பாலி(பாரா-பீனைலீன்)

பலபடிச் சேர்மம்

பாலி(பாரா-பீனைலீன் (Poly(p-phenylene)) என்பது பாரா-பீனைலீன் அலகுகள் அடுத்தடுத்து இடம்பெற்று உருவாகும் பலபடிச் சேர்மமாகும். வளையாத பலபடி குடும்பத்தில் உள்ள கடத்தும் பலபடியை தயாரிப்பதற்குத் தேவையான ஒரு முன்னோடிச் சேர்மமாக இச்சேர்மம் செயல்படுகிறது. சுசூகி பிணைப்பு முறையுடன் பல்லொடுக்க வினையும் சேர்த்து பாலி(பாரா-பீனைலீன் தயாரிக்கப்படுகிறது [1]. முன்னதாக மேற்கொள்ளப்பட்ட தயாரிப்பு முயற்சிகளில் கருப்பு நிறத்தில் கரையாத தூளாக இச்சேர்மம் உற்பத்தி செய்யப்பட்டது. இதன் பண்புகளை விவரிப்பது சிரமமாக இருந்தது. உதாரணமாக, புன்சன் சுடரில் எந்தவிதமான சுவாலையையும் உருவாக்காமல் ஒரு திடப்பொருள் செஞ்சிவப்பாக ஒளிர்ந்து மெதுவாக மறைந்தது என்று செய்தித்தாள் செய்திகள் தெரிவித்தன [2]. தொடக்கத்தில் இச்சேர்மத்தின் வேதியியல் மற்றும் வெப்பவியல் நிலைப்புத்தன்மை இதை தயாரிக்கும் ஆர்வத்திற்கு அடிப்படையாக அமைந்தது. அதிக வெப்பநிலைப்புத் தன்மை தேவைப்படும் ராக்கெட் கூர்முனைகளிலும் சில துணி வகைகளிலும் இச்சேர்மம் பயன்படுகிறது.

அடுத்தடுத்து வரும் பாலி(பாரா-பீனைலீன் அலகின் கட்டமைப்பு

ஆக்சிசனேற்றம் அல்லது மாசுகலப்பு செய்து குறைக்கடத்திக்கு தேவையான கடத்தா பாலி(பாரா-பீனைலீன் தயாரிக்கப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Remmers, Marcus; Müller, Beate; Martin, Kai; Räder, Hans-Joachim (1999). "Poly(p-phenylene)s. Synthesis, Optical Properties, and Quantitative Analysis with HPLC and MALDI−TOF Mass Spectrometry". Macromolecules 32 (4). doi:10.1021/ma981260s. 
  2. Kovacic, Peter; Kyriakis, Alexander (1962). "Polymerization of benzene to p-polyphenyl". Tetrahedron Letters 3 (11): 467–469. doi:10.1016/S0040-4039(00)70494-1. http://www.sciencedirect.com/science/article/pii/S0040403900704941. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலி(பாரா-பீனைலீன்)&oldid=3447163" இலிருந்து மீள்விக்கப்பட்டது