பாக்கித்தான் தேசிய நாள்

பாக்கித்தான் தேசிய நாள் அல்லது பாக்கித்தான் நாள் (Pakistan Day, உருது: یوم پاکستان, lit. யோம்-இ-பாகிஸ்தான்) அல்லது பாக்கித்தான் முன்மொழிவு நாள், அல்லது குடியரசு நாள், 1940ஆம் ஆண்டில் மார்ச் 23 அன்று முதன்முதலாக தனிநாடு முன்மொழியப்பட்டதைக் கொண்டாடும் வகையில் பின்பற்றப்படும் தேசிய விடுமுறை நாளாகும்.[1] தவிரவும் இதேநாளில் 1956இல் பாக்கித்தான் உலகின் முதல் இசுலாமியக் குடியரசாக மாறியதையும் குறிக்கின்றது. [2] இந்த நாளில் பாக்கித்தானின் படைத்துறைகள் இணைந்து படையிடை அணிவகுப்பை நடத்திக் கொண்டாடுகின்றன.[3]

பாக்கித்தான் தேசிய நாள்
یوم پاکستان
மார்ச் 23, 2007இல் இஸ்லாமாபாத்தில் நடந்த படைத்துறை அணிவகுப்பில் இரண்டு ஜேஎப்-17 தண்டர் போர் வானூர்திகள்.
அதிகாரப்பூர்வ பெயர்உருது: یوم پاکستان
யோம்-இ-பாக்கித்தான்[Note 1]
கடைபிடிப்போர் பாக்கித்தான்
முக்கியத்துவம்பாக்கித்தான் முன்மொழியப்பட்டதையும் அரசியலமைப்பையும் இந்நாள் கொண்டாடுகின்றது.
கொண்டாட்டங்கள்முழுமையான இணை படையிடை அணிவகுப்பு, தேசிய விருதுகளை அளித்தல்
அனுசரிப்புகள்பாக்கித்தான் (மற்ற நாடுகளிலுள்ள பாக்கித்தானிய தூதரகங்களில்)
நாள்23 மார்ச்
நிகழ்வுஆண்டுக்கொருமுறை


1940ஆம் ஆண்டில் மார்ச் 23ஆம் நாள் இலாகூரில் தற்போதைய மினார்-இ-பாக்கித்தான் (பொருள். பாக்கித்தான் கோபுரம்) உள்ள இடத்தில் கூடிய முசுலிம் லீக் பிரித்தானிய இந்தியாவின் வடமேற்கிலிருந்த நான்கு மாகாணங்களின் கூட்டமைப்பாக தன்னாட்சியுடைய கூட்டமைப்பு நிறுவப்பட வேண்டுமென்று அரசியல் தீர்மானம் நிறைவேற்றியது;[4][5][2][6] அந்தத் தீர்மானத்தில் பாக்கித்தான் என்ற பெயர் இடம்பெறவில்லை எனினும் அந்நாளை நினைவுகொள்ளும் வண்ணமே இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய நாளைக் கொண்டாடும் விதமாக பாக்கிதானியப் படைகள் அனைத்தும் இணைந்து படையணிவகுப்பை நடத்துகின்றன.[3][7]

ஒளிப்படங்கள் தொகுப்பு தொகு

குறிப்புகள் தொகு

  1. அலுவல்முறை பெயராக (உருது: Urdu: یوم پاکستان, lit. யோம்-இ-பாகிஸ்தான்) அல்லது பாக்கித்தான் நாள் எனப்படுகின்றது. இந்த நாள் பாக்கித்தான் தீர்மான நாள், குடியரசு நாள் (Urdu: يوم جمهوريه) அல்லது இணைந்த படையிடை அணிவகுப்பு. அலுவல்சாராது, இந்த நாள் மார்ச் 23 என்றும் அறியப்படுகின்றது.

மேற்சான்றுகள் தொகு

  1. Stacy Taus-Bolstad (April 2003). Pakistan in Pictures. Twenty-First Century Books. பக். 49. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8225-4682-5. https://books.google.com/books?id=K9QbtVadL_gC&pg=PA49. பார்த்த நாள்: 22 March 2011. 
  2. 2.0 2.1 John Stewart Bowman (2000). Columbia chronologies of Asian history and culture. Columbia University Press. பக். 372. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-231-11004-4. https://books.google.com/books?id=pg5Qi28akwEC&pg=PA372. பார்த்த நாள்: 22 March 2011. 
  3. 3.0 3.1 Agencies (23 March 2012). "Nation celebrates Pakistan Day today". The Nation இம் மூலத்தில் இருந்து 25 ஏப்ரல் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120425203627/http://www.nation.com.pk/pakistan-news-newspaper-daily-english-online/national/23-Mar-2012/nation-celebrates-pakistan-day-today. 
  4. Olson, Gillia (2005). "Holidays". Pakistan : a question and answer book. Mankato, Minn.: Capstone Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0736837574. https://archive.org/details/pakistanquestion0000olso. பார்த்த நாள்: 23 March 2015. 
  5. Singh, Sarina et al. (2008). Pakistan & the Karakoram Highway (7th ). Footscray, Vic.: Lonely Planet. 
  6. Hasan Askari Rizvi (23 March 2015). "Pakistan and March 23". Express Tribune. Express Tribune, Rizvi. http://tribune.com.pk/story/857380/pakistan-and-march-23/. பார்த்த நாள்: 23 March 2015. 
  7. DAWN.com (23 March 2015). "Pakistan holds first Republic Day parade in seven years". Dawn. Dawn News, 2015. http://www.dawn.com/news/1171371. பார்த்த நாள்: 23 March 2015. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்கித்தான்_தேசிய_நாள்&oldid=3582262" இலிருந்து மீள்விக்கப்பட்டது