பாரா மாவட்டம்

பாரா மாவட்டம் (Bara District) (நேபாளி: बारा जिल्ला Listen) தென் கிழக்கு நேபாள நாட்டின் தெராய் சமவெளியில், மாநில எண் 2-இல் உள்ள எட்டு மாவட்டங்களில் ஒன்றாக பாரா மாவட்டம் அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் கலையா நகரம் ஆகும். நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும்.

நேபாள நாட்டின் மாநில எண் 2-இல் அமைந்த பாரா மாவட்டம்

இம்மாவட்டத்தின் தெற்குப் பகுதி இந்தியாவின் பிகார் மாநிலத்தை எல்லையாகக் கொண்டது.

பாரா மாவட்டத்தின் பரப்பளவு 1,190 சதுர கிலோ மீட்டராகும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுபின் படி பாரா மாவட்டத்தின் மக்கள் தொகை 6,87,708 ஆகும்.[1] பகையா, ஜமுனியா, பாசஹா, துத்தௌரா மற்றும் பங்காரி இம்மாவட்டத்தில் முக்கிய ஆறுகள் ஆகும். இம்மாவட்டத்தில் போஜ்புரி மொழி (72%), மைதிலி மொழி (9.7%), நேபாள மொழி (18.3%) மற்றும் பஜ்ஜிகா மொழிகள் பேசப்படுகிறது.

வேளாண்மை தொகு

இம்மாவட்டம் தராய் நேபாளத்தின் சமவெளியில் அமைந்திருப்பதால் கோதுமை, சோளம், காய்கறிகள், உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், காரட், காலிபிளவர், பீட்ரூட், மிளகாய், கொத்தமல்லி, முட்டைக்கோஸ் போன்றவைகள் நன்கு விளைகின்றன.

திருவிழா தொகு

காத்திமாய் கோயிலில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் காத்திமாய் திருவிழாவின் போது ஆடு, கோழி போன்ற விலங்குகள் அம்மனுக்கு பலியிடப்படுகிறது.[2][3]

புவியியல் மற்றும் தட்ப வெப்பம் தொகு

நேபாளத் தட்ப வெப்பம்[4] உயரம் பரப்பு  %
Lower Tropical climate 300 மீட்டருக்கும் கீழ் 86.6%
Upper Tropical 300 - 1,000 மீட்டர்கள் 13.4%

கிராம வளர்ச்சி சபைகள் மற்றும் நகராட்சிகள் தொகு

 
பாரா மாவட்ட கிராம வளர்ச்சி சபைகள் மற்றும் நகராட்சிகளின் (நீலம்) வரைபடம்

பாரா மாவட்டம் 107 கிராம வளர்ச்சி சபைகள் கொண்டது.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "National Population and Housing Census 2011(National Report)". Government of Nepal. Central Bureau of Statistics. November 2012 இம் மூலத்தில் இருந்து April 18, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130418000000/http://cbs.gov.np/wp-content/uploads/2012/11/National%20Report.pdf. பார்த்த நாள்: November 2012. 
  2. Ram Chandra, Shah. "Gadhimai Temple Trust Chairman, Mr Ram Chandra Shah, on the decision to stop holding animal sacrifices during the Gadhimai festival:" (PDF). Humane Society International. பார்க்கப்பட்ட நாள் 29 July 2015.
  3. Meredith, Charlotte (29 July 2015). "Thousands of Animals Have Been Saved in Nepal as Mass Slaughter Is Cancelled". Vice News. Vice Media, Inc.. https://news.vice.com/article/thousands-of-animals-have-been-saved-in-nepal-as-mass-slaughter-is-cancelled?utm_source=vicenewsfb. பார்த்த நாள்: 29 July 2015. 
  4. The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), . Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, ISBN 87-7903-210-9, பார்க்கப்பட்ட நாள் Nov 22, 2013

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bara District
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரா_மாவட்டம்&oldid=3099660" இலிருந்து மீள்விக்கப்பட்டது