பாலைவன நரி
விர்சீனியா விலங்குப் பூங்காவில் உள்ள ஒரு பாலைவவன நரி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: ஊனுண்ணி
குடும்பம்: நாய்க் குடும்பம்
பேரினம்: நரி'
இனம்: பாலைவன நரி
வாழிடம்

பாலைவன நரி (Fennec fox) என்பது பாலைவனத்தில் வாழும் நரி இனம் ஆகும். இது சகாரா, சினாய் தீபகற்பம், அரவா பாலைவனம் மற்றும் அரேபியப் பாலைவனம் ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றது.[1] இது நாய்க்குடும்பத்தில் உள்ள இனங்கள் அனைத்திலும் மிகச்சிறிய உருவுடையதாகும்.[2]

பாதுகாப்பு தொகு

பாலைவன நரி, அழிந்து வரும் உயிரினங்களில் காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் பன்னாட்டு வர்த்தகம் பற்றிய மாநாடுபின் இணைப்பு II-ல் பட்டியலிடப்பட்டுள்ளது. இது மொராக்கோவில் (மேற்கு சகாரா உட்பட), அல்சீரியா, தூனிசியா மற்றும் எகிப்தில் பாதுகாக்கப்படுகிறது, இங்கு இது பல பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.[3]

கலாச்சார சித்தரிப்புகள் தொகு

பாலைவன நரி அல்சீரியாவின் தேசிய விலங்கு ஆகும்.[4] இது அல்சீரியா தேசிய கால்பந்து அணியின் புனைப்பெயராகவும் உள்ளது ("லெசு பெனெக்சு").[5]

 
"குசுடாவ் முட்செல், 1876-ல் வரைந்த பாலைவன நரிகளின் ஓவியம்

மேற்கோள்கள் தொகு

  1. Fennecus zerda Encyclopedia of Zoology, Ynet
  2. "Small Mammals: Fennec Fox". Smithsonian National Zoological Park. Archived from the original on 18 ஏப்பிரல் 2010. பார்க்கப்பட்ட நாள் 17 திசம்பர் 2009.
  3. "Appendices | CITES". cites.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
  4. Hodges, K. "National Animals of African Countries". Archived from the original on 25 February 2014. பார்க்கப்பட்ட நாள் 19 February 2014.
  5. Fifa (2009). "Paris salutes Les Fennecs". Fifa. Archived from the original on 2010-06-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலைவன_நரி&oldid=3615961" இலிருந்து மீள்விக்கப்பட்டது