பன்னாட்டுக் கதிரியல் நாள்

பன்னாட்டுக் கதிரியல் நாள் (International Day of Radiology) என்பது இன்றைய நவீன மருத்துவத் துறையில் மருத்துவப் படிமவியலின் சிறப்பினை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்ல ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாள் ஆகும். எக்சு-கதிர்கள் கண்டுபிடிக்கப்பட்ட நவம்பர் 8 ஆம் நாள் இது கொண்டாடப்படுகிறது. கதிரியலுக்கான ஐரோப்பியக் கழகம், மற்றும் கதிரியலுக்கான அமெரிக்கக் கல்லூரி ஆகியன இணைந்து 2012 ஆம் ஆண்டு முதன் முதலாக இந்நாளை அறிமுகப்படுத்தின.[1]

பன்னாட்டுக் கதிரியல் நாள்
கடைபிடிப்போர்உலகளாவியது
வகைபன்னாட்டு
முக்கியத்துவம்எக்சு-கதிர் கண்டுபிடித்த நாளின் நினைவாகவும், மருத்துவப் படிமவியலின் பயன்களை அறியச் செய்தலும்
நாள்நவம்பர் 8
நிகழ்வுஆண்டுதோறும்

பின்னணி தொகு

செர்மானிய இயற்பியலாளர் வில்கெல்ம் இராண்ஜன் (1845-1923) 1895 நவம்பர் மாதம் எட்டாம் நாள் எக்சு கதிர்களை கண்டுபிடித்தார். அதற்காக அவர் இயற்பியலுக்கான நோபல் பரிசினை 1901-ல் பெற்றார். இயற்பியலுக்கான முதல் நோபல் பரிசு இதுவாகும். அனைத்துத் துறைகளிலும் அதிலும் சிறப்பாக மருத்துவத் தறையிலும் பெரும் பரட்சியினை அவர் கண்ட இக்கதிர்கள் ஏற்படுத்தின. அவரது பங்களிப்பினை போற்றும் வகையில் அணு எண் 111 கொண்ட தனிமம் இராண்ஜனியம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு