பானுரங்சி சவாங்வாங்சே

பானுரங்சி சவாங்வோங்சே, இளவரசர் பானுபந்து வோங்செவோரதேஜ் (Bhanurangsi Savangwongse, the Prince Bhanubandhu Vongsevoradej) (11 சனவரி 1859 – 13 ஜூன் 1928) இவர் தாய்லாந்தின்மன்னர் மோங்குத், இராணி தெப்சிரிந்திரா ஆகியோரின் மகனாவார். [1] [2]

பானுரங்சி சவாங்வாங்சே
சியாமின் இளவரசன்
இளவரசர் பானுபந்து வோங்செவோரதெச்
இராணுவ நடவடிக்கை திணைக்களத்தின் தளபதி]]
அலுவலகம்1892 – 1896
முன்னையவர்சூரசக்மோன்ட்ரி
பின்னையவர்சிட்சரோன்
அலுவலகம்1899 – 1901
முன்னையவர்சிட்சரோன்
பின்னையவர்சிராபிராவதி வோரதெச்
கடற்படைத் தளபதி
அலுவலகம்17 பிப்ரவரி 1902 – 24 பிப்ரவரி 1903
பொறுப்பு29 சனவரி 1901 – 16 பிப்ரவரி 1902
முன்னையவர்ஆண்ட்ரியாஸ் டு பிளெசிஸ் டி ரிச்செலியூ
பின்னையவர்பரிபத்ரா சுகும்பந்து
சியாமிய பேரரசின் கடற்படையின் தலைமை இயக்குநர்
அலுவலகம்19 சூன் 1920 –31 ஆகத்து 1922
முன்னையவர்பரிபத்ரா சுகும்பந்து
அமைச்சர்
பின்னையவர்அபகர கியார்டிவொங்சே
அமைச்சர்
பிறப்பு(1859-01-11)11 சனவரி 1859
பேங்காக், தாய்லாந்து
இறப்பு13 சூன் 1928(1928-06-13) (அகவை 68)
பேங்காக், தாய்லாந்து
துணைவர்
  • மேன் புன்னாக்
  • லியாம் சுபாசுத்
  • சன் பக்சிவோங்சே
  • லேப் சத்திகாரத்
  • லெக் யோங்சையுட்
  • யியாம் நா பாங்சாங்
  • யோய் கோமராகுல் நா நாகரா
குழந்தைகளின்
பெயர்கள்
11 மகன்களும், மகள்களும்
மரபுBhanubandh family (சக்ரி வம்சம்)
தந்தைமோங்குத் (நான்காம் ராமா)
தாய்தெப்சிரிந்திரா
இராணுவப் பணி
சார்புதாய்லாந்து Royal Siamese Army
தாய்லாந்து Royal Siamese Navy
தரம் Field Marshal
Admiral of the Fleet

இளவரசர் தனது மூத்த சகோதரரும், மன்னருமான சுலலாங்கொர்னின் அரசாங்கத்தில் சியாமியப் பேரரசின் இராணுவத்தின் தளபதி பதவி உட்பட பல பதவிகளை வகித்த போதிலும், இவர் தாய் அஞ்சல் சேவையின் நிறுவனராகவும், வஜிராவுத் மன்னரின் ஆட்சியின்போது சையாமையப் பேரரசின் இராணுவத்தில் முதல் பீல்ட் மார்ஷல் என சிறப்பாக நினைவுகூரப்படுகிறார்.. [3]

இளவரசர் பீரா என்று நன்கு அறியப்படும், இவரது மகன் இளவரசர் பிரபொங்சே பானுதெச் பார்முலா 1 பந்தய வீரராவார். [4]

ஆரம்பகால வாழ்க்கையும், கல்வியும் தொகு

 
பொது அஞ்சல் அலுவலகத்தின் (பேங்காக்) முன் இளவரசர் பானுரங்சி சவாங்வாங்சேயின் சிலை

இளவரசர் பானுரங்சி சவாங்வாங்சே என்றப் பெயரில் 1860 சனவரி 11 அன்று பேங்காக்கின் பெரிய அரண்மனையில் பிறந்தார். இவருக்கு சுலலாங்கொர்ன், இளவரசி சந்திரமண்டோல் மற்றும் இளவரசர் சதுரோன்ராஸ்மி உட்பட 3 சகோதர சகோதரிகள் இருந்தனர் . 2 ஆண்டுகளுக்குப் பிறகு, இவரது தாயார் இறந்தார். பின்னர், இவரது தந்தை இவரது 10 வயதில் இறந்தார். மன்னர் மோங்குத்தின் இறுதி சடங்கு ஊர்வலத்தில் அரிசியை சிதறடித்தார். இவருக்கு 12 வயதாக இருந்தபோது, இவரை சுலலாங்கொர்ன் மன்னர் "மாண்புமிகு இளவரசராக" நியமித்தார். பெரிய அரண்மனையின் மகா பிரசாத் சிம்மாசன மண்டபத்தில் ஒரு அரச விழாவை நடத்தவும் செய்தார். இவருக்கு 13 வயதானபோது வாட் பிரசிறீ ரத்தின சசாதகரத்தில் புதிய நியமிப்பை பெற்றார். [5]

இவர், பெண் ஆசிரியர்களின் பள்ளியில் தனது படிப்பைத் தொடங்கினார். அதன்பிறகு, கெமர், பாலி ஆகியோரின் புத்தகங்களை பிராயா பிரியத்தி தம்மதா பணியகத்தில் பயின்றார். அதன்பிறகு, இவர் 1872 முதல் அரசரின் காவலர் பணியகத்தில் இராணுவக் கல்வியைப் பயின்றார். மேலும் பிராயா சிறீசூந்தோர்ன் வகாம் (நொய் அஜாராயங்குல்) என்பவரிடமிருந்து தாய் மொழியைக் கற்றுக்கொண்டார். இதில் ஆட்சிப்பணி மரபுகள் மற்றும் இளவரசர் மகாமாலா, இளவரசர் பம்ரப்போரபக்கிடமிருந்து அரச மரபுகள் ஆகியவற்றைப் படித்தார். [6]

தொழில் தொகு

அரசரின் காவலர் பணியகத்தில் முதல் லெப்டினன்ட்டாக சிறப்பு அதிகாரி பதவியில் இராணுவ சேவையில் இவர் சேர்ந்தார். மன்னர் சுலலாங்கொர்ன் சிங்கப்பூர் (2 வது முறை), பர்மா, இந்தியா, இங்கிலாந்தின் சில பகுதிகள், மலாயாவின் மேற்கு கடற்கரை ஆகிய இடங்களுக்கு பயணம் செய்யத் தொடங்கியபோது இவரும் உடன் சென்றார். மன்னர் சுலலாங்கொர்னின் குழு, முதன்மைக்குழுவின் அமைச்சர், பாதுகாப்பு அமைச்சக தலைவர், மன்னர் ஆறாம் ராமாவின் முதன்மைக்குழுவின் தலைவர், காவல்துறை தலைவர், கடற்படைத் துறை தளபதி, அஞ்சல் மற்றும் தந்தி துறையின் தலைமை இயக்குநர் போன்ற பல பதவிகளை இவர் வகித்துள்ளார்.

இறப்பு தொகு

இவர் 1928 சூன் 13 அன்று புராஃபாபிரோம் அரண்மனையில் தனது 68 வயதில் இறந்தார்.

வாரிசுகள் தொகு

இவருக்கு 9 மகன்களும், 7 மகள்களும் என 16 குழந்தைகள் இருந்தனர்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பானுரங்சி_சவாங்வாங்சே&oldid=3042472" இலிருந்து மீள்விக்கப்பட்டது