பிணை ஆணை அல்லது பிணைய ஆணை(bail) ஓர் நீதிமன்றத்தில் சொத்து அல்லது வைப்புத்தொகையை பிணையாக வைத்து குற்றஞ் சாட்டப்பட்ட ஒருவரை சிறையிலிருந்து வெளிக்கொணர வகை செய்யும் நீதிமன்ற ஆணையாகும். குற்றஞ் சாட்டப்பட்டவர் நீதிமன்ற விசாரணைக்கு திரும்ப வருவார் என்றும் அவ்வாறில்லையெனில் அவரால் வைக்கப்படும் பிணையை இழப்பார்(மேலும் பிணை மீறியவர்கள் என்ற குற்றமும் சேரும்) என்பதும் கொண்ட புரிதலின் பேரிலேயே இவ்வாணை பிறப்பிக்கப்படுகிறது. இவ்வாறு பிணை ஆணை பிறப்பிக்கப்படும் முன்னர் பிணையில் வெளியே வந்தால் அவரால் புலானாய்விற்கு எந்த பாதிப்பும் உண்டாகாது என்ற கருத்தும் ஆராயப்படும். குற்றஞ்சாட்டப்பட்டவர் திரும்பி வருவார் என்பதில் ஐயங்கள் இருப்பினும் பிணை மறுக்கப்படலாம். சில சட்டமன்றங்கள் கொலைக்குற்றங்கள் போன்ற சில குற்றங்களுக்கு பிணை விடுவிப்பு கிடையாது என்றும் சட்டமியற்றலாம்.

பொதுவாக குற்ற விசாரணை முடிந்த பின்னர், அனைத்து நீதிமன்ற வருகைகளும் முடிந்தபின்னர், குற்றவாளியாக தீர்மானிக்கப்பட்டாலோ அல்லவோ பிணை விடுவிக்கப்படும். சில வழக்குகளில் பிணைப்பணம் திரும்பக் கிடைக்காது.

சில பிணை விடுவிப்பு இல்லாத நாடுகளில் குற்றஞ்சாட்டப்பட்டவரை தேவையென்றாலே சிறையிலிடுகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிணை_ஆணை&oldid=2718670" இலிருந்து மீள்விக்கப்பட்டது