பாஸ்டன் மாரத்தான்

பாசுடன் மாரத்தான் (Boston Marathon)கிழக்கு மாசச்சூசெட்சில் உள்ள பாசுடன் பெருநகரப் பகுதியிலுள்ள பல நகரங்களால் ஆண்டுதோறும் நடத்தப்பெறும் ஓர் மாரத்தான் போட்டியாகும். இது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தின் மூன்றாம் திங்களன்று நாட்டுப்பற்றாளர்களின் நாளில் நடத்தப்படுகிறது. 1896ஆம் ஆண்டு துவங்கிய முதல் தற்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் இடம்பெற்ற மாரத்தான் போட்டியால் ஈர்க்கப்பட்டு 1897ஆம் ஆண்டிலிருந்து இங்கு நடத்தப்படுகிறது. ,[1] எனவே இதுவே உலகின் மிகவும் பழமையான வருடாந்திர மாரத்தானாக விளங்குகிறது. உலகின் மிகவும் அறியப்பட்ட சாலைப் போட்டிகளில் ஒன்றாகவும் திகழ்கிறது. உலகின் ஆறு முதன்மையான மாரத்தான் போட்டிகளில் இதுவும் ஒன்றாகும். இதனை பாசுடன் தடக்கள சங்கம் (B.A.A.) 1897 முதலே நிர்வகித்து வருகிறது.[2] ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல பகுதிகளிலிருந்தும் தொழில்முறை ஒட்ட வீரர்களும் தொழில்முறையல்லாத ஒட்ட வீரர்களும் இந்தப் போட்டியில் கலந்து கொள்கின்றனர். நியூ இங்கிலாந்தின் குன்றுப்பகுதிகளில் மாறுகின்ற வானிலை காலங்களில் நடைபெறும் இந்நிகழ்வு ஓர் சாதனைப்போட்டியாகவே உள்ளது.

பாஸ்டன் மாரத்தான்
பாசுடன் மாரத்தான் சின்னம்
நாள்ஏப்ரல் மாதத்தின் மூன்றாம் திங்கள்
நிகழ்விடம்கிழக்கு மாசச்சூசெட்சில் துவங்கி பாசஸ்டன்
நிகழ்வு வகைசாலை
தொலைவுமாரத்தான்
நிறுவப்பட்டது1897
களச் சாதனைகள்ஆடவர்: 2:03:02 (2011)
ஜியோஃப்ரி முதாய்
மகளிர்: 2:20:43 (2002)
மார்கரெட் ஓகயோ
அலுவல்முறை வலைத்தளம்www.bostonmarathon.org

ஒவ்வொரு ஆண்டும் 500,000 பார்வையாளர்களை இப்போட்டி ஈர்க்கிறது.[3] 1897இல் 18 போட்டியாளர்களே பங்குகொண்ட இதில் 2011இல் 26,895 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.[4] 1996இல் நடந்த நூற்றாண்டுவிழா பாசுடன் மாரத்தானில் உலகளவில் ஓர் சாதனையாக 38,708 பதிவுசெய்தவர்களும், 36,748 துவக்க ஓட்டக்காரர்களும், 35,868 நிறைவு செய்தவர்களும் பங்கேற்றனர்.[3]

1972லிருந்தே பெண்கள் அதிகாரபூர்வமாக இதில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். 1966 ல் பாபி கிப் முழு பாசுடன் மாரத்தானையும் ஓடிய முதல் பெண் என்று அடையாளம் கண்டுகொள்ளப்பட்டார். 1972ல் கேத்தி சுவிட்சர் கே.வி. சுவிட்சர் என்று பதிவு செய்து ஓடுபவர்க்கு கொடுக்கப்படும் அடையாள எண்ணை பெற்று ஓடினார். இவர் மாரத்தானின் முடிவு எல்லையை அணுகும் போது பந்தய அதிகாரி ஜாக் செம்பிள் இவரின் அடையாள எண்ணை பறித்து இவரை போட்டியிலிருந்து விலக்க முயன்றார் .[5]. 1996ல் பாசுடன் தடக்கள சங்கம் 1966 முதல் 1971 வரை ஓடிய பெண்களை அங்கீகரித்தது. 2011ல் பாசுடன் மாரத்தானில் கலந்துகொண்டவர்களில் 43% பேர் பெண்கள்.

2007ம் ஆண்டு சுனிதா வில்லியம்சு அனைத்துலக விண்வெளி நிலையத்தில் இருந்து கலந்து கொண்டார்.[6]

2013 குண்டு வெடிப்பு தொகு

2013ஆம் ஆண்டு பாசுடன் மாரத்தான் போட்டியின்போது, வெற்றியாளர்கள் நிறைவுக்கோட்டை எட்டி இரண்டு மணிநேரங்கள் கழித்து, நிறைவுக்கோட்டிற்கு அண்மையில் உள்ள கோப்லி சதுரத்தில் இரண்டு குண்டுகள் வெடித்தன.[7][8] இவற்றில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்; நூற்றுக்கும் கூடுதலானோர் காயமுற்றனர்.[9]

மேற்சான்றுகள் தொகு

  1. "The First Boston Marathon". Boston Athletic Association. பார்க்கப்பட்ட நாள் 2010-11-01.
  2. "Boston Athletic Association: Established March 15, 1887". Boston Athletic Association. Archived from the original on ஆகஸ்ட் 17, 2012. பார்க்கப்பட்ட நாள் July 25, 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. 3.0 3.1 "Boston Marathon History: Boston Marathon Facts". Boston Athletic Association. Archived from the original on 2012-02-02. பார்க்கப்பட்ட நாள் 2011-04-14.
  4. "Boston Marathon History: Participation". Boston Athletic Association. பார்க்கப்பட்ட நாள் 2011-04-14.
  5. "NPR: Marathon Women". NPR. April 15, 2002. பார்க்கப்பட்ட நாள் April 14, 2011.
  6. விண்வெளியில் இருந்து சுனிதா - பாசுடன் மாரத்தான்
  7. "Explosions rock Boston Marathon, several injured". CNN. April 15, 2013. பார்க்கப்பட்ட நாள் April 15, 2013.
  8. Golen, Jimmy (15 April 2013). "Two explosions at Boston marathon finish line". AP Newswire இம் மூலத்தில் இருந்து 15 ஏப்ரல் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130415231647/http://bigstory.ap.org/article/two-explosions-boston-marathon-finish-line-0. பார்த்த நாள்: 15 April 2013. 
  9. "At least two dead, scores injured after explosions rock Boston Marathon". 15 April 2013. 

இதனையும் காண்க தொகு

கூடுதல் படிப்பிற்கு தொகு

  • History of the Boston Marathon, Boston Marathon: The First Century of the World's Premier Running Event, by Tom Derderian, Human Kinetics Publishers, 1996, 634 pages, ISBN 0-88011-479-7

வெளி இணைப்புகள் தொகு


பொது உசாத்துணைகள் தொகு

ஒளிப்படங்கள் மற்றும் ஒளிதங்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஸ்டன்_மாரத்தான்&oldid=3563116" இலிருந்து மீள்விக்கப்பட்டது