பாவெல் பெத்ரோவிச் பரெனாகோ

சோவியத் வானியலாளர்(1906-1960)

பாவெல் பெத்ரோவிச் பரெனாகோ (Pavel Petrovich Parenago) (20 மார்ச்சு 1906 – 5 ஜனவரி 1960) ஓர் உருசிய சோவியத் அறிவியளாளரும் வானியலாளரும் பேராசிரியரும் ஆவார். இவர் மாச்கோ பல்கலைக்கழக எம். வி. இலமனாசொவ் உடுக்கண வானியல் துறையின் தலைவராக விளங்கினார். இவர் சோவியத் அறிவியல் கல்விக்கழக உயர்நில்நி உறுப்பினராக இருந்தார்.[1][2]

பாவெல் பெத்ரோவிச் பரெனாகோ
Pavel Petrovich Parenago
பிறப்பு(1906-03-20)20 மார்ச்சு 1906
கிராசுநோதார், உருசியா
இறப்பு5 சனவரி 1960(1960-01-05) (அகவை 53)
தேசியம்உருசியர்
துறைவானியல்
பணியிடங்கள்மாஸ்கோ அரசு பல்கலைக்கழகம், சோவியத் அறிவியல் கல்விக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்மாஸ்கோ அரசு பல்கலைக்கழகம்
அறியப்படுவதுபால்வெளி வானியல் ஆராய்ச்சி
விருதுகள்இலெனின் ஆணை, பிரெதுகின் பரிசு
குறிப்புகள்

இவர் அறிவியல் கல்விக்கழகத்துக்கு 1953 தேர்வு செய்யப்பட்டார். பின்னர் இவருக்கு 1954 இல் அக்கழகம் நிறுவிய பிரெதுகின் பரிசை அவ்வாண்டே முதன்முதலில் பெற்றார்.[2]

இவர் தன் கடைசி வாழ்நாளில், பல்லாண்டுகள் தொடர்ந்து வாட்டிய நோயால் நலிவுற்று, 1960 இல் இறக்கும் வரை முந்தைய பணிகளைத் திருத்தியவண்ணம் காலம் கழித்தார்.[1]

தகைமைகள் தொகு

இவர் சோவ்யதொன்றிய அறிவியல் பங்களிப்புகளுக்காக இலெனின் ஆணை பெற்றுள்ளார். 2484 பரெனாகோ குறுங்கோளும் நிலாவின் பரெனாகோ குழிப்பள்ளமும் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளன.[1][3][4]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 "Obituary: Pavel Petrovich Parenago". Soviet Astronomy 4: 183–184. 1960. Bibcode: 1960SvA.....4..183.. 
  2. 2.0 2.1 2.2 Rastorguev, A. (April–June 2006). "Pavel Petrovich Parenago All-Russian Astronomical Conference ‘Stellar Systems’". Astronomical and Astrophysical Transactions 25 (2–3): 119–121. doi:10.1080/10556790600918547. Bibcode: 2006A&AT...25..119R. http://images.astronet.ru/pubd/2008/09/29/0001230907/119-121.pdf. பார்த்த நாள்: 13 March 2011. 
  3. "2484 Parenago". Jet Propulsion Laboratory/California Institute of Technology. பார்க்கப்பட்ட நாள் 13 March 2011.
  4. "Parenago". Gazetteer of Planetary Nomenclature. International Astronomical Union. பார்க்கப்பட்ட நாள் 13 March 2011.