல்வெட்டுக்கள் பிராமி எழுத்துமுறையிலும்; தென்னிந்தியாவின் தமிழ் கல்வெட்டுக்கள் தமிழ் பிராமி எழுத்துமுறையிலும் இருந்தது. பின்னர் தமிழ் பிராமி எழுத்துமுறைகள், வட்டெழுத்து முறையில் மாறி, கோயில் கருங்கல் சுவர்களில் செதுக்கப்பட்டிருந்தது.[17]

கிபி 1-ஆம் நூற்றாண்டு முதல் பட்டிபிரோலு மற்றும் கடம்பர் எழுத்துமுறைகளிலிருந்து கன்னடம் மற்றும் தெலுங்கு எழுத்துமுறைகள் உருவானது.

குறிப்பிடத்தக்க கல்வெட்டுகள் தொகு

 
கிபி 578 காலத்திய பழைய கன்னட கல்வெட்டுக்கள், பாதமி குகைக் கோயில்

கிமு 250 காலத்திய 33 அசோகர் கல்வெட்டுக்கள் மற்றும் அசோகரின் தூண்களில் எழுதப்பட்ட கல்வெட்டுக் குறிப்புகள், கிமு 2-ஆம் நூற்றாண்டின் மாங்குளம் கல்வெட்டுகள், கலிங்க மன்னர் காரவேலன் காலத்திய ஹத்திகும்பா கல்வெட்டு, கிமு இரண்டாம் நூற்றாண்டின் சாதவாகனர் காலத்திய நானாகாட் பிராமி எழுத்துமுறை பாறைக் கல்வெட்டுக்கள், ஹேலியோடோரஸ் தூண், கிபி 150-இல் ருத்திரதாமனின் ஜூனாகத் பாறைக் கல்வெட்டு, சமுத்திரகுப்தரின் அலகாபாத் தூண் கல்வெட்டு, இரண்டாம் புலிகேசியின் அய்கொளெ கல்வெட்டு, (கிபி 634), தமிழ்நாட்டின் செப்புப் பட்டயங்கள் முக்கியமானவைகள்.[18]

யவன இராச்சியக் கல்வெட்டு தொகு

தமிழ்க் கல்வெட்டுகள் தொகு

 
தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகள்

ஹத்திகும்பா கல்வெட்டுக்கள் தொகு

 
கலிங்க மன்னர் காரவேலரின் ஹத்திகும்பா கல்வெட்டு, ஒடிசா

கிமு 2-ஆம் நூற்றாண்டு காலத்திய, உதயகிரி மற்றும் கந்தகிரி குகைகளில், கலிங்க மன்னர் காராவேலனால் நிறுவப்பட்ட ஹத்திகும்பா கல்வெட்டுகள், பிராமி எழுத்தில் 17 வரிகள் கொண்டது.

ரபதக் கல்வெட்டுக்கள் தொகு

கிரேக்க எழுத்தில், பாக்திரியா மொழி கல்வெட்டு ஒன்று 1993-இல் ஆப்கானித்தான் நாட்டின் சுர்க் கோட்டல் எனுமிடத்தில் கண்டெடுக்கப்பட்டது.

இக்கல்வெட்டில் குசான் பேரரசர் கனிஷ்கரின் ஆட்சிக் குறித்தும், குசான் வம்சம் குறித்தும் குறிப்புகள் உள்ளது.

 
பழைய கன்னட மொழி ஹல்மிதி கல்வெட்டுக்கள், (கிபி 450 – 600), பெங்களூரு அருங்காட்சியகம்

தமிழ் செப்பேடுகள் தொகு

தென்னிந்திய மன்னர்கள் குறிப்பாக சோழர், விஜயநகரப் பேரரசுகள், கிபி 10-ஆம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டு வரை, வேளாண் நிலங்கள் மற்றும் வேளாண் நிலத்துடன் கூடிய கிராமங்கள், கோயில்கள், சைவ மடங்கள், அன்னசாலைகள் போன்ற பொதுநிறுவனக் காரியங்களை நிர்வாகிக்க, தனிநபர்களுக்கும், பொதுநிறுவனங்களுக்கும், செப்பேடுகள் மூலம் தானமாக வழங்கியதை வேள்விக்குடி செப்பேடுகள் போன்றவைகள் மூலம் அறியப்படுகிறது.

தென்னிந்தியாவில் தமிழ்நாட்டிற்கு வெளியே உள்ள பகுதிகளில் கல்வெட்டுகள் பிராகிருதம் மற்றும் சமசுகிருத மொழியில் அதிகம் கொண்டிருந்த போதும், தமிழ்நாட்டில் மட்டும் தமிழி எழுத்தில் கொண்டிருந்தது.[20]

சங்க இலக்கியங்கள் அனைத்தும் தமிழ் மொழியில், பனை ஓலைகளில் எழுதப்பட்டிருந்தது.[21]

இச்சங்க இலக்கியங்கள் கிமு 4 - கிமு 3-ஆம் நூற்றாண்டிற்குள் எழுதப்பட்டிருக்கலாம் அறிஞர்கள் கருதுகிறார்கள்.[22][23][24] கிமு 3-ஆம் நூற்றாண்டு காலத்திய தமிழ் கல்வெட்டுகள் தமிழ் பிராமி எழுத்துமுறையில் இருந்தது. [25][26]

தமிழ் மொழியின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் எழுதப்பட்ட காலம் கிமு 5 – 2-ஆம் நூற்றாண்டு காலமாக இருக்கலாம் அறிஞர்கள் கணித்துள்ளனர்.

 
புத்தகுப்தரின் செப்புப் பட்டயம், கிபி 477 – 488
 
ஆந்திரப் பிரதேச குண்டூர் மாவட்டம், உண்டவல்லி குகைச் சுவர் கல்வெட்டுக்கள் [27]

......

படக்காட்சிகள் தொகு

இதனையும் காண்க தொகு

அடிக்குறிப்புகள் தொகு

  1. John D. Bengtson (2008). In Hot Pursuit of Language in Prehistory: Essays in the Four Fields of Anthropology : in Honor of Harold Crane Fleming. John Benjamins Publishing. பக். 427–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:90-272-3252-0. https://books.google.com/books?id=xxcdjUGfx40C&pg=PA427. 
  2. R. Umamaheshwari (2018). Reading History with the Tamil Jainas: A Study on Identity, Memory and Marginalisation. Springer. பக். 43. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-322-3756-3. https://books.google.co.in/books?id=TRxJDwAAQBAJ&pg=PA43&lpg=PA43&dq=Mangulam+3rd+century&source=bl&ots=QNdYTq6eN2&sig=KR8-1860tcS_yzTqhUNcu4xiTxM&hl=en&sa=X&ved=2ahUKEwjg8Z6p4OXfAhVDNY8KHc3TCwUQ6AEwDHoECAAQAQ#v=onepage&q=Mangulam%203rd%20century. 
  3. 3.0 3.1 Kishore, Kavitha (15 October 2011). "Porunthal excavations prove existence of Indian scripts in 5th century BC: expert". The Hindu (The Hindu Group) இம் மூலத்தில் இருந்து 17 அக்டோபர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111017180323/http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2538550.ece. பார்த்த நாள்: 17 October 2011. 
  4. 4.0 4.1 Porunthal excavations prove existence of Indian scripts in 5th century BC: expert
  5. 5.0 5.1 Subramaniam, T.S (20 May 2013). "Kodumanal excavations prove existence of Indian scripts in 5th century BC: expert". The Hindu (The Hindu Group). http://www.thehindu.com/todays-paper/tp-national/kodumanal-reveals-more-hidden-gems/article4731632.ece. பார்த்த நாள்: 20 May 2013. 
  6. "Rudimentary Tamil-Brahmi script' unearthed at Adichanallur". தி இந்து. February 17, 2005 இம் மூலத்தில் இருந்து அக்டோபர் 12, 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091012142602/http://www.thehindu.com/2005/02/17/stories/2005021704471300.htm. 
  7. Coningham, R.A.E.; Allchin, F.R.; Batt, C.M.; Lucy, D. (1996), "Passage to India? Anuradhapura and the Early Use of the Brahmi Script", Cambridge Archaeological Journal, 6 (1): 73–97, doi:10.1017/S0959774300001608
  8. Salomon (1998), p. 81.
  9. Keay, John (2000). India: A History. New York: Grove Press. பக். xx – xxi. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8021-3797-0. 
  10. Staff Reporter (November 22, 2005). "Students get glimpse of heritage". Chennai, India: The Hindu இம் மூலத்தில் இருந்து 2014-06-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140618165752/http://www.hindu.com/2005/11/22/stories/2005112215970400.htm. பார்த்த நாள்: 2007-04-26. 
  11. http://www.deccanherald.com/content/174214/take-up-study-unearthed-inscriptions.html
  12. Colin P. Masica, The Indo-Aryan Languages (Cambridge Language Surveys), Cambridge University Press, 1993.
  13. Dilip K. Chakrabarty (2009). India: An Archaeological History: Palaeolithic Beginnings to Early Historic Foundations. Oxford University Press India. பக். 355–356. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-908814-0. https://books.google.com/books?id=wPQtDwAAQBAJ&pg=PT356. 
  14. "Rudimentary Tamil-Brahmi script' unearthed at Adichanallur". தி இந்து. February 17, 2005 இம் மூலத்தில் இருந்து அக்டோபர் 12, 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091012142602/http://www.thehindu.com/2005/02/17/stories/2005021704471300.htm. 
  15. Coningham, R.A.E.; Allchin, F.R.; Batt, C.M.; Lucy, D. (1996), "Passage to India? Anuradhapura and the Early Use of the Brahmi Script", Cambridge Archaeological Journal, 6 (1): 73–97, doi:10.1017/S0959774300001608
  16. "Indian inscriptions". பார்க்கப்பட்ட நாள் 2007-03-10.
  17. "Orality to literacy: Transition in Early Tamil Society". Frontline. பார்க்கப்பட்ட நாள் 2007-03-10.
  18. "Halmidi village finally on the road to recognition". Chennai, India: The Hindu. 2003-11-03 இம் மூலத்தில் இருந்து 2003-11-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20031124063238/http://www.hindu.com/2003/11/03/stories/2003110304550500.htm. பார்த்த நாள்: 2007-03-10. 
  19. Rice, Benjamin Lewis (1894). Epigraphia Carnatica: Volume IX: Inscriptions in the Bangalore District. Mysore State, British India: Mysore Department of Archaeology. https://archive.org/details/epigraphiacarnat09myso. பார்த்த நாள்: 5 August 2015. 
  20. Caldwell, Robert (1875). A comparative grammar of the Dravidian or South-Indian family of languages. Trübner & co. பக். 88. https://archive.org/details/acomparativegra01caldgoog. "In southern states, every inscription of an early date and majority even of modern day inscriptions were written in Sanskrit...In the Tamil country, on the contrary, all the inscriptions belonging to an early period are written in Tamil with some Prakrit" 
  21. Dating of Indian literature is largely based on relative dating relying on internal evidences with a few anchors. I. Mahadevan’s dating of Pukalur inscription proves some of the Sangam verses. See George L. Hart, "Poems of Ancient Tamil, University of Berkeley Press, 1975, p.7-8
  22. George Hart, "Some Related Literary Conventions in Tamil and Indo-Aryan and Their Significance" Journal of the American Oriental Society, 94:2 (Apr – Jun 1974), pp. 157-167.
  23. Kamil Veith Zvelebil, Companion Studies to the History of Tamil Literature, pp12
  24. Nilakanta Sastri, K.A. (1955). A History of South India, OUP, New Delhi (Reprinted 2002)
  25. "Tamil". The Language Materials Project. UCLA International Institute, கலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்). Archived from the original on 2007-10-11. பார்க்கப்பட்ட நாள் 2007-03-25.
  26. Iravatham Mahadevan (2003). Early Tamil Epigraphy from the Earliest Times to the Sixth Century A.D. Cambridge, Harvard University Press.
  27. B. C. Jain, Journal of the Epigraphic Society of India 4 (1977): pp. 62-66 and plate facing p. 64.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு