பரவுணித் தாவரம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஒரு தாவரம் வேறொரு தாவரத்தைப் பற்றிக்கொண்டு அத்தாவரத்திடமிருந்தே உணவு பறித்து வாழும் தாவரம் பரவுணித் தாவரம் (ஒட்டுண்ணித் தாவரம்) என்றழைக்கப்படும். பரவுணித்தாவரங்கள் அவற்றின் வாழ்க்கை முறையின்படி பலவகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை;
- 1a. கட்டாய ஒட்டுண்ணித் தாவரம்(Obligate parasite) : வாழ்க்கை வட்டத்தை ஒரு விருந்து வழங்கியின் துணையின்றிப் பூர்த்தி செய்யவியலாத தாவரமாகும்.
- 1b. சமயாசமய ஒட்டுண்ணித் தாவரம்(Facultative parasite) : வாழ்க்கை வட்டத்தை ஒரு விருந்து வழங்கியின் துணையின்றித் தனித்துப் பூர்த்தி செய்யக்கூடிய தாவரமாகும்.
- 2a. தண்டுக்குரிய ஒட்டுண்ணித் தாவரம் (Stem parasite): விருந்து வழங்கியின் தண்டுப்பகுதியில் வாழும் தாவரம்.
- 2b. வேருக்குரிய ஒட்டுண்ணித் தாவரம் (Root parasite): விருந்து வழங்கியின் வேர்ப்பகுதியில் வாழும் தாவரம்.
- 3a. நிறை ஒட்டுண்ணி (Holoparasite): விருந்து வழங்கியில் முற்றுமுழுதாக உணவுக்காகத் தங்கியிருக்கும் தாவரம்.
- 3b. குறை ஒட்டுண்ணி (Hemiparasite): விருந்து வழங்கியிலிருந்து நீரையும் கனியுப்பையும் மட்டும் பெற்று தமக்கான உணவை தயாரிக்கக்கூடிய தாவரம்.