பரமக்குடி வட்டம்

பரமக்குடி வட்டம் , தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக பரமக்குடி நகரம் உள்ளது.

பரமக்குடி வட்டத்தில் பரமக்குடி ஊராட்சி ஒன்றியம், நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியம் மற்றும் போகலூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது. [2]மேலும் பரமக்குடி (சட்டமன்றத் தொகுதி)யும் உள்ளது.

வட்ட வருவாய் நிர்வாகம் தொகு

இந்த வட்டத்தின் கீழ் பரமக்குடி, நயினார்கோவில்,மற்றும் கிள்ளியூர் என 3 உள்வட்டங்களும், 91 வருவாய் கிராமங்களும் உள்ளது. [3]

மக்கள்தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 265,142 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 134,134 ஆண்களும், 131,008 பெண்களும் உள்ளனர். 66,337 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 60.8% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 80.82% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 977 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 25632 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 948 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 68,664 மற்றும் 148 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 90.11%, இசுலாமியர்கள் 5.92%, கிறித்தவர்கள் 3.79% மற்றும் பிறர் 0.18% ஆகவுள்ளனர்.[4]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரமக்குடி_வட்டம்&oldid=3136019" இலிருந்து மீள்விக்கப்பட்டது