பத்மநாபன் பல்பு

பத்மநாபன் பல்பு (2 நவம்பர் 1863 - 1950) என்பவர் கேரளத்தைச் சேர்ந்த மருத்துவர் சமூகச் சீர்திருத்தவாதி, மற்றும் சாதிய எதிர்ப்பாளர் ஆவார். இவர் ஈழவர்களின் அரசியல் தந்தை என அழைக்கப்படுகிறார்.

ஒரே குலம் ஒரே மதம் ஒரே கடவுள் என்ற கொள்கையைச் சொன்ன நாராயணகுரு பெயரில் ஓர் அமைப்பை 1903 இல் பத்மநாப பல்பு தோற்றுவித்தார். அந்த அமைப்பின் பெயர் சிறீ நாராயண தர்ம பரிபாலனம் ஆகும்.[1]

பிற்படுத்தப் பட்ட சமூகமான ஈழவா என்ற சாதிப் பிரிவில் பிறந்ததால் பத்மநாபன் பல்பு திருவாங்கூர் மருத்துவப் பள்ளியில் கல்வி பயில மறுக்கப்பட்டதால் சென்னையிலும் இலண்டனில் கேம்பிரிச்சியிலும் மருத்துவம் படித்து மருத்துவப் பட்டம் பெற்றார். அது மட்டுமல்லாமல் திருவாங்கூர் சுகாதார நிலையத்தில் பணியில் சேரவும் அனுமதிக்கப் படவில்லை. ஆனால் மைசூரில் பணி செய்ய இவருக்கு வாய்ப்புக் கிடைத்தது.

ஈழவர்கள் கல்வித் துறையிலும் அரசுப் பணிகளிலும் முன்னேற்றம் அடைய மலையாளிகள் நினைவுக் கூடம் என்ற அமைப்பை 1891 இல் உருவாக்கினார்.[2] ஈழவர்கள் நினைவுக் கூடம் என்ற அமைப்பை 1895 இல் அமைத்தார். திருவாங்கூர் கொச்சி சமஸ்தான முதலமைச்சராக இருந்த சி.கேசவன் என்பவர் பத்மநாபன் பல்புவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்.

மேற்கோள் தொகு

  1. Lukose, Ritty A. (2010). "Recasting the Secular: Religion and Education in Kerala, India". in Mines, Diane P.; Lamb, Sarah. Everyday Life in South Asia (2nd ). Indiana University Press. பக். 209–210. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780253354730. https://books.google.com/books?id=828fOvb61wIC&pg=PA209. 
  2. Kumar, Udaya (2009). "Subjects of New Lives". in Ray, Bharati. Different Types of History. Pearson Education India. பக். 329. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788131718186. https://books.google.com/books?id=9x5FX2RROZgC&pg=PA329. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மநாபன்_பல்பு&oldid=2711588" இலிருந்து மீள்விக்கப்பட்டது