பலே பாண்டியா (2010 திரைப்படம்)

சித்தார்த் சந்திரசேகர் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பலே பாண்டியா (Bale Pandiya) 2010 ல் வெளிவந்த சண்டைக் காட்சிகள் மற்றும் நகைச்சுவைக் காட்சிகள் நிறைந்த தமிழ்த் திரைப்படமாகும். இயக்குனர் சித்தார்த் சந்திரசேகர் இப்படத்தை இயக்கியுள்ளார். விஷ்னு விஷால், வையாபுரி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். 210-ம் ஆண்டு செப்டம்பர் 3 ந் தேதி வெளிவந்த இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் பெறப்பட்டது. இப்படம் பலே பாண்டியா என்று ஏற்கனவே வெளி வந்த படத்தை ஒட்டியே எடுக்கப்பட்டது

பலே பாண்டியா
இயக்கம்சித்தார்த் சந்திரசேகர்
தயாரிப்புகல்பாத்தி எஸ் அகோரம்
கல்பாத்தி எஸ்.கணேஷ்
கல்பாத்தி எஸ். சுரேஸ்
கதைசித்தார்த் சந்திரசேகர்
இசைதேவன் ஏகாம்பரம்
நடிப்புவிஷ்ணு விசால்l
பியா
ஒளிப்பதிவுசௌந்தர் ராஜன்
ஆர்.பி. குருதேவ்
படத்தொகுப்புஎஸ். சரவணன்
கலையகம்ஏஜிஎஸ் என்டர்டென்மெயின்
வெளியீடுசெப்டம்பர் 3, 2010 (2010-09-03)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவுrs.33 கோடி

கதைச் சுருக்கம் தொகு

தொழில் ரீதியாக கொலைகளில் ஈடுபட்டு வரும் ஏ.கே.பி (ஆர். அமரேந்திரன்) மற்றும் அவனது இரு அடியாட்களுடன் ஒரு விடுதிக்கு வருகிறார்கள். .பாண்டியன் தன்னை அதிர்ஷ்டமில்லதவன் எனத் தனக்குத்தானே அலுத்துக் கொள்கிறான். அவனுடைய முயற்சிகள் எல்லாமே தோல்வியிலேயே முடிவடைகின்றன. எனவே அவன் வாழ்க்கையே வெறுத்து போகிறான். அவன் ஏ.கே.பி.யிடம் சென்று தன்னை உடனடியாகக் கொன்று விடடும்படி கேட்டுக் கொள்கிறான். இதனால், அதிற்சியடைந்த ஏ.கே.பி முதலில் இதைச் செய்யத் தயங்குகிறான். பின்னர், அவனிடம் சில நாள் போகட்டும் என தீர்மானிக்கிறான்.

பின்னர், பாண்டியனிடம் பணத்தை கொடுத்து மனித வெடிகுண்டாக மாறும்படி சொல்கிறான். அதுவும் 20 நாட்களுக்குள் அந்தப் பணியை முடிக்க வேண்டுமெனவும் கூறுகிறான். பாண்டியன் வைஷ்ணவியை (பியா பாஜ்பாய்) சந்தித்த பிறகு அவனது வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. அவர்கள் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள்,. பின்னர் ஏ.கே.பியிடம் நேரில் சென்று தான் சாக விரும்பவில்லை என்று பாண்டியன் கூறுகிறான். இதைக்கேட்ட ஏ.கே.பி அதிர்ச்சி அடைகிறான். ஏ.கே.பி யின் சில ஆட்கள் கொலை செய்யப்படுகின்றனர். இக்கொலைக் குற்றம் பாண்டியன் மீது விழுகிறது. இதற்கிடையில், வைஷ்ணவி ஒரு பெரிய கும்பலால் கடத்திச் செல்லப்படுகிறாள். இதையெல்லாம் பாண்டியன் சரி செய்யும் முன் எல்லா இடங்களிலும் குழப்பம் நிலவுகிறது. பிறகு அவர்கள் இருவரும் சேர்ந்தார்களாஎன்பது மீதிக் கதை.

நடிகர்கள் தொகு

  • பாண்டியாவாக விஷ்ணு விஷால்
  • வைஷ்ணவியாக பியா பஜ்பல்
  • ஏ.கே.பி ஆக ஆர். அமரேந்திரன்
  • லண்டனாக விவேக்
  • பாண்டியாவின் சகோதரனாக விஜய் சேதுபதி
  • கச்சிதம் ஆக ஜிப்ரான் உஸ்மான்
  • பசுபதியாக ஜான் விஜய்
  • பண்ணையாராக ஜெயப்ரகாஷ்
  • பாண்டியாவின் தாயாராக மருத்துவர் ஷர்மிளா
  • ராஜு வாக கடம் கிஷண்
  • வையாபுரி
  • ஆர்த்தி ஆர்த்தி
  • திருப்பதியாக செல் முருகன்

"ஹேப்பி" என்ற பாடலில் சிறப்புத் தோற்றத்தில் தோன்றிய பின்னணி பாடகர்கள்

தயாரிப்பு தொகு

முன்னணி விளம்பர வடிவமைப்பாளரான சித்தார்த் சந்திரசேகர் இத்திரைப்படத்தின் இயக்குனராக அறிமுகமானார். இதன் படப்பிடிப்பு , பாண்டிச்சேரி, மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றது. இப்படத்தில் "ஹேப்பி" என்ற பாடலில் 20 பின்னணி பாடகர்கள் கேமியோ தோற்றங்களில் தோன்றிய பாடல் காட்சி இடம் பெற்றது.[1]

விமர்சனமும், வரவேற்பும் தொகு

பிகைன்ட்வுட் ஏன்ற வளைதளம் , சித்தார்த் சந்திரசேகர் படத்தின் முதல் பாதியில் சில இடங்களில் சரியான பாதையில் எடுத்துச் சென்றுள்ளார் எனவும், இதில் நகைச்சுவை நல்லமுறையில் கையாளப்பட்டிருந்தது. எனவும் இரண்டாவது பாதியில் அந்த வேகத்தை தக்க வைத்திருந்தால், பலே பாண்டியா இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் எனவும் விமர்சித்திருந்தது.[சான்று தேவை]

ஆதாரங்களும் மேற்கோள்களும் தொகு