பதுல்லா ஓசுமானி விளையாட்டரங்கம்

கான் சாகேப் ஓசுமான் அலி விளையாட்டரங்கம் (Khan Shaheb Osman Ali Stadium) நடுவண் வங்காளதேசத்தில் நாராயண்கஞ்ச்சின் பதுல்லா பகுதியில் அமைந்துள்ள துடுப்பாட்ட விளையாட்டரங்கம் ஆகும். இங்கு 25,000 பேர் அமர்ந்து போட்டிகளை காணலாம்.[1] இந்த விளையாட்டரங்கத்தில் 2013ஆம் ஆண்டு நியூசிலாந்து அணியுடன் நடந்த ஒருநாள் பன்னாட்டுப் துடுப்பாட்டப் போட்டியில் வங்காளதேசம் வென்றது.

கான் சாகேப் ஓசுமான் அலி விளையாட்டரங்கம்
பதுல்லா விளையாட்டரங்கம், நாராயண்கஞ்ச் ஓசுமானி விளையாட்டரங்கம்
அரங்கத் தகவல்
அமைவிடம்பதுல்லா, நாராயண்கஞ்ச்
ஆள்கூறுகள்23°39′0.58″N 90°29′19.72″E / 23.6501611°N 90.4888111°E / 23.6501611; 90.4888111
இருக்கைகள்18,166
உரிமையாளர்தாக்கா கோட்டம்
இயக்குநர்வங்காளதேசம், தாக்கா கோட்டம்
முடிவுகளின் பெயர்கள்
இதழாளர் பெட்டி முனை
பேவிலியன் முனை
பன்னாட்டுத் தகவல்
ஒரே தேர்வு9 ஏப்ரல் - 13 ஏப்ரல் 2006:
 வங்காளதேசம் v  ஆத்திரேலியா
முதல் ஒநாப23 மார்ச் 2006:
 வங்காளதேசம் v  கென்யா
கடைசி ஒநாப3 நவம்பர் 2013:
 வங்காளதேசம் v  நியூசிலாந்து
4 நவம்பர் 2013 இல் உள்ள தரவு
மூலம்: நாராயண்கஞ்ச் ஓசுமானி விளையாட்டரங்கம், கிரிக்கின்ஃபோ

வெளிப்புற மைதானம் தொகு

பதுல்லா உசுமானி விளையாட்டரங்கிற்கு அடுத்துள்ள சிறிய மைதானம், கான் ஷேப் உசுமானி அலி வெளிப்புற விளையாட்டரங்கம் ஆகும். 2013-14 முதல் உள்நாட்டு முதல்தர, ஏ மற்றும் இருபது 20 துடுப்பாட்ட போட்டிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. வெளிப்புற மைதானம் முதன்முதலில் 2016 ஆசிய கோப்பை இருபது 20 சர்வதேச போட்டித் தகுதிச் சுற்றுக்கு பயன்படுத்தப்பட்டது. மைதானத்தின் முதல் போட்டி 19 பிப்ரவரி 2016 அன்று ஆப்கானித்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே நடைபெற்றது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "Bangladesh stadia await ICC approval" (in en). ESPNcricinfo. 19 January 2006. https://www.espncricinfo.com/story/_/id/23017469/. 
  2. "Asia Cup – 1st Match, Qualifying Group, AFG v UAE". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 February 2016.