பிரன்சு கார்ல் ஆச்சார்டு

செருமானிய வேதியியலாளர்

பிரன்சு கார்ல் ஆச்சார்டு (Franz Karl Achard) (28 ஏப்ரல் 1753 - 20 ஏப்ரல் 1821) ஒரு செருமானிய ( பிரஷ்யன் ) வேதியியலாளர், புவியியலாளர், இயற்பியலாளர் மற்றும் உயிரியலாளர் ஆவார் . அவரது முக்கிய கண்டுபிடிப்பு சர்க்கரைவள்ளிக் கிழங்கிலிருந்து சர்க்கரையை உற்பத்தி செய்வதற்கான எளிய தொழில்துறை செயல்முறையை கண்டுபிடித்ததாகும்.[1][2]

பிரன்சு கார்ல் ஆச்சார்டு
பிரன்சு கார்ல் ஆச்சார்டு
பிரன்சு கார்ல் ஆச்சார்டு
பிறப்பு 28 ஏப்ரல் 1753
பெர்லின், பிராண்டென்பர்கின் மார்க்ரவியேட்டு, புனித உரோமைப் பேரரசு
இறப்பு20 ஏப்ரல் 1821
கோனரி, வோலோவ் நாடு, சிலெசியா மாகாணம், புருசிய இராச்சியம், செருமானிய மாகாணங்களின் கூட்டமைப்பு
தேசியம்புருசியா
துறைஇயற்பியல், வேதியியல், உயிரியல், புவி அறிவியல்
அறியப்பட்டதுசர்க்கரை உற்பத்தி

வாழ்க்கையும் பணியும் தொகு

ஆச்சார்டு ஹியூக்னாட் அகதிகள் வழிவந்த போதகர் மேக்ஸ் குயில்லாமே ஆச்சார்டு மற்றும் மார்கரெட் எலிசபெத் ஆகியோரின் மகனாக பெர்லினில் பிறந்தார். அவர் பெர்லினில் இயற்பியல் மற்றும் வேதியியல் பயின்றார். அவர் தனது மாற்றாந்தாய் மூலம் சர்க்கரை சுத்திகரிப்பு செய்வதில் ஆர்வம் காட்டினார். 20 வயதில், ஆச்சார்ட் "இயற்கை அறிவியல் நண்பர்களின் வட்டத்தில்" நுழைந்து, ராயல் அகாடமி ஆஃப் சயின்ஸில் இயற்பியல் வகுப்புகளின் இயக்குநராக இருந்த ஆண்ட்ரியாஸ் சிகிஸ்மண்ட் மார்கிராப்பை சந்தித்தார். ஆச்சார்டு வானிலையியல், ஆவியாதலின் விளைவாக ஏற்படும் குளிர்ச்சி, மின்சாரம், தந்தி, ஈர்ப்பு விசை, மின்னலை ஈர்த்துக் கொள்ளும் அமைப்புகள் உட்பட பல பாடங்களைப் படித்து ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் வெளியிட்டார்.

ஆச்சார்டு பிரஸ்ஸியாவின் இரண்டாம் பிரடெரிக் மன்னருக்கு மிகவும் பிடித்தமானவராய் இருந்தார். மேலும், வாரத்திற்கு இரண்டு முறை தனது ஆராய்ச்சியை மன்னரிடம் நேரடியாக அறிவித்தார். மனநலத் திறன்களில் மின்சாரத்தின் செல்வாக்கு குறித்த ஒரு ஆய்வு பற்றி, ஃபிரடெரிக் II கூறியதாகக் கூறப்படுகிறது: எனது பிரஷ்ய மாநிலங்களில் மந்த புத்தியுள்ளோருக்கு மின்சாரத்தைப் பயன்படுத்தி மேம்படுத்துவதற்கான காரணத்தை வழங்க முடிந்தால், அவர் தனது சொந்த எடையை விடக் கூடுதலான தங்கத்திற்கீடான மதிப்புடையவர் என்று கூறியதாகத் தெரிகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Achard (1799) "Procédé d'extraction du sucre de bette" (Process for extracting sugar from beets), Annales de Chimie, 32 : 163-168.
  2. Wolff, G. (1953). Franz Karl Achard, 1753–1821; a contribution of the cultural history of sugar. 7. பக். 253–4. பப்மெட்:13086516.