பஸ்தர் மாவட்டம்

சட்டீஸ்கரில் உள்ள மாவட்டம்

பஸ்தர் மாவட்டம், சத்தீஸ்கர் மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் ஜெகதல்பூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]

பஸ்தர் மாவட்டம்
பஸ்தர்மாவட்டத்தின் இடஅமைவு சத்தீஸ்கர்
மாநிலம்சத்தீஸ்கர், இந்தியா
நிர்வாக பிரிவுகள்பஸ்தர் கோட்டம்
தலைமையகம்ஜெகதல்பூர்
பரப்பு10,083 km2 (3,893 sq mi)
மக்கட்தொகை1,411,647 (2011)
மக்கள்தொகை அடர்த்தி140/km2 (360/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை1,93,328
படிப்பறிவு54.94%
பாலின விகிதம்1000 ஆண்களுக்கு 1024 பெண்கள் உள்ளனர்
வட்டங்கள்4
மக்களவைத்தொகுதிகள்1
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை7
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

நக்சலைட் - மாவோயிஸ்ட் போராளிகளால் அரசுக்கும், பொது மக்களுக்கு பெரிதும் அச்சுறுத்தல்கள் ஏற்படும் சிவப்பு தாழ்வாரப் பகுதிகளில் பஸ்தர் மாவட்டம் அமைந்துள்ளது.[2][3][4]

மாவட்ட நிர்வாகம் தொகு

பஸ்தர் மாவட்டம் ஜெகதல்பூர் மற்றும் பஸ்தர் என இரண்டு வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது. 1,50,000 மக்கள் தொகை கொண்ட ஜெகதல்பூர் எனும் நகராட்சி மன்றம் உள்ளது.

போக்குவரத்து தொகு

மக்கள் தொகையியல் தொகு

10,083 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பஸ்தர் மாவட்டத்தின் -ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள் தொகை 14,11,644 ஆகும். அதில் ஆண்கள் 697,359; பெண்கள் 714,285 ஆக உள்ளனர். 2001-2011 ஆண்டுகளில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 17.83% ஆக உள்ளது. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 140 நபர்கள் வீதம் உள்ளணர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1024 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 54.94% ஆக உள்ளது. ஆண்களின் எழுத்தறிவு 65.70% ஆகவும்; பெண்களின் எழுத்தறிவு 44.49% ஆகவும் உள்ளது.[5] ஆறு வயதிற்குட்பட்டோரின் எண்ணிக்கை 2,12,819 (15.08%) ஆக உள்ளது.

பஸ்தர் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் பட்டியல் பழங்குடி மக்கள் 70%-ஆக உள்ளது. இது சத்தீஸ்கர் மாநிலத்தின் மொத்த பழங்குடி மக்களில் 26.76% ஆவார். பஸ்தர் மாவட்டத்தில் கோண்டு, மரியா, பத்திரா, முரியா, ஹல்பா, துருவா போன்ற பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். இப்பழங்குடி மக்கள் தங்கள் மரபார்ந்த மொழி, பண்பாடு, பழக்க வழக்கங்கள் கொண்டுள்ளனர்.[6][7]இந்தி மொழியும் பேசப்படுகிறது. துர்கா பூஜை இம்மாவட்ட மக்களின் முக்கிய விழாவாகும்.

பொருளாதாரம் தொகு

பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய இந்திய மாவட்டங்களில் பஸ்தர் மாவட்டமும் ஒன்றாகும்.

வேளாண்மை தொகு

நெல் பயிரிடுதலே பஸ்தர் மாவட்டத்தின் முக்கிய பயிர்த் தொழில் ஆகும். ஆனால் நெல் உற்பத்தி திறன் மிகவும் குறைவாகவே உள்ளது.

காடுகள் தொகு

பஸ்தர் மாவட்ட பழங்குடி மக்கள் காடுகளையே சார்ந்து வாழ்கின்றனர். மூலிகைச் செடிகள் மற்றும் எரிபொருட்களுக்கான விறகுக் கட்டைகள் காடுகளிலிருந்து சேகரித்து வாழ்கின்றனர். காட்டுப் பொருட்களை சேகரித்தல், கூடை முடைதல், மட்பாண்டம் தயாரித்தல், செப்புச் சிலைகள் செய்தல் போன்ற கைவினை பொருட்கள் செய்கின்றனர். மாநில அரசின் வனத்துறை பஸ்தர் மாவட்ட மக்களுக்கு சில நேரங்களில் வேலை வாய்ப்புகள் தருகிறது.

தொழிற்சாலைகள் தொகு

இந்திய தேசிய கனிம வளக் கழகத்தின் 210 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள நகர்னார் இரும்பாலை ஜெகதல்பூரிலிருந்து 16 கி மீ தொலைவில் செயல்படுகிறது.[8]

டாடா நிறுவனத்தின் ஆண்டிற்கு 5.5 மில்லியன் டன் உற்பத்தித் திறன் கொண்ட இரும்பாலை ஜெகதல்பூரிலிருந்து 20 கி மீ தொலைவில் உள்ளது.[9]

நகர்னரில் லம்போதரர் சிமெண்ட் ஆலை இயங்குகிறது.

கல்வி தொகு

பட்ட மேற்படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் கொண்ட பஸ்தர் பல்கலைக் கழகம், ஜெகதல்பூர் நகரத்தின் அருகே உள்ள தரம்புராவில் செயல்படுகிறது.[10]

சுற்றுலாத் தலங்கள் தொகு

இதனையும் காண்க தொகு

சான்றுகள் தொகு

  1. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-14.
  2. Agarwal, Ajay. "Revelations from the red corridor". Archived from the original on 20 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 27 April 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Armed revolt in the Red Corridor". Mondiaal Nieuws, Belgium. 2008-06-25. பார்க்கப்பட்ட நாள் 2008-10-17.
  4. "Women take up guns in India's red corridor". The Asian Pacific Post. 2008-06-09. Archived from the original on 2006-06-22. பார்க்கப்பட்ட நாள் 2008-10-17.
  5. "Bastar District Overview". Archived from the original on 2017-06-29. பார்க்கப்பட்ட நாள் 2017-05-08.
  6. "People And Culture". Archived from the original on 2017-09-16. பார்க்கப்பட்ட நாள் 2017-05-08.
  7. Bastar Tribal Life
  8. http://www.moneycontrol.com/livefeed_pdf/Feb2012/NMDC_Ltd_040212.pdf
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-09-11. பார்க்கப்பட்ட நாள் 2017-05-08.
  10. Bastar University Jagdalpur

இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஸ்தர்_மாவட்டம்&oldid=3890656" இலிருந்து மீள்விக்கப்பட்டது