பாரத் டைனமிக்ஸ் லிமிடெட்

பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (Bharat Dynamics Limited, BDL, இந்தி: भारत डायनामिक्स लिमिटेड ) இந்தியாவின் படைக்கலங்களையும் ஏவுகணைகளையும் தயாரிக்கும் நிறுவனம் ஆகும். 1970ஆம் ஆண்டு ஆந்திரத் தலைநகர் ஐதராபாத்தில் நிறுவப்பட்டது. [1]

பாரத் டைனமிக்ஸ் லிமிடெட்
வகைபொதுத்துறை நிறுவனம்
நிறுவுகை1970
தலைமையகம்ஐதராபாத், இந்தியா
சேவை வழங்கும் பகுதிஇந்தியா
தொழில்துறைஏவுகணை உற்பத்தி
இணையத்தளம்www.bdl.ap.nic.in

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் சிறு நவரத்தின மதிப்பைப் பெற்ற நிறுவனம் ஆகும்.

தயாரிப்புகள் தொகு

இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட படைக்கலங்களை தயாரிப்பதற்காக இந்த நிறுவனம் நிறுவப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்புடன் இணைந்து இந்தியாவின் ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. பாரத் டைனமிக்சில் தயாரான முதல் ஏவுகணை பிரித்திவி ஆகும். [2]

1998ஆம் ஆண்டில் பிடிஎல் தயாரித்த அக்னி ஏவுகணைகள் இந்தியப் படைத்துறையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தியப் படைத்துறைக்கு வேண்டிய பிற ஏவுகணைகளையும் அமைப்புகளையும் பிடிஎல் தயாரித்தளிக்கிறது. இவற்றில் பீரங்கிவண்டிகளுக்கு எதிரான கொங்கூர் ஏவுகணைகள் குறிப்பிடத்தக்கவை.[3]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Bharat Dynamics Limited". Bdl.ap.nic.in. Archived from the original on 2010-12-30. பார்க்கப்பட்ட நாள் 2010-12-22.
  2. "Defence test-fires two Prithvi-2 missiles in quick succession". The Hindu Business Line. 2009-10-13. பார்க்கப்பட்ட நாள் 2010-12-22.
  3. "Bharat Dynamics Limited". Bdl.ap.nic.in. Archived from the original on 2009-07-27. பார்க்கப்பட்ட நாள் 2010-12-22.