பார்கோடு என்பது குறிப்பிட்ட பொருட்களின் மீது அதுபற்றிய சில தகவல்களைக் காண்பிக்கும் ஒளியியல் பொறியால் படிக்கப்படக்கூடிய தரவின் குறிப்பிடுதல் ஆகும். பார்கோடுகள் முதலில் அகலங்கள்(வரிகள்) மற்றும் இணை வரிகளின் இடைவெளிகள் ஆகியவற்றின் மூலம் தகவலைக் குறிப்பிடுவதாக இருக்கிறது. மேலும் அவை நேரோட்ட அல்லது 1D (1 பரிமாணம்) பார்கோடுகள் அல்லது குறியியல்கள் போன்றவையாக குறிப்பிடப்படலாம். அவை சதுரங்கள், புள்ளிகள், அறுகோணங்கள் போன்ற உருப்படிமங்கள் மற்றும் 2D (இரு பரிமாணம்) அணிக்குறிகள் அல்லது குறியியல்கள் என்று அழைக்கப்படும் படங்களினுள் மற்ற வடிவவியல் உருப்படிமங்கள் ஆகியவையாகவும் வருகின்றன. 2D அமைப்புகள் துண்டுகளுக்குப் பதிலாக குறியீடுகளைப் பயன்படுத்திய போதும் அவை பொதுவாக பார்கோடுகள் என்றே குறிப்பிடப்படுகின்றன. பார்கோடுகளை பார்கோடு படிப்பிகள் (barcode readers) என்று அழைக்கப்படும் ஒளியியல் ஸ்கேனர்கள் அல்லது சிறப்பு மென்பொருளால் உருவத்தை ஸ்கேன் செய்வதன் மூலமாகப் படிக்க முடியும்.

யூ.பீ.சி-A பார்கோடு அடையாளம்.
பார்கோடாக விக்கிப்பீடியா எழுதப்பட்டுள்ளது.

பபிள்கம்களே முதன் முதலில் பார்கோடு அச்சிடப்பட்டு வெளிவந்த பொருட்களாகும்[1]. பார்கோடுகளின் முதல் பயன்பாடு இரயில்பாதை வண்டிகளின் விவரக்குறிப்பைக் குறிப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் அவை தானியங்கி சிறப்பங்காடி வெளியேறும் அமைப்புகளில் பயன்படுத்தப்படும் வரை வணிகரீதியாக வெற்றிபெறவில்லை. அந்த முறை தற்போது கிட்டத்தட்ட உலகளாவிய அளவில் பயன்படுத்தப்படுகிறது. பின்னர் அவற்றின் பயன்பாடு மற்ற பயன்பாட்டிற்கும் பரவியது. அந்தப் பணிகள் பொதுவாக ஆட்டோ ஐடி டேட்டா கேப்ச்சர் (ஏ.ஐ.டி.சி.) என்று குறிப்பிடப்பட்டன. மற்ற அமைப்புகள் ஏ.ஐ.டி.சி. சந்தையில் நுழைவதற்கான முயற்சிகள் மேற்கொண்டன. ஆனால் பார்கோடுகளின் எளிமை, பொதுமை மற்றும் குறைந்த விலை போன்றவை மற்ற அமைப்புகளின் பங்களிப்பைக் கட்டுப்படுத்தின. பார்கோடுகளை நடைமுறைப் படுத்துவதற்கு 0.5¢ (அமெரிக்கா) செலவானது. அதே சமயம் எதிரிடை ஆர்.எஃப்.ஐ.டி. இன்றும் ஒரு டேகுக்கு 7¢ முதல் 30¢ வரை இருக்கிறது.[2]

வரலாறு தொகு

1948 ஆம் ஆண்டு உள்ளூர் உணவுச் சங்கிலி அமைப்பின் தலைவர் அவரது முதல்வரிடம் அவர்களது நிறுவனத்தில் இருந்து பொருட்கள் வெளியேறும் சமயத்தில் தானாகவே பொருள்பற்றிய தகவலை ஆய்வு செய்யும் அமைப்பை உருவாக்கக் கோரியதை அமெரிக்காவின் பிலடெல்பியாவின் ட்ரெக்சல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியின் பட்டப்படிப்பு மாணவரான பெர்னார்ட் சில்வர் (Bernard Silver) (1924–63) கேட்க நேர்ந்தது. சில்வர் இந்தக் கோரிக்கை குறித்து அவரது நண்பர் நார்மன் ஜோசப் உட்லேண்டிடம் (Norman Joseph Woodland) (1921-) தெரிவித்தார். பின்னர் இருவரும் இணைந்து பல்வேறு அமைப்புகளை உருவாக்கப் பணியாற்றினர். அவர்களது முதல் நன்கு வேலை செய்த அமைப்புக்கு புற ஊதா மை பயன்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் அது மிகவும் மங்கலானதாகவும் செலவு அதிகம் பிடிப்பதாகவும் இருந்தது.[3]

எனினும் தொடர்ந்த மேம்பாடுகளுடன் அந்த அமைப்பை நன்றாக உருவாக்கிவிட முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டது. ட்ரெக்சலில் இருந்து அவரது பணியில் இருந்து உட்லேண்ட் விலகினார். மேலும் ஃப்ளோரிடாவில் உள்ள அவரது தந்தையில் அடுக்குமாடிக் குடியிருப்புக்குச் சென்று அந்த அமைப்புக்காகத் தொடர்ந்து பணியாற்ற ஆரம்பித்தார். அவரது அடுத்த ஊக்கம் மோர்ஸ் தந்திக்குறிப்பில் இருந்து வந்தது. கடற்கரை மணலில் அவர் "புள்ளியை விரிவாக்கி இறங்குமுகமாக கோடுகளை உருவாக்கி அவற்றுக்கு வெளியே குறுகலான வரிகள் மற்றும் அகன்ற வரிகளை உருவாக்கிய போது" முதன் முதலில் பார்கோடு வடிவம் பெற்றது.[3] அதனைப் படிப்பதற்காக அவர் திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் ஒளியியல் சவுண்ட்டிராக்கில் இருந்து தொழில்நுட்பத்தைப் பின்பற்றினார். அதில் தூரத்தில் இருந்து RCA935 ஒளிபெருக்கிக் குழாயினுள் தாள் வழியாக 500 வாட் ஒளி விளக்குப் பளபளப்பு பயன்படுத்தப்படும். அவர் பின்னர் அவரது அமைப்பு வரிக்குப் பதிலாக வட்டத்தினை அச்சிட்டால் வேலை செய்யும் என்று முடிவு செய்தார். அது எந்த திசையில் இருந்தும் ஸ்கேன் செய்யும் வசதிக்கு வழிவகுத்தது.

1949 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் நாள் உட்லேண்ட் மற்றும் சில்வர் இருவரும் "கருவி மற்றும் முறையை வகை பிரிப்பதற்கான" காப்புரிமை விண்ணப்பத்தினை சமர்ப்பித்தனர். அதில் அவர்கள் நேரோட்ட மற்றும் புல்ஸை அச்சு உருப்படிமங்களை விவரித்திருந்தனர். அத்துடன் குறியைப் படிப்பதற்குத் தேவைப்படும் இயந்திரமுறை மற்றும் மின்னணுவியல் அமைப்புகளையும் விவரித்திருந்தனர். அதற்கான காப்புரிமை 1952 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் நாள் அமெரிக்கக் காப்புரிமை 2,612,994 ஆக வழங்கப்பட்டது. 1951 ஆம் ஆண்டில் உட்லேண்ட் ஐ.பி.எம்.மில் இணைந்தார். இந்த அமைப்பின் மீது ஐ.பி.எம்.மிற்கு ஆர்வம் வரவழைப்பதற்குத் தொடர்ந்து முயற்சித்து வந்தார். அந்த நிறுவனம் இறுதியாக இந்த கருத்து தொடர்பான அறிக்கைக்கு ஆணை பிறப்பித்தது. அதன் படி இது சாத்தியமானதாகவும் ஆர்வம் மிகுந்ததாகவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதன் முடிவுத் தகவலை நடைமுறைப் படுத்துவதற்கு தேவைப்படும் உபகரணங்களுக்கு சில காலங்கள் தேவையாக இருந்தது.

1952 ஆம் ஆண்டில் பில்கோ அதன் காப்புரிமையை வாங்கியது. பின்னர் அதனை அதே ஆண்டில் ஆர். சி. ஏ.விற்கு விற்றது. 1963 ஆம் ஆண்டில் சில்வர் ஒரு கார் விபத்தில் மரணமடைந்தார்.

சில்வானியாவில் கோல்லின்ஸ் தொகு

டேவிட் கோல்லின்ஸ் (David Collins) அவரது இளங்கலைப் பட்டப்படிப்பு சமயத்தில் பென்சில்வேனியா இருப்பாதையில் பணியாற்றினார். மேலும் அவர் தொடர் வண்டிகளைத் தானாகவே கண்டறிய வேண்டியதன் அவசியத்தை உணர்ந்திருந்தார். 1959 ஆம் ஆண்டில் எம்.ஐ.டி. இல் இருந்து அவரது முதுகலைப் பட்டத்தைப் பெற்ற பிறகு உடனடியாக அவர் சில்வானியாவில் பணியாற்றத் தொடங்கினார். மேலும் இந்த பிரச்சினை குறித்து விளக்கத் தொடங்கினார். அவர் நீலம் மற்றும் மஞ்சள் பிரதிபலிப்புக் கோடுகளைப் பயன்படுத்தி வண்டிகளின் பக்கங்களில் இணைக்கக்கூடிய அமைப்பை உருவாக்கினார். அவற்றில் ஆறு இலக்க நிறுவன அடையாளங்காட்டி மற்றும் நான்கு இலக்க வண்டி எண் இடம்பெற்றிருந்தது. ஒளிப் பிரதிபலிப்புக் கோடுகள் நீலம் அல்லது மஞ்சள் வடிகட்டப்பட்ட இரண்டு ஒளிபெருக்கிகளுள் ஒன்றில் நுழைக்கப்பட்டது.[சான்று தேவை]

போஸ்டன் மற்றும் மெய்னெ இருப்புப்பாதை அவர்களது கிராவல் வண்டிகளில் 1961 ஆம் ஆண்டும் இந்த அமைப்பைச் சோதனை செய்தது. அந்தச் சோதனைகள் 1967 ஆம் ஆண்டு அமெரிக்க இருப்புப்பாதைகளின் கூட்டமைப்புகள் (Association of American Railroads) (ஏ.ஏ.ஆர்) வட அமெரிக்கத் தொகுதி முழுவதும் பயன்படுத்த முடிவு செய்தது வரை தொடர்ந்தது. அதனை நிறுவுதல் அக்டோபர் 10, 1967 அன்று தொடங்கப்பட்டது. எனினும் 1970 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் பொருளாதாரச் சரிவு மற்றும் அந்தத் துறையில் திவால் நிலைகள் அதிகரிப்பு ஆகியவற்றினால் அதனைப் பெருக்குதல் பெருமளவில் குறைந்தது. மேலும் 1974 ஆம் ஆண்டு வரை தொகுதியில் 95% பணிகள் முடிவடையவில்லை. மேலும் வருத்தம் அளிக்கும் விதமாக அந்த அமைப்புச் சில பயன்பாடுகளில் மாசினால் எழுதினால் பழுதடைந்து அதன் துல்லியத்தன்மை பெருமளவில் பாதிக்கப்பட்டது. ஏ.ஏ.ஆர் அந்த அமைப்பை 1970 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் கைவிட்டது. 1980 ஆம் ஆண்டுகளின் மத்தியில் அதே போன்ற அமைப்பு அறிமுகப்படுத்தப்படும் வரை அது பயன்படுத்தப்படவில்லை. இந்த முறை அது ரேடியோ டேகுகளைச் சார்ந்ததாக இருந்தது.[சான்று தேவை]

அந்த இருப்புப்பாதைத் திட்டம் நிறுத்தப்பட்டது. ஆனால் நியூ ஜெர்சியில் உள்ள கட்டணப் பாலத்தில் வண்டிகளில் மாதாந்திர பயணச்சீட்டுக்கான கட்டணம் கட்டப்பட்டதைத் துரிதமாக ஸ்கேன் செய்வதற்கான இதே போன்ற அமைப்பை உருவாக்குவதற்கான கோரிக்கை வைக்கப்பட்டது. பின்னர் அமெரிக்க தபால் அலுவலகம் அவர்களது இடங்களில் இருந்து சரக்கு வண்டிகள் நுழைவது மற்றும் வெளியேறுவதைக் கண்காணிப்பதற்கான அமைப்பை உருவாக்குவதற்கான கோரிக்கை வைத்தது. இந்தப் பயன்பாடுகளுக்குச் சிறப்பு பின்புறப் பிரதிபலிப்பு வில்லைகள் தேவைப்பட்டன. இறுதியாக கால் கான் (Kal Kan) சில்வானியா குழுவினரிடம் வளர்ப்புப் பிராணிகள் உணவு விவரக்குறிப்புக் கட்டுப்பாட்டுக்காகப் பயன்படுத்தப்படுவதற்கான எளிமையான (மற்றும் விலை மலிவான) பதிப்பை உருவாக்கக் கேட்டது. இது சிறிது சிறிதாக மளிகை வியாபாரத்தில் நுழைவதற்கு வழிவகுத்தது.[சான்று தேவை]

கம்ப்யூட்டர் ஐடென்டிடிக்ஸ் தொகு

1967 ஆம் ஆண்டில் இருப்புப்பாதை அமைப்பில் அனுபவம் வாய்ந்த கொல்லின்ஸ் மற்ற துறைகளில் கருப்பு வெள்ளை நிறத்திலான குறியீட்டுப் பதிப்பை உருவாக்குவதற்காக நிர்வாகத்தின் நிதி உதவியினை எதிர்நோக்கினார், அவர்கள் அதனை நிராகரித்தனர். மேலும் இருப்பாதைத் திட்டம் போதுமான அளவிற்கு நீண்டதாக இருக்கிறது அதனை இவ்வளவு விரைவாக வெளியிட இயலாது என்று தெரிவித்து விட்டனர்.

கொல்லின்ஸ் பின்னர் சில்வானியாவில் இருந்து வெளியேறி கம்ப்யூட்டர் ஐடென்டிடிக்ஸை உருவாக்கினார். கம்ப்யூட்டர் ஐடென்டிடிக்ஸ் ஒளி விளக்குகளுக்குப் பதிலாக ஹீலியம் நியான் லேசர்களை வைத்து பணியாற்ற ஆரம்பித்தது. அதில் ஸ்கேனருக்கு சில அடிகள் முன்பாக பார்கோடினை இடம்பெறச் செய்து கண்ணாடியுடன் ஸ்கேன் செய்யப்பட்டது. இது முழுச் செயல்பாட்டையும் மிகவும் எளிமையானதாகவும் மிகவும் நம்பத்தக்கதாகவும் மாற்றியது. அத்துடன் முழுமையான பகுதிகளைப் படிப்பதன் மூலமாக பிளவுபட்ட குறியீடுகளைப் படிப்பதற்கும் அனுமதித்தது.

கம்ப்யூட்டர் ஐடென்டிடிக்ஸ் அவர்களது முதல் இரண்டு அமைப்புகளை 1969 ஆம் ஆண்டில் முன்பகுதியில் நிறுவினர். அதில் ஒன்று மிச்சிகனில் உள்ள போண்டியாக்கில் ஜெனரல் மோட்டார்ஸ் (General Motors) தொழிற்சாலையில் நிறுவப்பட்டது. மற்றொன்று நியூஜெர்சியில் உள்ள கார்ல்ஸ்டாட்டில் உள்ள விநியோக மையத்தில் நிறுவப்பட்டது.[சான்று தேவை] ஜெனரல் மோட்டார்ஸ் அமைப்பு அந்தத் தொழிற்சாலையில் உருவாக்கப்படும் 18 மாடல்களின் விவரக்குறிப்பில் கார் அச்சுக்களை அடையாளம் காணுவதற்காகப் பயன்படுத்தப்பட்டது.

யூ.பீ.சி தொகு

1966 ஆம் ஆண்டில் உணவுச் சங்கிலியின் தேசியக் கூட்டமைப்பு (National Association of Food Chains) (என்.ஏ.எஃப்.சி) தானியங்கு வெளியேற்ற அமைப்பை உருவாக்குவது குறித்து சந்திப்பை நிகழ்த்தியது. முதல் உட்லேண்ட் காப்புரிமையின் உரிமையை வாங்கி வைத்திருக்கும் ஆர்.சி.ஏ ஆனது அந்தச் சந்திப்பில் கலந்து கொண்டு புல்ஸ்ஐ குறியீடு சார்ந்த அமைப்பினை உருவாக்குவதற்கு உள்ளமை திட்டத்தை அமைத்தது. அதனை கிரோகர் (Kroger) மளிகைச் சங்கிலி தானாகவே அதனைச் சோதனை செய்ய முன்வந்தது.

1970 ஆம் ஆண்டின் மத்தியில் சமச்சீர் மளிகை பொருள் குறியீடு (Uniform Grocery Product Code) சார்ந்த அமெரிக்கச் சிறப்பங்காடிக்கான தனிப்பட்ட செயற்குழுவை என்.ஏ.எஃப்.சி நிறுவியது. அது பார்கோடு மேம்பாட்டுக்கான வழிமுறைகளை அமைத்தது, இந்த அணுகுமுறையைத் தரப்படுத்துவதற்கு உதவுவதற்காக குறியீட்டுத் தேர்ந்தெடுப்பு உப செயற்குழுவை உருவாக்கியது. ஆலோசனை நிறுவனமான மெக்கின்சே & கோவின் ஒத்துழைப்புடன் அவர்கள் எந்தப் பொருளையும் அடையாளம் காணுவதற்கு தரப்படுத்தப்பட்ட 11 இலக்கக் குறியீட்டினை உருவாக்கினர். அந்தச் செயற்குழு பின்னர் அந்தக் குறியீட்டை அச்சிடுவதற்கும் படிப்பதற்குமான பார்கோடு அமைப்பை உருவாக்குவதற்கு ஒப்பந்தத்தை வெளியிட்டது. சிங்கர் (Singer), நேசனல் கேஷ் ரிஜிஸ்டர் (National Cash Register) (NCR), லிட்டோன் இன்டஸ்ட்ரீஸ் (Litton Industries), ஆர்.சி.ஏ, பிட்னீ-பவ்ஸ் (Pitney-Bowes), ஐ.பி.எம் மற்றும் பல நிறுவனங்களிடம் அதற்கான கோரிக்கை சென்றது.[4] நேரோட்டக் குறியீடுகள், ஆர்.சி.ஏவின் புல்ஸ்ஐ பொதுமைய வட்டக் குறியீடு, ஸ்டார்பர்ஸ்ட் உருப்படிமத்துடன் கூடிய அமைப்புகள் மற்றும் விவரிக்க இயலாத பல்வேறு வகைகள் போன்ற பரவலான வகையிலான பார்கோடு அணுகுமுறைகள் ஆய்வு செய்யப்பட்டன.

1971 ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் ஆர்.சி.ஏ அதன் புல்ஸ்ஐ குறியீட்டை மற்றொரு சந்திப்பில் செயல்படுத்திக் காட்டியது. மேலும் அந்த சந்திப்பில் ஆர்.சி.ஏ சாவடியில் இருந்த கூட்டத்தைக் கவனித்த ஐ.பி.எம் நிர்வாகிகள் உடனடியாக அவர்களது சொந்த அமைப்பை உருவாக்க முனைந்தனர். அந்த அமைப்பை உருவாக்கியவரான உட்லேண்ட் இன்னும் அந்த நிறுவனத்திலேயே பணியாற்றுகிறார். மேலும் அவர் மேம்பாட்டுக்கு வழவகுக்க வட கரோலினாவில் புதிய வசதிகளை அமைத்துக் கொடுத்தார் என ஐ.பி.எம் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் நிபுணர் ஆலெக் ஜேப்லோனோவர் (Alec Jablonover) நினைவு கூர்ந்தார்.

1972 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஆர்.சி.ஏ, சின்சின்னாட்டியில் உள்ள க்ரோகர் ஸ்டோரில் அவர்களது அமைப்பை 18 மாத சோதனைக்கு உட்படுத்தத் தொடங்கியது. பார்கோடுகள் ஒட்டும் தன்மையுள்ள தாளில் சிறிய பகுதிகளில் அச்சிடப்பட்டு அந்த ஸ்டோரின் பணியாளர்கள் மூலமாக அவர்கள் விலைக் குறிப்பிடும் போது கையால் இணைக்கப்பட்டன. அந்தக் குறியீடு மிகவும் சிக்கல் நிரம்பியதாக இருந்தது. அச்சு சமயத்தில் தாள் நகரும் திசையில் சில நேரங்களில் மைப்பூச்சு அழுத்தமாக விழுந்தது. அதனால் பெரும்பாலான அமைப்புக்களில் குறியீடு படிக்க முடியாததாக இருந்தது. எனினும் ஐ.பி.எம்மில் உட்லேண்ட் மூலமாக உருவாக்கப்பட்ட நேரோட்டக் குறியீடு போன்ற ஒன்று வில்லைகளின் திசையில் அச்சிடப்பட்டது. அதனால் கூடுதல்மை படிக்க வேண்டியவற்றை விட்டு விட்டு குறியீட்டினை "நீட்டித்து" விடுகிறது. மேலும் 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி ஐ.பி.எம் யூ.பீ.சி குறியீடு என்.ஏ.எஃப்.சி மூலமாக அவர்களது தரநிலையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. எதிர்கால தொழிற்துறைத் தேவைகளுக்காக யூ.பீ.சி A, B, C, D மற்றும் E ஆகிய ஐந்து யூ.பி.சி குறியியல் பதிப்புகளை ஐ.பி.எம். வடிவமைத்திருந்தது.[5]

என்.சி.ஆர் அமெரிக்காவில் ஒஹியோவில் உள்ள ட்ராயில் மார்ஷின் சிறப்பங்காடியில் உபகரணங்களை உருவாக்கும் தொழிற்சாலைக்கு அருகில் சோதனைப்படுக்கை அமைப்பை நிறுவியது. 1974 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் நாள் கிளைட் டாவ்சன் (Clyde Dawson) அவரது கூடையில் இருந்து ஜூசி ஃப்ரூட் கம் 10 இருந்த சிப்பத்தை இழுத்தார் அது அன்று 8:01 முற்பகலில் ஷாரோன் புச்சனன் (Sharon Buchanan) மூலமாக ஸ்கேன் செய்யப்பட்டது. அந்த கம் சிப்பம் மற்றும் அதன் இரசீது இரண்டும் தற்போது ஸ்மித்ஸோனியன் இன்ஸ்டிட்யூசனில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதுவே யூ.பீ.சியின் முதல் வணிக ரீதியான வெளிப்பாடு ஆகும்.[6]

மளிகைத் தொழிற்துறை குழுவிற்காக நடத்தப்பட்ட பொருளாதார ஆய்வில் 1970 ஆம் ஆண்டுகளின் மத்தியில் தொழிற்துறையில் இந்த ஸ்கேனிங் மூலமாக $40 மில்லியன் சேமிக்கப்படும் எனக் கணக்கிடப்பட்டது. அந்தக் கால அளவுக்குள் அந்த எண்ணிக்கைகளை அடைய முடியவில்லை. மேலும் அதனால் பார்கோடு ஸ்கேனிங் முறை வழக்கில் இருந்து அழிந்து விடும் எனக் கருதப்பட்டது. பார்கோடின் பயன்பாட்டிற்கு அதிக கூட்டம் நிரம்பும் சில்லறை விற்பனையாளர்கள் மூலமாக அதிகவிலையிலான ஸ்கேனர்கள் வாங்குவது தேவையாக இருந்தது. அதேசமயம் அதே நேரத்தில் உற்பத்தியாளர்கள் பார்கோடு வில்லைகளைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. இருதரப்பினரும் முதலில் அதனைப் பயன்படுத்துவதற்கு முன்வரவில்லை. மேலும் முதல் இரண்டு ஆண்டுகள் முடிவுகளும் உறுதியளிப்பதாக இல்லை. மேலும் பிசினஸ் வீக் (Business Week) இது குறித்து "சிறப்பங்காடி ஸ்கேனர் தோல்வியடைந்தது" என்று அறிவித்தது.[6]

மளிகைத் தொழிற்துறையை கணினி மயமாக்குவதற்கு பல ஆண்டுகள் பிடித்தது. 1971 ஆம் ஆண்டில் செறிவான திட்டமிடல் அமர்வுக்கான அணியினை ஐ.பி.எம் கூட்டியது. நாளுக்கு நாள் 12 முதல் 18 மணி நேரங்கள் ஒரு நாளைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு முழு அமைப்பும் எவ்வாறு வேலை செய்கிறது என்று கலந்துரையாடப்பட்டது மற்றும் சுழற்சித் திட்டமும் அட்டவணைப்படுத்தப்பட்டது. 1973 ஆம் ஆண்டில் மளிகை உற்பத்தியாளர்களுக்கான சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களது அனைத்து பொருட்களிலும் அச்சிடப்பட வேண்டிய குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது. மளிகை பொருட்களில் அதனைப் பயன்படுத்துவதால் எந்த செலவு சேமிப்பும் ஏற்படவில்லை எனினும் குறைந்த பட்சம் 70% மளிகை பொருட்களில் உற்பத்தியாளர்களால் அவர்களது பொருட்களில் பார்கோடு அச்சிடப்பட்டது. 1952 ஆம் ஆண்டுக்குள் 75 சதவீதத்தை எட்ட ஐ.பி.எம் முடிவு செய்தது. அதனை அடைந்துவிட்ட போதும் 1977 ஆம் ஆண்டு வரை 200 மளிகைக் கடைகளுக்கும் குறைவாகவே நிறுவப்பட்டிருந்தது.[7]

அந்தக் கடைகளில் பார்கோடு ஸ்கேனிங்க் வெளிப்படுத்திய நன்மைகள் முன்னர் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அனுமதிக்கப்பட்ட புதிய அமைப்பில் பெறப்பட்ட விரிவான விற்பனைத் தகவல்கள் நுகர்வோர் தேவைகளை மிகவும் சிறப்பாக நிறைவு செய்வதாக இருந்தன. பார்கோடு ஸ்கேனர்கள் நிறுவப்பட்ட 5 வாரங்களுக்குப் பிறகு இதன் விளைவைக் காண முடிந்தது. மளிகைக் கடைகளின் விற்பனை சிறிது சிறிதாக உயர ஆரம்பித்து இறுதியாக 10 முதல் 12% வரை அதிகரித்து பின்னர் குறையவில்லை. மேலும் கடைகளுக்கு 1% முதல் 2% வரையிலான செயல்பாட்டுச் செலவு குறைவு ஏற்பட்டது. அது அவர்களை குறைவான விலைகளில் பொருட்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக்கி சந்தைப் பங்கை அதிகரிக்கச் செய்தது. இதனால் அந்தத் துறையில் பார்கோடு ஸ்கேனர்களுக்கான முதலீட்டில் 41.5% திரும்ப எடுக்க முடிந்தது. 1980 ஆண்டில் இந்தத் தொழில்நுட்பம் ஆண்டுக்கு 8000 கடைகளில் புதிதாகப் பயன்படுத்தப்படுவதாக இருந்தது.[7]

பார்கோடின் உலகளாவிய அறிமுகம் இரகசியக் கோட்பாட்டுத் தத்துவவாதிகளிடம் இருந்து சிறிதளவு ஐயத்துடன் ஏற்கப்பட்டது. அவர்கள் பார்கோடுகளை நுழைவுக் கண்காணிப்பு தொழில்நுட்பமாகக் கருதினர். மேலும் சில கிறிஸ்துவர்கள் அந்தக் குறியீடு கிறிஸ்துவர்களுக்கு எதிராகக் குறிப்பிடப்படும் எண்ணான 666 என்பதை மறைத்து வரும் குறியீடு எனக் கருதினர். தொலைக்காட்சித் தொகுப்பாளர் பில் டோனாஹூ (Phil Donahue) பார்கோடுகளை "நுகர்வோர்களுக்கு எதிரான பெருநிறுவனச் சதித்திட்டம்" என்று விவரித்தார்.[8]

தொழிற்துறை ஏற்பு தொகு

1981 ஆம் ஆண்டில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை ஆனது அமெரிக்க இராணுவத்துக்கு விற்பனை செய்யும் அனைத்து பொருட்களிலும் குறியீடு 39 ஐப் பயன்படுத்தியது. LOGMARS என்ற இந்த அமைப்பு இன்றும் DoD இனால் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது தொழிற்துறை பயன்பாடுகளில் பார்கோடிங்கின் பரவலான ஏற்பிற்கான வினையூக்கியாக பரவலாகப் பார்க்கப்படுகிறது.[9]

பயன் தொகு

பார்கோடுகள் அதிலும் குறிப்பாக யூ.பீ.சி மெதுவாக நவீன நாகரிகத்தில் முக்கிய[சான்று தேவை] பகுதியாக மாறியது, அவற்றின் பயன்பாடு விரிந்து பரவியது. மேலும் பார்கோடுகளுக்குப் பின்னணியில் உள்ள தொழில்நுட்பம் தொடர்ந்து மேம்படுகிறது. பார்கோடுகளின் சில நவீனப் பயன்பாடுகள் பின்வருமாறு:

  • மளிகைக் கடை, பல்பொருள் அங்காடி மற்றும் திரளான வணிகப் பொருட்களை விற்பனை செய்பவர் ஆகியோரிடம் இருந்து வாங்கப்படும் கிட்டத்தட்ட ஒவ்வொரு பொருளிலும் யூ.பீ.சி பார்கோடு இடம் பெற்றிருக்கும். இது கடையில் இருக்கும் அதிக அளவிலான பொருட்களைத் தொடர்ந்து கண்காணிப்பதற்கு உதவுகிறது. மேலும் விலைக் குறிப்பு மாற்றம் தொடர்புடைய கடையில் இருந்து எடுத்தல் நிகழ்வுகளையும் குறைக்கிறது. எனினும் கடையில் இருந்து திருடுபவர்கள் தற்போது அவர்களது சொந்த பார்கோடுகளைப் பயன்படுத்த முடியும். பார்கோடுகள் பயன்படுத்தப்பட்டதில் இருந்து நுகர்வோர் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் இருதரப்பினரும் அதில் இருந்து உருவாகும் சேமிப்புகளால் நன்மை அடைகிறார்கள்.
  • பார்கோடுகள் பரவலாக கடையின் தளக் கட்டுப்பாட்டுப் பயன்பாட்டு மென்பொருள்களில் பயன்படுத்தப்படுகின்றன. அங்குப் பணியாளர்கள் பணி ஆணைகளை ஸ்கேன் செய்து அந்த வேலைக்கு செலவழித்த நேரத்தை பதிவு செய்து வைக்க முடியும்.[10]
  • சில்லறை விற்பனைச் சங்கிலி உறுப்பினர் அட்டைகளில் (மளிகைக் கடைகள் மற்றும் விளையாட்டு உபகரணம், அலுவலக வழங்கல் அல்லது வளர்ப்புப் பிராணிகளுக்கான கடைகள் போன்ற "பெரிய அளவு" சில்லறை விற்பனைக் கடைகளில் பெரும்பாலும் இவை வழங்கப்படும்) நுகர்வோரை தனித்து அடையாளம் காணுவதற்காக பார்கோடுகள் பயன்படுத்தப்படுகின்றன. சில்லறை விற்பனையாளர்கள் விருப்பத்திற்கேற்ற சந்தைப்படுத்தலை மேற்கொள்ள இயலுதல் மற்றும் தனிப்பட்ட நுகர்வோரின் வாங்கும் அமைப்புகளை பெருமளவில் புரிந்துகொள்ளல் போன்ற விதங்களில் நன்மை அடைவார்கள். வாங்குபவர்கள் பொதுவாக சிறப்பு விற்பனைச் சலுகைகள் (கூப்பன்கள், பொருள் தள்ளுபடிகள்) அல்லது சிறப்புச் சந்தைப்படுத்தல் சலுகைகள் போன்றவற்றை அவர்கள் பதிவின் போது கொடுத்திருக்கும் முகவரி அல்லது மின்னஞ்சல் முகவரியின் மூலமாகப் பெறுவார்கள்.
  • நோயாளிகள் அடையாளம் காணலில் பார்கோடுகளைப் பயன்படுத்தும் போது அவை மருத்துவ சிகிச்சை வரலாறு, ஒவ்வாமை எச்சரிக்கைகள் மற்றும் பிற வாழ்வாதார மருத்துவத் தகவல்கள் உள்ளிட்ட நோயாளியின் இன்றியமையாத தகவல்களை உடனடியாக மருத்துவமனையில் பணியாற்றுபவர் அறிந்து கொள்ள உதவுகின்றன.
  • ஆவண மேலாண்மைக் கருவிகள் ஆவணங்களை பிரித்தெடுத்தல் மற்றும் அட்டவணைப்படுத்தல் போன்றவற்றுக்கு உதவுவதற்கான பார்கோடிட்ட தாள்கள் மூலமாக அனுமதிக்கப்படுகின்றன. அவை தொகுதி ஸ்கேனிங் பயன்பாடுகளில் படிமமாக்கப்படுகின்றன.
  • வாடகை கார்கள், விமானப் பயணப்பெட்டி, அணுக்கருக் கழிவு, அஞ்சல் மற்றும் பொட்டலங்கள் உள்ளிட்ட பொருட்கள் நகர்வைக் கண்காணிப்பதற்குப் பயன்படுகிறது.
  • 2005 ஆம் ஆண்டு முதல் விமான நிறுவனங்கள் ஐ.ஏ.டி.ஏ தரநிலை 2டி பார்கோடு போர்டிங் பாஸ்களைப் (பி.சி.பி.பீ) பயன்படுத்துகிறது. 2008 ஆம் ஆண்டு முதல் 2டி பார்கோடுகள் மொபைல் தொலைபேசிகளில் இயங்கச்செய்யும் மின்னணு போர்டிங் பாஸ்களைப் பயன்படுத்துகிறது.[11]
  • சமீபத்தில் ஆய்வாளர்கள் பூச்சிகளின் இனச்சேர்க்கைப் பழக்கங்களைக் கண்காணிப்பதற்காக தனிப்பட்ட தேனீக்களில் நுண்ணிய பார்கோடுகளை வைத்து ஆய்வு மேற்கொண்டனர்.
  • பொழுதுபோக்கு நிகழ்ச்சி அனுமதிச் சீட்டுகள் பார்கோடுகளைக் கொண்டிருக்கலாம். விளையாட்டு அரங்கங்கள், திரையரங்குகள், நாடக அரங்குகள், திறந்தவெளிக் கட்டண மைதானங்கள் (சர்க்கஸ், கண்காட்சி முதலியவை நடக்கும் இடங்கள்), போக்குவரத்து மற்றும் பல இடங்களில் இந்தச் சீட்டுகளை வைத்திருப்பவர்கள் உள்ளே நுழைவதற்கு முன்பு பார்கோடுகளை செல்லத்தக்கதாக்க வேண்டும்.
  • ஆட்டோமோபைல்களில் பயன்படுத்தப்படுகிறது. முற்பகுதியிலோ அல்லது பிற்பகுதியிலோ இருக்கும்.
  • எடை சோதனையிடும் அமைப்புக்களுடன் இணைந்து தகவல் சேகரிப்புக்காக சுமை செலுத்தி வரிசையில் எடையிடப்படும் பொருட்களை அடையாளம் காணுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
  • சில 2D பார்கோடுகள் வலைப்பக்கத்திற்கு ஹைப்பர்லிங்க் பதிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. திறன் வாய்ந்த மொபைல் தொலைபேசி ஆனது பார்கோடுகளை படிப்பதற்கு மற்றும் இணைக்கப்பட்ட வலைத்தளத்தில் உலவுவதற்குப் பயன்படுத்தப்படலாம்.
  • 1970 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் மென்பொருள் மூல நிரலியானது பார்கோடில் குறியீடு செய்யப்பட்டு தாளில் அச்சிடப்பட்டது. காஜின் சாஃப்ட்ஸ்ட்ரிப் (Cauzin Softstrip) மற்றும் பேப்பர்பைட்[12] (Paperbyte) ஆகியோர் பார்கோடு குறியியல்களை இந்தப் பயன்பாட்டிற்காக வடிவமைத்தனர்.
  • 1991 ஆம் ஆண்டில் பார்கோடு பாட்லர் கணினி விளையாட்டு அமைப்பானது போட்டிப் புள்ளியியலை உருவாக்குவதற்காக தரமான பார்கோடைப் பயன்படுத்தியது.
  • 1992 ஆம் ஆண்டில் வெடரன்ஸ் ஹெல்த் அட்மினிஸ்ட்ரேசன் (Veterans Health Administration) பார் கோடு மெடிகேசன் அட்மினிஸ்ட்ரேசன் (Bar Code Medication Administration) அமைப்பை (பி.சி.எம்.ஏ) உருவாக்கியது.
  • நூற்றாண்டு மாற்றங்களில் ஸ்காட் பிளேக்கின் பார்கோடு ஜீசஸ் போன்று பல ஓவியர்கள் அவர்களது ஓவியங்களில் பயன்படுத்தத் தொடங்கினர்.

குறியியல்கள் தொகு

செய்திகள் மற்றும் பார்கோடுகள் இடையே உள்ள முகப்பு குறியியல் எனப்படுகிறது. குறியியலின் விவரக்கூற்றானது செய்தியின் ஒற்றை இலக்கங்கள்/வரியுறுக்களின் குறியீடு செய்தல், பார்கள் மற்றும் இடைவெளிகளினுள் ஆரம்ப மற்றும் முடிவு குறியிடுபவர்கள், பார்கோடுக்கு முன்பும் பின்பும் தேவைப்படும் அமைதி மண்டலத்தின் அளவு மற்றும் கணக்கிடுதலின் செக்சம் உள்ளிட்டவைகளைக் கொண்டிருக்கிறது.

நேரோட்ட குறியியல்கள் முக்கியமாக இரண்டு பண்புகளாக வகைப்படுத்தப்படுகின்றன, அவை பின்வருமாறு:

  • தொடர்ந்ததும் தனித்ததும்: தொடர் குறியியலின் வரியுறுக்கள் பொதுவாகச் சாய்ந்திருக்கும். அதில் முதல் வரியுறு இடைவெளியுடன் நிறைவுறும் மற்றும் அடுத்தது பாருடன் ஆரம்பிக்கும் அல்லது இதற்கு நேரெதிராகவும் இருக்கும். தனித்த குறியியல்களின் வரியுறுக்கள் பார்களுடன் ஆரம்பித்து அதனுடன் நிறைவுறும்; வரியுறுக்களுக்கு இடையே உள்ள இடைவெளியானது குறியீடு நிறைவுறுவதைப் போன்று நீண்டதாக இல்லாத பட்சத்தில் பொருட்படுத்தப்படுவதில்லை.
  • இரட்டை அகலமும் பல அகலமும்: இரட்டை அகலக் குறியியல்களில் பார்கள் மற்றும் இடைவெளிகள் அகன்றதாக இருக்கும் அல்லது குறுகியதாக இருக்கும். அகன்ற பார் எப்படி அகன்று இருக்க வேண்டும் என்பதற்கு அகன்ற பார்களுக்கான குறியியல் தேவைகளை நிறைவு செய்யும் வரையில் துல்லியமாக எந்தக் குறிப்பிடுதலும் இருப்பதில்லை. பல அகலக் குறியியல்களின் பார்கள் மற்றும் இடைவெளிகள் கலம் என அழைக்கப்படும் அடிப்படை அகலத்தின் பெருக்கமாக இருக்கின்றன. பெரும்பாலான அந்தக் குறியீடுகளில் 1, 2, 3 மற்றும் 4 ஆகிய நான்கு அகலங்களிலான கலங்களைப் பயன்படுத்தப்படுகின்றன.

சில குறியியல்கள் உள்ளிடைவிடுதலைப் பயன்படுத்துகின்றன. அதில் முதல் வரியுறு மாறுபட்ட அகலங்களில் உள்ள கருப்பு பார்களைப் பயன்படுத்தி குறியீடு செய்யப்படுகிறது. பின்னர் இரண்டாவது வரியுறு அந்த பார்களுக்கு இடையில் வெள்ளை இடைவெளிகளில் மாறுபட்ட அகலங்களில் குறியீடு செய்யப்படுகிறது. ஆகையால் வரியுறுக்கள் பார்கோடின் அதே பகுதியின் மீதான இணைகளில் குறியீடு செய்யப்படுகின்றன. இன்டர்லீவ்ட் 2 ஆஃப் 5 இதற்கு எடுத்துக்காட்டு ஆகும்.

அடுக்கப்பட்ட குறியியல்கள் கொடுக்கப்பட்ட நேரோட்டக் குறியியல் செங்குத்தாக பலமுறைத் திரும்ப நிகழ்தலை உடையதாக இருக்கின்றன.

2டி குறியியல்களில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. அதில் மிகவும் பொதுவானது அணிக் குறியீடுகள் ஆகும். அவை சதுர அல்லது புள்ளி வடிவ கலங்கள் வலை உருப்படிமமாக அடுக்கப்பட்டிருக்கும் தோற்றத்தைக் கொண்டிருக்கும். 2-டி குறியியல்களும் கூட பல்வேறு வகையான காட்சி வடிவங்களில் வருகின்றன. வட்ட உருப்படிமங்களுக்கு அப்பால் பல்வேறு வகையான 2-டி குறியியல்கள் ஸ்டெனோகிராபியில் பயன்படுத்தப்படுகின்றன. அதில் பயனர் குறிப்பிட்ட உருவப்படத்துடன் மாறுபட்ட அளவுள்ள அல்லது வடிவமுள்ள கலங்களின் அணிகள் மறைக்கப்பட்டிருக்கும் (டேட்டாகிலிப்ஸ் (DataGlyphs) இதற்கு எடுத்துக்காட்டாகும்).

நேரோட்டக் குறியியல்கள் லேசர் ஸ்கேனர்கள் மூலமாகப் படிப்பதற்கு உகந்ததாக இருக்கின்றன. லேசர் ஸ்கேனர்கள் நேரான வரியில் பார்கோடின் குறுக்கே ஒளிக்கற்றையைப் பெருக்கி பார்கோடு வில்லைகளின் வெண்மையான இருண்ட உருப்படிமங்களைப் படிக்கின்றன. 1990களில் பார்கோடுகளைப் படிப்பதற்காக சி.சி.டி இமேஜர்களின் மேம்பாடு வெல்க் ஆல்லின் (Welch Allyn) மூலமாக ஆரம்பிக்கப்பட்டது. படமாக்கலுக்கு லேசர் ஸ்கேனரில் செய்யப்படுவது போன்று நகரும் பகுதிகள் தேவையில்லை. 2007 ஆம் ஆண்டில் நேரோட்டப் படமாக்கல் அதன் செயல்பாடு மற்றும் நிலைப்புத் தன்மைக்காக விரும்பப்படும் ஸ்கேன் பொறியாக லேசர் ஸ்கேனரை விஞ்சி இருந்தது.

அடுக்கப்பட்ட குறியியல்களும் கூட லேசர் ஸ்கேனிங்குக்கு உகந்ததாக இருக்கின்றன. அதில் லேசரானது பார்கோடுகளுக்குக் குறுக்கே பல கடந்து செல்லுதல்களை உருவாக்குகிறது.

முழுமையான குறியீட்டினைச் சூழ்ந்து கொள்ள முடிகிற பெருக்கு உருப்படிமம் இல்லாததால் 2-டி குறியியல்களை லேசரினால் படிக்க இயலாது. அவை சார்ஜ் கப்புல்ட் டிவைஸ் (சி.சி.டி) அல்லது மற்ற டிஜிட்டல் கேமரா உணர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் உருவப்படம் சார்ந்த ஸ்கேனர் மூலமாக ஸ்கேன் செய்யப்பட வேண்டும்.

ஸ்கேனர்கள் (பார்கோடு படிப்பிகள்) தொகு

ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட இன்றும் மலிவாய் கிடைக்கக் கூடிய பார்கோடு ஸ்கேனர்கள் நிலையான விளக்கு மற்றும் ஒற்றை ஒளி உணரி ஆகியவற்றால் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனை பார்கோடுகளுக்குக் குறுக்கே கையால் "நகர்த்தி" பயன்படுத்த வேண்டும்.

பார்கோடு ஸ்கேனர்கள் அவை கணினியுடன் இணைக்கப்படும் விதத்தைச் சார்ந்து மூன்று பிரிவுகளில் வகைப்படுத்தப்படுகின்றன. அதில் பழமையான வகையாக ஆர்.எஸ்-232 பார்கோடு ஸ்கேனர் இருக்கிறது. இந்த வகையில் பயன்பாட்டு நிரலுக்கு உள்ளீட்டுத் தரவைப் பரிமாறுவதற்காக சிறப்பு நிரலாக்கம் தேவையாய் இருக்கிறது. மற்றொரு வகையில் இணங்கிக் கம்பியைப் பயன்படுத்தி கணினி மற்றும் அதன் பீ.எஸ்/2 அல்லது ஏ.டீ விசைப்பலகை ஆகியவற்றுக்கு இடையில் இணைக்கப்படுகிறது. மூன்றாவது வகை யூ.எஸ்.பி பார்கோடு ஸ்கேனர் ஆகும். இது ஆர்.எஸ்-232 ஸ்கேனரைக் காட்டிலும் மிகவும் நவீனமானதாகவும் மிகவும் எளிதாக நிறுவக்கூடிய சாதனமாகவும் இருக்கிறது. விசைப்பலகை இடைமுக ஸ்கேனர் போன்று இதற்கு பயன்பாட்டு நிரலுக்கு உள்ளீட்டுத் தரவைப் பரிமாற்றுவதற்காக எந்தக் குறியீடும் அல்லது நிரலும் தேவையில்லை; இதில் பார்கோடினை ஸ்கேன் செய்யும் போது விசைப்பலகையில் அடிக்கும் போது கணினிக்குத் தகவல் அனுப்பப்படுவது போன்று தகவல் அனுப்பப்படும்.

சரிபார் அமைப்பு (பிகா இன்ஸ்பெக்சன்) தொகு

பார்கோடு சரிபார் அமைப்புகள் முதன்மையாக தொழில்களில் பார்கோடுகளை அச்சிடுவதன் மூலமாகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் வழங்கல் சங்கிலியில் உள்ள யாரேனும் ஒரு வர்த்தகக் கூட்டாளி பார்கோடின் தரத்தைச் சோதனையிட முடியும். பார்கோடுக்கு "தரம்" வழங்குவதில் முக்கியமாக அது வழங்கல் சங்கிலியில் அனைத்து பார்கோடுகளையும் படிக்க முடிவதற்கு உறுதியளிப்பதாக இருக்க வேண்டும். சில்லறை விற்பனையாளர்கள் இணக்கமில்லாத பார்கோடுகளைப் பயன்படுத்தினால் பெருமளவில் அபராதமும் தண்டனையும் பெறுவர்.

பார்கோடு சரிபார் அமைப்புகள் ஸ்கேனர் போன்றே செயல்படுகின்றன. ஆனால் எளிமையாக பார்கோடினைக் குறியீடு செய்வதற்கு மாறாக சரிபார் அமைப்புகள் தொடர்ந்த எட்டு சோதனைகளை மேற்கொள்கின்றன. ஒவ்வொரு சோதனையும் 0.0 முதல் 4.0 (F முதல் A வரை) வரையிலான தரங்களைக் கொடுக்கும். ஸ்கேனுக்கான தரம் இந்தச் சோதனைகளில் மிகவும் குறைவாக பெற்ற தரத்தினை எடுத்துக் கொள்ளப்படும். பெரும்பாலான பயன்பாடுகளுக்கு 2.5 (சி) தரமானது குறைந்தபட்சம் ஏற்றுக் கொள்ளப்பட்ட தரமாக இருக்கிறது.

பார்கோடு சரிபார் அமைப்புத் தரநிலைகள்:

  • பார்கோடு சரிபார் அமைப்புகள் ஐ.எஸ்.ஓ 15426-1 (நேரோட்ட பார்கோடு சரிபார் அமைப்பு உடன்படல் தரநிலை) உடன் அல்லது ஐ.எஸ்.ஓ 15426-2 (2டி பார்கோடு சரிப்பார் அமைப்பு உடன்படல் தரநிலை) உடன் இணக்கமானதாக இருக்க வேண்டும்.
  • தற்போதைய சர்வதேச பார்கோடு தர விவரக்கூற்று ஐ.எஸ்.ஓ/ஐ.ஈ.சி 15416 (நேரோட்ட பார்கோடுகள்) மற்றும் ஐ.எஸ்.ஓ/ஐ.ஈ.சி 15415 (2டி பார்கோடுகள்) ஆகும்.
  • ஐரோப்பியத் தரநிலை ஈ.என் 1635 திரும்பப் பெறப்பட்டு அதற்குப் பதிலாக ஐ.எஸ்.ஓ/ஐ.ஈ.சி 15416 ஆக மாற்றம் செய்யப்பட்டது
  • முதல் அமெரிக்க பார்கோடு தர விவரக்கூற்று ஆன்சி (ANSI) எக்ஸ் 3.182 ஆகும். யூ.பீ.சி குறியீடுகள் யூ.எஸ் ஆன்சி/யூ.சி.சி5 இல் பயன்படுத்தப்படுகின்றன.

பயன்கள் தொகு

குறிப்பிட்ட இடத்திற்கான விற்பனை மேலாண்மையில் பார்கோடுகளின் பயன்பாட்டினால் வணிகத்தின் அடிப்படை அம்சங்கள் சார்ந்து மிகவும் விரிவான தற்போதைய தேதி வரைக்குமான தகவல்களை வழங்க முடியும். இது மிகவும் துரிதமாக மற்றும் மிகவும் நம்பிக்கையுடன் முடிவுகள் எடுக்க ஏதுவாக்குகிறது. எடுத்துக்காட்டாக:

  • வேகமாக விற்பனையாகும் பொருட்களை நுகர்வோர் தேவையை நிறைவு செய்வதற்காக துரிதமாக அடையாளம் காணலாம் தானாகவே மீண்டும் வாங்குவதற்கு ஆயத்தமாகலாம்.
  • குறைவாக விற்பனையாகும் பொருட்கள் கண்டறியப்பட்டு தேவையற்ற கையிருப்பைத் தவிர்க்கலாம்.
  • கடையில் குறிப்பிட்ட பொருளை இடம் மாற்றி வைப்பதினால் ஏற்படும் விளைவுகளைக் கண்காணிக்கலாம். இதனால் வேகமாக விற்பனையாகும் மிகவும் இலாபகரமான பொருட்களைச் சிறந்த இடத்தில் வைக்க முடியும்.
  • பழைய தகவல்கள் பருவம் சார் ஏற்ற இறக்கத்தை மிகவும் துல்லியமாகக் கணிப்பதற்குப் பயனுள்ளதாக இருக்கலாம்.
  • பொருட்களின் விற்பனை விலைகள் மற்றும் விலை அதிகரிப்புகள் இரண்டும் பிரதிபலிக்கும் வகையில் அது அடுக்கப்பட்டிருக்கும் அலமாரியில் மறுவிலையிடல் இடம்பெறச் செய்யலாம்.
  • மேலும் இந்த தொழில்நுட்பம் பொதுவாக தள்ளுபடி அட்டைகளின் தன்னார்வப்பதிவு மூலமாக தனிப்பட்ட நுகர்வோர்களின் விரங்களைத் தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக்குகிறது. இந்த நடைமுறை நுகர்வோருக்கு பயன் விளைவிக்கும் அதே வேளையில் அவர்களது அந்தரங்கத்திற்கு மிகவும் ஆபத்து விளைவிப்பதாகவும் கருதப்படுகிறது.

விற்பனைகள் மற்றும் விவரக் குறிப்புகள் கண்காணித்தல் ஆகியவற்றுக்கு அப்பால் பார்கோடுகள் கப்பல் வணிகம்/பெறுதல்/கண்காணித்தல் ஆகியவற்றில் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.

  • உற்பத்தியாளர் குறிப்பிட்ட பொருளை பெட்டியில் அடைக்கும் போது அந்தப் பெட்டிக்கு தனித்த அடையாள எண் (Unique Identifying Number) (யூ.ஐ.டி) ஒதுக்க முடியும்.
  • ஆர்டர் எண், பொருட்கள் சிப்பமிட்டது, சிப்பமிட்ட அளவு, போய் சேரும் இடம் மற்றும் பல போன்ற தொடர்புசார் தரவுதளமானது அந்தப் பெட்டி தொடர்பான தகவல்களுக்கு உருவாக்கப்பட்டு யூ.ஐ.டியுடன் தொடர்புபடுத்தப்படலாம்.
  • அந்தத் தகவல் ஆனது மின்னணுத் தகவல் பரிமாற்றம் (Electronic Data Interchange) (ஈ.டி.ஐ) போன்ற தொடர்பு அமைப்புகள் மூலமாக பரிமாற்றம் செய்யப்படலாம். அதனால் சில்லறை விற்பனையாளர் பொருள் வந்து சேர்வதற்கு முன்னரே பொருள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
  • விநியோக மையங்களுக்கு (Distribution Center) (டி.சி) அனுப்பப்பட்டிருக்கும் பொருட்கள் போய் சேரும் இடத்திற்கு அனுப்பப் படுவதற்கு முன்பு கண்காணிக்கப்படும். பொருட்கள் போய்ச் சேரும் இடத்திற்குச் சென்றவுடன் அதில் இருக்கும் யூ.ஐ.டி ஸ்கேன் செய்யப்படும். அதனால் அது எங்கிருந்து வந்திருக்கிறது, பெட்டிக்குள் என்ன இருக்கிறது மற்றும் உற்பத்தியாளருக்கு அதற்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது போன்ற விவரங்கள் கடைக்காரருக்குத் தெரியும்.

சமீபத்திய பார்கோடுகள் வணிகத் தோழமையுடன் இருக்கின்றன. இந்த ஸ்கேனர்கள் ஒப்பிடுகையில் குறைவான விலை உடையவையாகவும் கையால் விலை அடிப்பதைக் காட்டிலும் மிகவும் துல்லியமானவையாகவும் இருக்கின்றன. அதில் 15,0000 முதல் 36 டிரில்லியன் வரியுறுக்கள் நுழைக்கப்பட்டால் சுமார் ஒரு நிகராக்கல் பிழை மட்டுமே ஏற்படுகிறது.[13] துல்லியமான பிழை பார்கோடின் வகையைச் சார்ந்தது ஆகும்.

பார்கோடுகளின் வகைகள் தொகு

நேரோட்ட பார்கோடுகள் தொகு

குறியியல் தொடர்
அல்லது
தனித்தது
பார் அகலங்கள் உபயோகங்கள்
யூ.பீ.சி. தொடர் பல ஜி.எஸ்1 ஏற்றுக்கொள்ளப்பட்ட உலகளாவிய சில்லறை விற்பனையில்
கோடபார் தனித்தது இரண்டு நூலகங்கள், இரத்த வங்கிகள், விமானக் கட்டணச் சீட்டுக்கள் ஆகியவற்றில் இதன் பழைய வடிவம் பயன்படுத்தப்படுகின்றன
குறியீடு 25 – நான்-இன்டர்லீவ்ட் 2 ஆஃப் 5 தொடர் இரண்டு தொழில்துறை (NO)
குறியீடு 25 – இன்டர்லீவ்ட் 2 ஆஃப் 5 தொடர் இரண்டு மொத்த விற்பனை, நூலகங்கள் (NO)
குறியீடு 39 தனித்தது இரண்டு பல்வேறு முறைகளில்
குறியீடு 93 தொடர் பல பல்வேறு முறைகளில்
குறியீடு 128 தொடர் பல பல்வேறு முறைகள்
குறியீடு 128A தொடர் பல பல்வேறு முறைகளில்
குறியீடு 128B தொடர் பல பல்வேறு முறைகளில்
குறியீடு 128C தொடர் பல பல்வேறு முறைகளில்
குறியீடு 11 தனித்தது இரண்டு தொலைபேசிகள்
சி.பீ.சி பைனரி தனித்தது இரண்டு அஞ்சல் நிலையம்
டி.யூ.என் 14 தொடர் பல பல்வேறு முறைகளில்
ஈ.ஏ.என் 2 தொடர் பல ஜி.எஸ்1 ஏற்றுக்கொள்ளப்பட்ட நீட்சிக் குறி (பத்திரிகைகள்)
ஈ.ஏ.என் 5 தொடர் பல ஜி.எஸ்1 ஏற்றுக்கொள்ளப்பட்ட நீட்சிக் குறி (புத்தகங்கள்)
ஈ.ஏ.என் 8, ஈ.ஏ.என் 13 தொடர் பல ஜி.எஸ்1 ஏற்றுக்கொள்ளப்பட்ட உலகளாவிய சில்லறை விற்பனையில
முக அடையாளக் குறி தொடர் ஒன்று யூ.எஸ்.பீ.எஸ் வணிக மறுமொழி அஞ்சல்
ஜி.எஸ்1-128 (முன்னர் யூ.சி.சி/ஈ.ஏ.என்-128 என்று அறியப்பட்டது). ஈ.ஏ.என் 128 மற்றும் யூ.சி.சி 128 எனத் தவறாகக் குறிப்பிடப்படுகிறது தொடர் பல ஜி.எஸ்1 ஏற்றுக்கொள்ளப்பட்ட பல்வேறுமுறைகளில்
ஜி.எஸ்1 டேட்டாபார். முன்னர் ரெட்யூஸ்ட் ஸ்பேஸ் சிம்பாலஜி (ஆர்.எஸ்.எஸ்) எனப்பட்டது தொடர் பல ஜி.எஸ்1 ஏற்றுக்கொள்ளப்பட்ட பல்வேறு முறைகளில்
ஹெச்.ஐ.பி.சி (ஹெச்.ஐ.பி.சி.சி பார் கோடு தரநிலை) [14]
ஐ.டி.எஃப்-14 தொடர் பல ஜி.எஸ்1 ஏற்றுக்கொள்ளப்பட்ட சில்லறை விற்பனை அல்லாத பொதிய நிலைகள்
உள்ளுறை உருவப்பட பார்கோடு இரண்டுமில்லை நீண்ட/குறுகிய நிற அச்சுச் சுருள்
பார்மாகோடு இரண்டுமில்லை இரண்டு மருந்துப் பொதிவு
பிளெஸ்ஸெ தொடர் இரண்டு பட்டியல்கள், கடை அலமாரிகள், விலை விவரப்பட்டியல்
PLANET தொடர் நீண்ட/குறுகிய அமெரிக்க அஞ்சல் துறை
POSTNET தொடர் நீண்ட/குறுகிய அமெரிக்க அஞ்சல் துறை
நுண்ணறிவு அஞ்சல் பார்கோடு தொடர் நீண்ட/குறுகிய அமெரிக்க அஞ்சல் துறையில் POSTNET மற்றும் PLANET குறியீடுகளுக்கு (முன்னர் இவை ஒன்கோடு என அறியப்பட்டன) மாற்றாக பயன்படுத்தப்படுகிறது
எம்.எஸ்.ஐ தொடர் இரண்டு பண்டகசாலை அலமாரிகள் மற்றும் விலை விவரப்பட்டியல்களில் பயன்படுத்தப்படுகிறது
போஸ்ட்பார் தனித்தது பல கனடிய அஞ்சல் அலுவலகம்
ஆர்.எம்.4.எஸ்.சி.சி / கிக்ஸ் தொடர் நீண்ட/குறுகிய ராயல் அஞ்சல் / ராயல் டிபிஜி அஞ்சல்
JAN தொடர் பல ஈ.ஏ.என்-13 உடன் அதனைப் போன்று மற்றும் அதற்குப் போட்டியாக ஜப்பானில் பயன்படுத்தப்படுகிறது
டெலிபென் தொடர் இரண்டு நூலகங்கள் மற்றும் பல இடங்களில் (UK)

அணி(2டி) பார்கோடுகள் தொகு

2டி பார்கோடு அல்லது எளிமையாக 2டி குறியீடு என்றும் அறியப்படும் அணிக் குறியீடு என்பது தகவல்களை இரு பரிமாண வழியில் குறிப்பிடுவதாக இருக்கிறது. இது நேரோட்ட (1-பரிமாண) பார்கோட்டினைப் போன்றதே ஆகும். ஆனால் இது மிகவும் அதிகமானத் தரவுக் குறிப்பிடுதல் திறனைக் கொண்டிருக்கிறது.

குறியியல் குறிப்புகள்
3-டி.ஐ லின் லிமிட்டடால் (Lynn Ltd) உருவாக்கப்பட்டது
அர்ரேடேக் அர்ரேடெக் சிஸ்டம்ஸில் (ArrayTech Systems) இருந்து
ஆஜ்டெக் குறியீடு வெல்க் அல்லினில் (Welch Allyn) (தற்போது கையடக்கப் பொருட்கள்) ஆண்ட்ரீவ் லோங்காக்ரெ (Andrew Longacre) மூலமாக வடிவமைக்கப்பட்டது. பொது டொமைன்.
சிறிய ஆஜ்டெக் குறியீடு ஆஜ்டெக் குறியீட்டின் இடம் சேமிக்கும் பதிப்பு ஆகும்.
நிறத்திற்குரிய எழுத்து[15] சி.சி. எலியன் (C. C. Elian) மூலமாக கலையாற்றல் முன்மொழிவு செய்யப்பட்ட இதில் பார்க்கக் கூடிய நிறமாலை ஆனது 26 மாறுபட்ட அலைநீளங்களைக் கொண்ட சாயல்களாகப் பிரிக்கப்படுகின்றன.
குரோமோகோடு கருப்பு, வெள்ளை மற்றும் 4 நிரப்பு நிறங்கள் பயன்படுத்தப்படுகிறது.[16]
கோடபிளாக் அடுக்கப்பட்ட 1டி பார்கோடுகள்.
குறியீடு 1 பொது டொமைன்.
குறியீடு 16K 1டி குறியீடு 128 சார்ந்தது.
குறியீடு 49 இன் டர்மெக் கார்ப்பரேசனில் இருந்து அடுக்கப்பட்ட 1டி பார்கோடுகள்.
நிறக்குறியீடு கலர்ஜிப்[17] (ColorZip) வர்ண பார்கோடுகளை உருவாக்கியது. அதனை டிவி திரையில் இருந்து கேமரா தொலைபேசி மூலமாகப் படிக்க முடியும்; பெருமளவில் கொரியாவில் பயன்படுத்தப்படுகிறது.[18]
நெருக்கமான அணிக் குறியீடு சிஸ்கேன் க்ரூப், இன்க்கில் இருந்து.
சி.பீ குறியீடு சி.ஓ ட்ரோன், இன்க்கில் இருந்து.
சைபர்குறியீடு சோனியிடம் இருந்து.
டி-டச் வடிவமாற்றத்தக்க உரைகளில், நீட்டித்த மற்றும் வடிவஞ்சிதைந்த இடங்களில் அச்சிடும்போது படிக்கக்கூடியதாக இருக்கிறது[19]
டேட்டாகிளிப்ஸ் பாலோ ஆல்டோ ஆராய்ச்சி மையத்தில் (ஜெராக்ஸ் பார்க் என்றும் அறியப்படுகிறது) இருந்து.[20]
டேட்டாமேட்ரிக்ஸ் ஆர்.வி.எஸ்.ஐ அக்யுயிட்டி சி.ஐ.மேட்ரிக்ஸ்/சியமண்ட்ஸ். பொது டொமைன். அமெரிக்கா முழுவதும் பயன்படுத்துதல் அதிகரித்துவருகிறது.
டேட்டாஸ்ட்ரிப் குறியீடு டேட்டாஸ்ட்ரிப், இன்க்கில் இருந்து.
டாட் குறியீடு ஏ பொருட்களின் தனித்த அடையாளத்துக்காக வடிவமைக்கப்பட்டது.
ஈ.இஜட் குறியீடு கேமரா தொலைபேசிகள் மூலமாக குறியீடு செய்யப்படுவதற்காக வடிவமைக்கப்பட்டது.[21]
வலை அணிக் குறியீடு சிஸ்கேன் க்ரூப், இன்க்கில் இருந்து.
உயர் செயல்திறன் வர்ண பார்கோடு மைக்ரோசாப்ட்டால் வடிவமைக்கப்பட்டது; ஐ.எஸ்.ஏ.என்-ஐ.ஏ மூலமாக உரிமம் பெறப்பட்டது.
சாயல்குறியீடு ரோபோட் டிசைன் அசோசியேட்ஸில் இருந்து. கிரேஸ்கேல் அல்லது நிறம் பயன்படுத்தப்படுகிறது.[22]
INTACTA.CODE INTACTA டெக்னாலஜீஸ், இன்ங்க்கில் இருந்து.
இன்டர்கோடு ஐகான்லேப், இன்க்கில் இருந்து. தென் கொரியாவில் 2டி பார்கோடு வழக்கமாக உள்ளது. தென் கொரியாவில் உள்ள மூன்று மொபைல் கடத்திகளும் இயல்பிருப்புப் பதியப்பட்ட நிரலாக மொபைல் இணையத்தை அணுகுவதற்கு அவர்களது மொபைல் தொலைபேசியில் இந்தக் குறியீடின் ஸ்கேனர் நிரல் நிறுவியிருக்கின்றனர்.
மேக்சிகோடு யுனைட்டட் பார்சல் சர்வீஸ் மூலமாக பயன்படுத்தப்படுகிறது. தற்போது பொது டொமைன்
எம்கோடு நெக்ஸ்ட்கோடு கார்ப்பரேசனால் குறிப்பாக கேமரா தொலைபேசி ஸ்கேனிங் பயன்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டது. இது தரமான கேமரா தொலைபேசிகளுடன் மேம்பட்ட மொபைல் தொலைபேசிப் பயன்பாடுகளை இயங்கச் செய்வதற்காக வடிவமைக்கப்பட்டது.
மினிகோடு ஓம்னிபிளானர், இன்க்கில் இருந்து.
மைக்ரோ பி.டி.எஃப்417 பி.டி.எஃப்417 இல் மிகவும் சிறியதாக குறியீடுகளைப் பயன்படுத்தும் வசதியை அளிக்கிறது.
எம்.எம்.சி.சி நெட்வொர்க் இணைப்பிற்கான தேவை ஏதுமின்றி ஏற்கனவே இருக்கும் வர்ண அச்சு மற்றும் மின்னணு ஊடகம் மூலமாக உயர் செயல்திறன் மொபைல் தொலைபேசி உள்ளடக்கத்தைப் பரப்புவதற்கு வடிவமைக்கப்பட்டது
நின்டண்டோ இ-ரீடர்#டாட் கோடு பாடல்கள், உருவப்படங்கள் மற்றும் போக்மான் வர்த்தக அட்டைகள் சார்ந்த கேம் பாய் அட்வான்ஸுக்கான சிறு விளையாட்டுகள் ஆகியவற்றைச் சேமிப்பதற்காக ஒலிம்பஸ் கார்ப்பரேசனால் உருவாக்கப்பட்டது.
ஓப்டார் ட்விப்ரைட் லேப்ஸால் உருவாக்கப்பட்டு இலவச மென்பொருளாக வெளியிடப்பட்டது. காகிதத்தின் மீது அதிகபட்ச தரவு சேமிப்பு அடர்த்தியில் தரவைச் சேமிப்பதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. லேசர் அச்சுப்பொறியைப் பயன்படுத்தி ஒரு A4 காகிதத்தில் 200 kB என்ற அளவில் சேமிக்கப்பட்டது.
காகிதவட்டு தரவு கனத்தப் பயன்பாடுகள் (10K – 1 MB) மற்றும் கேமரா தொலைபேசிகள் (50+ பிட்டுகள்) ஆகிய இரண்டிலும் பயன்படுத்துவதற்கான உயர் அடர்த்திக் குறியீடு. கோப்பல்ஸ்டோன் சாஃப்ட்வேரால் உருவாக்கப்பட்டு காப்புரிமை வாங்கப்பட்டது.[23]
பி.டி.எஃப்417 சிம்பல் டெக்னாலஜீஸால் உருவாக்கப்பட்டது. பொது டொமைன்.
பி.டி.மார்க் ஆர்டாகோ உருவாக்கியது.
க்யூ.ஆர்.கோடு ஆரம்பத்தில் டொயோடாவின் இணை நிறுவனமான டென்சோ வேவ் மூலமாக கார் பாகங்கள் நிர்வகித்தலுக்காக உருவாக்கப்பட்டு காப்புரிமை பெறப்பட்டு சொந்தமானது; தற்போது பொது டொமைனாக இருக்கிறது. இதன் மூலம் ஜப்பானிய காஞ்ஜி மற்றும் கானா வரியுறுக்கள், இசை, உருவப்படங்கள், யூ.ஆர்.எல்கள், மின்னஞ்சல்கள் ஆகியவற்றைக் குறியீடு செய்யலாம். ஜப்பானிய மொபைல் தொலைபேசிகளுக்கான டி ஃபேக்டோ தரநிலை. மேலும் பிளாக்பெர்ரி மெசெஞ்சரில் PIN குறியீடுகளைப் பயன்படுத்துவதற்கு மாறாக தொடர்புகளை எடுப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
க்விக்மார்க் குறியீடு சிம்பில்ஆக்ட் இன்க்.[24]
செமாகோடு தரவு அணிக் குறியீடானது கேமராக்களுடன் கூடிய மொபைல் தொலைபேசிகளில் பயன்படுத்தப்படும் பயன்பாடுகளுக்கான யூ.ஆர்.எல்களைக் குறியீடு செய்வதற்குப் பயன்படுகிறது.
ஸ்மார்ட்கோடு இன்ஃபோஇமேஜிங் டெக்னாலஜீஸில் இருந்து.
ஸ்னோஃபிளேக் குறியீடு மார்கோனி டேட்டா சிஸ்டம்ஸ், இன்க்கில் இருந்து.
ஷாட்கோடு ஓ.பி.3 மூலமாக கேமரா மொபைல் தொலைபேசிகளுக்கான வட்ட பார்கோடுகள். முதலில் ஸ்பாட்கோடு என்ற பெயரில் ஹை எனர்ஜி மேஜிக் லிமிட்டடால் உருவாக்கப்பட்டது. முன்னர் அது ட்ரிப்கோடு என்று கூறப்பட்டிருக்கலாம்.
ஸ்பார்க்கோடு MSKYNET, இன்க்கில் இருந்து க்யூ.ஆர் கோடு குறியீடு செய்தல் தரநிலை.
சூப்பர்கோடு பொது டொமைன்.
ட்ரில்கோடு லார்க் கம்ப்யூட்டர்ஸில் இருந்து. மொபைல் சாதனத்தின் கேமரா அல்லது பி.சி வெப்கேமுடன் வேலை செயூம் விதமாக வடிவமைக்கப்பட்டது. இதில் பல்வேறு வகையான "செயல்பாடுகளைக்" குறியீடு செய்யலாம்.
அல்ட்ராகோடு கருப்பு வெள்ளை & வர்ணப் பதிப்புகள். பொது டொமைன். ஜெஃப்ரீ காஃப்மேன் (Jeffrey Kaufman) மற்றும் கிளைவ் ஹோபர்கர் (Clive Hohberger) ஆகியோரால் உருவாக்கப்பட்டது.
யூனிஸ்கோடு "பீஜிங் யூ குறியீடு" என்றும் இது அழைக்கப்படுகிறது; இது சீன நிறுவனமான யூனிஸினால் உருவாக்கப்பட்ட வர்ண 2டி பார்கோடு ஆகும்
வெரிகோடு, வி.எஸ்.கோடு வெரிடெக், இன்க்கில் இருந்து.
வாட்டர்கோடு மார்க்எனி இன்க்கால் உருவாக்கப்பட்ட உயர் அடர்த்தி 2டி பார்கோடு(440 பைட்டுகள்/செமீ2).

எடுத்துக்காட்டு உருவப்படங்கள் தொகு

குறிப்புதவிகள் தொகு

குறிப்புகள் தொகு

  1. 25-12-2013 அன்று வெளிவந்த கல்கண்டு வார இதழ்.பக்கம்-02
  2. சில புதிய வட அமெரிக்க ஆர்.எஃப்.ஐ.டி பயன்பாடுகள், rfidradio.com
  3. 3.0 3.1 டோனி செய்டுமேன், "பார்கோடுகள் உலகத்தைத் துடைக்கின்றன" பரணிடப்பட்டது 2016-09-03 at the வந்தவழி இயந்திரம், barcoding.com ஒண்டர்ஸ் ஆஃப் மாடர்ன் டெக்னாலஜி
  4. ஜார்ஜ் லாரர், "டெவலப்மென்ட் ஆஃப் த யூ.பீ.சி. சிம்பல்" பரணிடப்பட்டது 2008-09-25 at the வந்தவழி இயந்திரம், bellsouthpwp.net
  5. Nelson, Benjamin (1997). From Punched Cards To Bar Codes. 
  6. 6.0 6.1 Varchaver, Nicholas (2004-05-31). "Scanning the Globe". Fortune. http://money.cnn.com/magazines/fortune/fortune_archive/2004/05/31/370719/index.htm. பார்த்த நாள்: 2006-11-27. 
  7. 7.0 7.1 Selmeier, Bill (2008). Spreading the Barcode. பக். 26, 214, 236, 238, 244, 245, 236, 238, 244, 245. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-578-02417-2. 
  8. Bishop, Tricia (July 5, 2004). "UPC bar code has been in use 30 years". SFgate.com. பார்க்கப்பட்ட நாள் 22 December 2009.
  9. "Adams1.com". Archived from the original on 2010-05-02. பார்க்கப்பட்ட நாள் 2010-05-12.
  10. Expedimedia.com, பார்கோடை எவ்வாறு பயன்படுத்துவது
  11. IATA.org
  12. "வடுஜிட்டூவிற்கான பேப்பர்பைட் பார் கோடுகள்" பைட் பத்திரிகை, 1978 செப்டம்பர் ப. 172
  13. ஹார்மோன் மற்றும் ஆடம்ஸ்(1989). ரீடிங் பிட்வீன் த லைன்ஸ் , ப.13. ஹெல்மர்ஸ் பப்ளிஷிங், இங்க், பீட்டர்பாரோ, நியூ ஹாம்ப்சைர், அமெரிக்கா. ISBN 0-911261-00-1.
  14. FDA.gov
  15. சீ. சீ. எலியன் எழுதிய குரோமெட்டிக் ஆல்ஃபபெட் த எலியன் ஸ்க்ரிப்ட், ccelian.com
  16. குரோமோகோடு ... மல்டிகலர் / பாலிகுரோமட்டிக் பார்கோடு சிம்பாலஜி
  17. Colorzip.com
  18. ""Barcodes for TV Commercials"". Adverlab.blogspot.com. 2006-01-31. பார்க்கப்பட்ட நாள் 2009-06-10.
  19. டி-டச் டாப்பலாஜிக்கல் பிடுசியல் ரிககனைசன் பரணிடப்பட்டது 2008-03-02 at the வந்தவழி இயந்திரம்; "டி-டச் மார்கர்ஸ் ஆர் அப்ளைடு டூ டிபார்மபில் குளோஸ்" பரணிடப்பட்டது 2008-06-21 at the வந்தவழி இயந்திரம், media.mit.edu
  20. விவரங்களுக்கு பார்க்க Xerox.com.
  21. scanbuy.com
  22. "BarCode-1 2-Dimensional Bar Code Page". Adams1.com. Archived from the original on 2008-11-03. பார்க்கப்பட்ட நாள் 2009-06-10.
  23. PaperDisk.com
  24. Quickmark.com

ஆதார நூற்பட்டியல் தொகு

  • ஆட்டோமேட்டிங் மேனேஜ்மென்ட் இன்ஃபர்மேசன் சிஸ்டம்ஸ்: பார்கோடு என்ஜினியரிங் அண்ட் இம்பிலிமென்டேசன் – ஹாரி ஈ. பர்க், தாம்சன் லெர்னிங், ISBN 0-442-20712-3
  • ஆட்டோமேட்டிங் மேனேஜ்மென்ட் இன்ஃபர்மேசன் சிஸ்டம்ஸ்: பிரின்சிபல்ஸ் ஆஃப் பார்கோடு அப்ளிகேசன்ஸ் – ஹாரி ஈ. பர்க், தாம்சன் லெர்னிங், ISBN 0-442-20667-4
  • த பார் கோடு புக் – ரோகர் சீ. பால்மர், ஹெல்மர்ஸ் பப்ளிஷிங், ISBN 0-911261-09-5, 386 பக்கங்கள்
  • த பார் கோடு மேனுவல் – ஈஜென் எஃப். பிரிக்ஹன், தாம்சன் லெர்னிங், ISBN 0-03-016173-8
  • ஹேண்ட்புக் ஆஃப் பார் கோடிங் சிஸ்டம்ஸ் – ஹாரி ஈ. பர்க், வேன் நோஸ்ட்ரன்ட் ரெயின்ஹோல்ட் நிறுவனம், ISBN 978-0-442-21430-2, 219 பக்கங்கள்
  • இன்ஃபர்மேசன் டெக்னாலஜி ஃபார் ரீடெயில்:ஆட்டோமேட்டிக் ஐடெண்டிஃபிகேசன் & டேட்டா கேப்ச்சர் சிஸ்டம்ஸ் - கிர்தார் ஜோஷி, ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ், ISBN 0-19-569796-0, 416 பக்கங்கள்
  • லைன்ஸ் ஆஃப் கம்யூனிகேசன் – கிரெய்க் கே. ஹார்மோன், ஹெல்மர்ஸ் பப்ளிஷிங், ISBN 0-911261-07-9, 425 பக்கங்கள்
  • பன்ச்சுடு கார்ட்ஸ் டூ பார் கோட்ஸ் – பெஞ்சமின் நெல்சன், ஹெல்மர்ஸ் பப்ளிஷிங், ISBN 0-911261-12-5, 434 பக்கங்கள்
  • ரிவெல்யூசன் அட் த செக்அவுட் கவுண்டர்: த எக்ஸ்ப்லோசன் ஆஃப் த பார் கோடு – ஸ்டீபன் ஏ. பிரவுன், ஹார்வர்டு யுனிவர்சிட்டி பிரஸ், ISBN 0-674-76720-9
  • ரீடிங் பிட்வீன் த லைன்ஸ் – கிரெய்க் கே. ஹார்மோன் மற்றும் ருஸ் ஆடம்ஸ், ஹெல்மர்ஸ் பப்ளிஷிங், ISBN 0-911261-00-1, 297 பக்கங்கள்
  • த பிளாக் அண்ட் ஒயிட் சொல்யூசன்: பார் கோடு அண்ட் த ஐ.பீ.எம். பீ.சீ. – ருஸ் ஆடம்ஸ் மற்றும் ஜாய்ஸ் லேன், ஹெல்மர்ஸ் பப்ளிஷிங், ISBN 0-911261-01-X, 169 பக்கங்கள்
  • சோர்ஸ்புக் ஆஃப் ஆட்டோமேட்டிக் ஐடெண்டிஃபிகேசன் அண்ட் டேட்டா கலெக்சன் – ருஸ் ஆடம்ஸ், வேன் நோஸ்ட்ரன்ட் ரெயின்ஹோல்ட், ISBN 0-442-31850-2, 298 பக்கங்கள்

புற இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Barcode
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

வார்ப்புரு:Barcodes வார்ப்புரு:Paper data storage media

"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்கோடு&oldid=3731427" இலிருந்து மீள்விக்கப்பட்டது