பாங்காங் ஏரி

பாங்காங் ஏரி, இந்தியாவின் லடாக் ஒன்றியப் பகுதியில் உள்ள லே மாவட்டத்தின் கிழக்கில் இந்திய-திபெத் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. பாங்காங் ட்சோ என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. திபெத்திய மொழியில் ட்சோ என்பதற்கு ஏரி என்று பொருள். இது கடல் மட்டத்திலிருந்து 4350 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது 134 கிலோமீட்டர் நீளம், 5 கிலோமீட்டர் அகலம் என்ற அளவில் பரவியுள்ளது. இது இந்திய-சீனா எல்லையைப் பிரிக்கும் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டருகே அமைந்துள்ளது. இந்த ஏரியின் மூன்றில் ஒரு பகுதி இந்தியாவின் எல்லைப் பகுதியிலும், இரண்டு பகுதி திபெத்திலும் உள்ளது. இந்தியாவின் இராணுவ முக்கியத்துவமான மையமாக இந்த ஏரி கருதப்படுகிறது. [1] [2]

பாங்காங் ஏரி
அமைவிடம்லடாக் ஒன்றியப் பகுதி, இந்தியா; ருட்டோக் கவுண்டி, திபெத், சீனா
ஆள்கூறுகள்33°43′04.59″N 78°53′48.48″E / 33.7179417°N 78.8968000°E / 33.7179417; 78.8968000
வகைசோடா ஏரி
வடிநில நாடுகள்சீனா, இந்தியா
அதிகபட்ச நீளம்134 km (83 mi)
அதிகபட்ச அகலம்5 km (3.1 mi)
மேற்பரப்பளவுapprox. 700 km2 (270 sq mi)
அதிகபட்ச ஆழம்100 மீட்டர்கள் (330 அடி)
கடல்மட்டத்திலிருந்து உயரம்4,250 மீட்டர்கள் (13,940 அடி)
உறைவுகுளிர்காலத்தில்

இந்தியாவில் பாதியும், திபெத்தில் மீதியுமாக 134 கிலோமீட்டர் நீளமும், 5 கிலோமீட்டர் அகலமும் கொண்ட இந்த ஏரியின் பாதிக்கு மேற்பட்ட பகுதி திபெத் தேசத்துக்குள் பரவியுள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில், இரு நாடுகளுக்கிடையே உள்ள பிரச்சினைக்குரிய பகுதியில் அமைந்துள்ளது. இதன் நடுவே எல்லை கட்டுப்பாட்டுக் கோடு செல்கிறது.

பாங்காங் ஏரி உப்புநீர் ஏரியாக இருந்தபோதும், குளிர்காலங்களில் இதிலுள்ள நீர் முழுவதும் பனிக்கட்டியாக உறைந்து விடுகிறது. இனப்பெருக்கம் செய்யும் பறவைகள், புலம்பெயர் பறவைகள் உட்பட அதிக எண்ணிக்கையிலான பறவைகள் இனப்பெருக்கத்துக்காக பாங்காங் ஏரிக்கு வந்து செல்கின்றன. பறவைகளும், விலங்குகளும், பார் போன்ற தலையுடைய வாத்து, பிராமினி வாத்துகள், சைபீரியக் கொக்கு, நீர்க்கோழி போன்ற பறவையினங்களும், மார்மோத், கியாங்க் உள்ளிட்ட வனவிலங்குகளும் பாங்காங் ஏரியில் காணப்படுகின்றன. பாங்காங் ஏரியின் தண்ணீரில் உப்பு மிகுந்து காணப்படுவதால் நுண்ணுயிரிகளும், தாவரங்களும் மிகக் குறைவான அளவே வளர்கின்றன. எனினும், இந்த ஏரியை சுற்றிலுமுள்ள சதுப்பு நிலத்தில் சிலவகைப் பல்லாண்டு தாவரங்களும், புதர்களும் காணப்படுகின்றன.

இந்தியப் பகுதியிலுள்ள பாங்காங் ஏரியின் தோற்றம்
உறைந்த நிலையில் இந்தியப் பகுதியிலுள்ள பாங்காங் ஏரி

இதனையும் காண்க தொகு

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாங்காங்_ஏரி&oldid=3507062" இலிருந்து மீள்விக்கப்பட்டது