பாஜா குகைகள்

பாஜா குகைகள் அல்லது பஜே குகைகள் (Bhaja Caves or Bhaje caves) (மராத்தி: भाजे) இருபத்தி இரண்டு குகைகளின் தொகுப்பாகும்.[1] கிமு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்குடைவரை குகைகள், மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் உள்ள லோணாவாலா அருகில் பாஜா கிராமத்தில் நானூறு அடி உயரத்தில் உள்ளது.[2][3] மல்வலி தொடருந்து நிலையம், பாஜே கிராமத்தின் அருகில் உள்ளது.[4] இதனருகே கர்லா குகைகள் மற்றும் பேட்சே குகைகள் உள்ளது.

பாஜா குகையின் அகலப்பரப்புக் காட்சி
சைத்தியம்
நடனமாடும் மற்றும் மிருதங்கம் இசைக்கும் பெண்களின் சிற்பம்
தூபி

இந்தியத் தொல்லியல் ஆய்வகம் இக்குகைகளை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்களாக அறிவித்துள்ளது.[5][6][7]

ஈனயானம் பௌத்தப் பிரிவினருக்கு உரிய இக்குகைள்,[1] 14 தூபிகள் கொண்டுள்ளது.[2][8][9] இத்தூபிகளில் சிலவற்றில் அம்பினிகா , தம்மகிரி மற்றும் சங்கதினா போன்ற பிக்குகள் மற்றும் பிக்குணிகள் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

புகழ் பெற்ற குகை எண் 12ல் உள்ள சைத்தியத்தில் [10], மரவேலைப்பாடுகளுடன், லாட வடிவ மேற்கூரை கொண்டுள்ளது. குகை எண் 28ல் உள்ள புத்த விகாரத்தின் முற்றவெளியில் அழகிய தூண்களைக் கொண்டுள்ளது.[8] இக்குகைகள் அழகிய மரவேலைப்பாடுகளுக்கு புகழ் பெற்றதாகும்.[1] இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மிருதங்கம் இசைக்கும் மரச்சிற்பங்கள் மற்றும் நடனமாடும் மங்கைகையர்களின் சிற்பங்கள் கொண்டுள்ளது.

இக்குகைகளின் சிற்பங்கள், தலை அலங்காரம், மாலைகள் மற்றும் நகை வேலைபாடுகளுடன் கூடியது.[11]

குகை எண் 29ல் உள்ள விகாரையில் தேரோட்டும் சூரியன், யானைச் சவாரி செய்யும் இந்திரன் மற்றும் நுழைவு வாயில்களில் துவாரபாலகர்களின் சிற்பங்கள் கொண்டுள்ளது.[12]

படக்காட்சிகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Ticketed Monuments - Maharashtra Bhaja Caves, Bhaja". Archaeological Survey of India, Government of India. Archived from the original on 10 ஆகஸ்ட் 2013. பார்க்கப்பட்ட நாள் 5 July 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 Burgess, James (1880). "The caves in vicinity os Karle and the Bor Ghat". The Cave Temples of India. W.H. Allen. பக். 223–228. https://books.google.com/books?id=-HgTAAAAYAAJ&printsec=frontcover&dq=bhaja+caves&hl=en&sa=X&ei=1-PWUfWkHoOYrAflz4HYBQ&ved=0CGUQ6AEwCTgK#v=onepage&q=bhaja%20&f=false. பார்த்த நாள்: 5 July 2013. 
  3. "CHAPTER 20 PLACES OF INTEREST". Maharashtra Government - Tourism and Cultural Dept. பார்க்கப்பட்ட நாள் 6 July 2013.
  4. Malavli Railway Station
  5. "Ticketed Monuments - Maharashtra Bhaja Caves, Bhaja". Archived from the original on 2013-08-10. பார்க்கப்பட்ட நாள் 2017-08-22.
  6. "List of the protected monuments of Mumbai Circle district-wise" (PDF). Archived from the original (PDF) on 2016-09-10. பார்க்கப்பட்ட நாள் 2017-08-22.
  7. "Bhaja Caves Visitors' Sign". பார்க்கப்பட்ட நாள் 2012-10-08.
  8. 8.0 8.1 Ahir, D. C. (2003). Buddhist sites and shrines in India: history, art, and architecture (1. ). Delhi: Sri Satguru Publ.. பக். 191. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8170307740. 
  9. Schopen, Gregory (1996). Bones, stones and Buddhist monks : collected papers on the archaeology, epigraphy, and texts of monastic Buddhism in India.. Honolulu: University of Hawaii Press. பக். 175. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0824818709. https://books.google.com/books?id=rxdZ-BVNm_IC&pg=PA200&dq=bhaja+caves&hl=en&sa=X&ei=FC7XUf6tKsPTrQe654CICw&ved=0CEoQ6AEwBDge#v=onepage&q=bhaja%20caves&f=false. 
  10. "5000 Years of Indian Architecture". Archived from the original on 14 April 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-03-14.
  11. Behl, Benoy K (Sep 22 – Oct 5, 2007). "Grandeur in caves". Frontline 24 (19). http://www.frontline.in/navigation/?type=static&page=flonnet&rdurl=fl2419/stories/20071005505506600.htm. பார்த்த நாள்: 6 July 2013. 
  12. Knapp, Stephen (2009). "Karla and Bhaja Caves". Spiritual India handbook : a guide to temples, holy sites[,] festivals and traditions. Mumbai: Jaico Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8184950241. https://books.google.com/books?id=djI5mL2qeocC&pg=PT568&dq=bhaja+caves&hl=en&sa=X&ei=1-PWUfWkHoOYrAflz4HYBQ&ved=0CEsQ6AEwBDgK. பார்த்த நாள்: 6 July 2013. 

வெளி இணைப்புகள் தொகு


வார்ப்புரு:புனே மாவட்டம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஜா_குகைகள்&oldid=3718344" இலிருந்து மீள்விக்கப்பட்டது