பஸ்தியாம்பிள்ளை தியோகுப்பிள்ளை

அதிவணக்கத்துக்குரிய யாக்கோபு பஸ்தியாம்பிள்ளை தியோகுப்பிள்ளை (Right Reverend Jacob Bastiampillai Deogupillai, 9 ஏப்ரல் 1917 - 25 ஏப்ரல் 2003) என்பவர் இலங்கைத் தமிழ் மதகுருவும், ரோமன் கத்தோலிக்க முன்னாள் யாழ்ப்பாண ஆயரும் ஆவார்.

அதி வணக்கத்துக்குரிய
பஸ்தியாம்பிள்ளை தியோகுப்பிள்ளை
யாழ்ப்பாண ஆயர்
சபைகத்தோலிக்க திருச்சபை
மறைமாநிலம்கொழும்பு
மறைமாவட்டம்யாழ்ப்பாணம்
ஆட்சி துவக்கம்18 டிசம்பர் 1972
ஆட்சி முடிவு6 சூலை 1992
முன்னிருந்தவர்ஜெரோம் எமிலியானுஸ்பிள்ளை
பின்வந்தவர்தோமஸ் சவுந்தரநாயகம்
பிற தகவல்கள்
பிறப்பு(1917-04-09)9 ஏப்ரல் 1917
கரம்பொன், ஊர்காவற்துறை, இலங்கை
இறப்பு25 ஏப்ரல் 2003(2003-04-25) (அகவை 86)
படித்த இடம்புனித அந்தோனியார் கல்லூரி, ஊர்காவற்துறை
யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி
Pontifical Urbaniana University
இலங்கைப் பல்கலைக்கழகம்

ஆரம்ப வாழ்க்கை தொகு

தியோகுப்பிள்ளை இலங்கையின் வடக்கே ஊர்காவற்துறையில் கரம்பொன் என்ற ஊரில் 1917 ஏப்ரல் 9 இல் பிறந்தார்.[1][2][3] கரம்பொன் கன்னியர் மடம், ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி ஆகியவற்றில் ஆரம்பக் கல்வியைக் கற்றி இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியிலும்,[2][4] உயர்கல்வியை ரோம் நகரில் உள்ள பரப்புரைக் கல்லூரியிலும் தொடர்ந்து இறையியலில் கலாநிதிப் பட்டம் பெற்றார்.[4] பின்னர் அவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பயின்று திருமறைச் சட்டத்தில் இளங்கலைப் பட்டமும், கல்வியலுக்கான டிப்புளோமா பட்டமும் பெற்றார்.[5]

பணி தொகு

1941 டிசம்பரில் தியோகுப்பிள்ளை உரோமை நகரில் குருக்களாகத் தேர்தெடுக்கப்பட்டார்.[1][2][3] பின்னர் இலங்கை திரும்பி கரவெட்டியில் மதகுகுருவாகப் பணியாற்றினார்.[2] ஆசிரியராக சில காலம் பணியாற்றியப் பின்னர் அனுராதபுரம் புனித யோசப்பு கல்லூரியில் பணிப்பாளர் ஆனார்.[1][2] அதன் பின்னர் கரவெட்டி புனித இருதயக் கல்லூரி, இளவாலை புனித ஹென்றி கல்லூரி, கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றில் பணிப்பாளராக நியமனம் பெற்றார்.[1][2] 1961 இல் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியை இலங்கை அரசு பொறுப்பேற்றுக் கொண்டதை அடுத்து, தியோகுப்பிள்ளை பணிப்பாளர் பதவியில் இருந்து விலகி, இளவாலை பங்குத் தந்தையாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.[4] இக்காலகட்டத்தில் கத்தோலிக்க மாணவர்களுக்காகப் பல நூல்களை எழுதி வெளியிட்டார்.[5]

தியோகுப்பிள்ளை 1967 மே 11 ஆம் நாள் யாழ் ஆயர் ஜெ. எமிலியானுஸ்பிள்ளையினால் திருகோணமலை-மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் பதில் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார்.[5][2][3] 1972 சூலை 17 இல் யாழ்ப்பாஅணம் ஆயர் எமிலியானுஸ்பிள்ளை ஆண்டகையின் மறைவை அடுத்து 1973 சனவரி 9 இல் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் ஆயராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.[2][3][4][6] 1991 டிசம்பர் 22 இல் தமது குருத்துவப் பொன்விழாவைக் கொண்டாடிய ஆயர் 1992 ஏப்ரல் 9 இல் இளைப்பாறினார்.[3][4]

கண்டி தேசிய குருக்கள் மடத்தில் இருந்த தியோகுப்பிள்ளை 1983 இல் நாட்டில் ஏற்பட்ட இனக்கலவரத்தின் காரணமாக யாழ் மறைமாவட்ட குரு மாணவர்களுடன் யாழ்ப்பாணம் திரும்பி, அங்கு புனித சவேரியார் குரு மடத்தை ஆரம்பித்தார்.[5] யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ கலாநிதி பட்டம் வழங்கிக் கௌரவித்தது.[2]

தியோகுப்பிள்ளை 2003 ஏப்ரல் 25 இல் காலமானார்.[2][3][7]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. பக். 48. http://www.noolaham.org/wiki/index.php?title=Dictionary_of_Biography_of_the_Tamils_of_Ceylon. 
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 "Bishop Deogupillai passes away". தமிழ்நெட். 26 ஏப்ரல் 2003. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=8859. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 "Bishop Jacob Bastiampillai Deogupillai". Catholic Hierarchy.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 Emmanuel, S. J. (2 May 2003). "Bishop Deogupillai - a man of sturdy faith and courageous leadership". Daily News (Sri Lanka) இம் மூலத்தில் இருந்து 20 மார்ச் 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050320214221/http://www.dailynews.lk/2003/05/02/fea03.html. 
  5. 5.0 5.1 5.2 5.3 "மறைந்த பேரருட்திரு தியோகுப்பிள்ளை ஆண்டகை!". வீரகேசரி. 18 மே 2014 இம் மூலத்தில் இருந்து 2016-10-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161004022130/http://epaper.virakesari.com/. 
  6. "History". யாழ்ப்பாணம் கத்தோலிக்க மறைமாவட்டம். Archived from the original on 2013-09-11. பார்க்கப்பட்ட நாள் 2014-08-05.
  7. "Late Bishop's services recalled at funeral". தமிழ்நெட். 28 ஏப்ரல் 2003. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=8874.