பருமலா திருமேனி

சிரியன் ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தின் ஆயர் மற்றும் புனிதர்

பருமலா திருமேனி என்று சிறப்பாக குறிப்பிடப்படும் புனித கீவர்கீஸ் மார் க்ரிகோரியஸ், (பருமலா பிசப்) மேலும் சத்துருதி கோச்சுத் திருமேனி என்றும் அழைக்கப்பட்டார்  (15 சூன் 1848 – 2 நவம்பர் 1902) என்பவர் மலங்கரா சிரியன் தேவாலய பிஷப் ஆவார். அவர் 18 வயதில் கோர் எப்பிஸ்க்கோப்பா ஆகவும், 28 வயதில் ஒரு பிஷப்பாகவும் ஆனார்.  அவர் தன்  54 வயதில் இறந்தார் பின்னர் கேரளத்தின் பருமலா, புனித பீட்டர் மற்றும் புனித பவுல் தேவாலயத்தின் கல்லறைத் தோட்டத்தில் புதைக்கப்பட்டார். 1947 ஆம் ஆண்டில், அவர் மலங்கர ஆர்த்தடாக்ஸ் சிரியன் தேவாலயத்தால் புனிதராக அறிவிக்கப்பட்டார். 1987 ல், சிரியாக் மரபுவழி திருச்சபை அவரை ஒரு புனிதராக அங்கீகரித்தது.

புனித கீவர்கீஸ் மார் கிரிகோரியஸ்
பிறப்பு1848 சூன் 15
இந்தியா கேரளம், Mulanthuruthy
இறப்பு1902 நவம்பர் 2 (54 வயதில்)
இந்தியா கேரளம், பருமலா
ஏற்கும் சபை/சமயங்கள்மலங்கர ஆர்த்தடாக்ஸ் சிரியன் தேவாலயம்; மலங்கரா யாக்கோபை சிரியன் கிரிஸ்துவர் தேவாலயம்; சிரியாக் மரபுவழி திருச்சபை, காப்டிக் ஆர்த்தடாக்ஸ் தேவாலயம்
புனிதர் பட்டம்on 2 November 1947 by Baselios Geevarghese II of Malankara Orthodox Syrian Church and on 20 December 1987 by Ignatius Zakka I Iwas of Syriac Orthodox Church
முக்கிய திருத்தலங்கள்செயிண்ட் பீட்டர் மற்றும் செயின்ட் பால் சர்ச், பருமலா
திருவிழாநவம்பர் 2
பருமலா திருமேனி வாழ்ந்த சிறிய வீடு

வாழ்க்கை தொகு

இவர் மார் க்ரிகோரியோஸ் என்ற பெயரில் கேரளத்தில் 1848 சூன் 15 அன்று பிறந்தார்.[1]

பத்து வயதில் (1859 செப்டம்பர் 14)  கரிங்காரிரோ ஆலயத்தில் மலங்கர மெட்ரோபாலிட்டன் மாத்தியூஸ்மார் அத்தானாசியோஸ் என்பவரால் கொருயோ பட்டம் வழங்கப்பட்டது.  கிரேக்ரியோஸ் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு பின்னர் பிழைத்துக்கொண்டார். 1865-ல் டீக்கன் பட்டமும் பாதிரியார் பட்டமும் பெற்றார். அதே ஆண்டு கோர் எப்பிஸ்க்கோப்பா பதவியும் வழங்கப்பட்டது.

பிறகு வடக்கன் பரவூர் தேவாலயத்தில் ‘மார் க்ரிகோரியஸ்’ என்ற பெயரில் மெட்ரா போலிதாவாக (1876 திசம்பர் 10) (பிஷப் ) அவரது 28 ஆவது பயதில் பட்டம் சூட்டப்பட்டார். இளம் வயதில் பிஷப் பட்டம் பெற்றதால் அவரை மக்கள் ‘கொச்சுத் திருமேனி’ (இளம் பிசப்) என்று  அழைத்தனர்.

அவர் நிர்மானம் மறைமாவட்டத்துக்கு பிசப்பாக இருந்தார், அவர் பல்வேறு தேவாலயங்களை நிறுவினார் மேலும் மலங்கராவின் பல்வேறு பகுதிகளில் பள்ளிகளை நிறுவுவதற்கு காரணமாக இருந்தார். கல்வி கற்பதன் அவசியத்தை மக்களுக்கு எடுத்துக்கூறினார். குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பப் பெற்றோர்களை வலியுறுத்தினர்.

 
பருமலா தேவாலயத்தில் உள்ள அவரது கல்லறை

1902 நவம்பர் 2 அன்று இறந்தார். அவரின் கடைசி விருப்பப்படி அவர் வாழ்ந்த பருமலை ஆலயத்தின் வடக்கு உட்புற திசையில் அவருடல் அடக்கம் செய்யப்பட்டது.

பருமலை பண்டிகை தொகு

அவரது நினைவு நாளான நவம்பர் 1, 2 ஆகிய இரண்டு நாட்களிலும் பருமலை பரிசுத்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. கேரளத்தில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கால்நடையாக பருமலை செல்கின்றனர்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "Geevarghese Mar Gregorios of Parumala", The Order of Mar Gregorios
  2. நதீரா (7 திசம்பர் 2017). "அறிவுக்கண் திறந்த புனிதர்". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 8 திசம்பர் 2017.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பருமலா_திருமேனி&oldid=3884470" இலிருந்து மீள்விக்கப்பட்டது