பாரிஸ் உடன்படிக்கை (1898)

பாரிசு உடன்படிக்கை 1898, 30 இயற்றுச்சட்டம். 1754,எசுப்பானியப் பேரரசு அமெரிக்க ஐக்கிய நாட்டிடம் கியூபாவின் கட்டுப்பாட்டை இழந்ததையும் புவேர்ட்டோ ரிக்கோ, எசுப்பானிய மேற்கிந்தியத் தீவுகளின் சில பகுதிகள், குவாம் தீவு மற்றும் பிலிப்பீன்சை அந்நாட்டிற்கு வழங்கியதையும் ஆவணப்படுத்துகின்ற 1898இல் ஏற்பட்ட உடன்படிக்கை ஆகும். பிலிப்பீன்சை அமெரிக்காவிற்கு மாற்றிக்கொள்ள எசுப்பானியப் பேரரசுக்கு ஐக்கிய அமெரிக்கா $20 மில்லியன் கொடுத்தது.[1] எசுப்பானிய அமெரிக்கப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த இந்த உடன்படிக்கை திசம்பர் 10, 1898 அன்று கையெழுத்தானது. இந்த உடன்பாடு ஏப்ரல் 11, 1899 முதல் செயற்பாட்டிற்கு வந்தது.[2]

இந்த உடன்படிக்கையை அடுத்து அமெரிக்காக்களிலும் பசிபிக் தீவுகளிலும் எசுப்பானியப் பேரரசின் ஆட்சி முடிவுற்றது; உலக வல்லமை நாடாக ஐக்கிய அமெரிக்காவின் காலம் துவங்கியது.

மேற்சான்றுகள் தொகு

  1. Puerto Rico is spelled as "Porto Rico" in the Treaty of Paris. "Treaty of Peace Between the United States and Spain; December 10, 1898". யேல் பல்கலைக்கழகம். 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-05-01.
  2. Charles Henry Butler (1902). The treaty making power of the United States. The Banks Law Pub. Co.. பக். 441. http://books.google.com/books?id=Cp8FAAAAMAAJ&pg=PA441. பார்த்த நாள்: 9 April 2011. 

வெளியிணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Treaty of Paris, 1898
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரிஸ்_உடன்படிக்கை_(1898)&oldid=2166899" இலிருந்து மீள்விக்கப்பட்டது