பிராட்லி கூப்பர்

பிராட்லி கூப்பர் (Bradley Cooper, பிறப்பு: ஜனவரி 05, 1975) ஒரு ஐக்கிய அமெரிக்க நடிகர் ஆவார். இவர் 1999ம் ஆண்டு செக்ஸ் அண்ட் தி சிட்டி என்ற தொலைக்காட்சி தொடரில் மூலம் அறிமுகமானார். அதை தொடர்து 2001ம் ஆண்டு வெட் ஹாட் அமெரிக்கன் சும்‌மெர் என்ற திரைப்படத்தில் நடித்தார். 2009ம் ஆண்டு ஹேங்க் ஓவர் என்ற நகைச்சுவை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் எல்லோருக்கு மிகவும் அறியப்படும் நடிகர் ஆனார்.

பிராட்லி கூப்பர்
பிறப்புசனவரி 5, 1975 ( 1975 -01-05) (அகவை 49)
பிலடெல்பியா, பென்சில்வேனியா, ஐக்கிய அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்வில்ல பல்கலைக்கழகம்
ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம்
நடிகர்கள் ஸ்டுடியோ
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1999-தற்சமயம்
சமயம்ரோமன் கத்தோலிக்கம்
வாழ்க்கைத்
துணை
ஜெனிபர் எஸ்போசிடோ (2006-2007)

இவர் பல விருதுகளின் பரிந்துரை செய்யப்பட்டு ஏழு அகாதமி விருது மற்றும் டோனி விருது, கிராமி விருது, பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள் போன்ற பல விருதுகளை வெற்றுள்ளார். பிராட்லி கூப்பர் 2015 ஆண்டு மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் சிறந்த 100 பெயரில் இவரும் ஒருவர் என டைம் என்ற செய்தி நாளிதழ் அறிவித்தது.

ஆரம்பகால வாழ்க்கை தொகு

கூப்பர் பிலடெல்பியாவில் பிறந்து ஜென்கின்டவுன் பென்சில்வேனியாவில் வளர்ந்தார். இவரது தாயார், குளோரியா (நீ கம்பனோ), இத்தாலிய வம்சாவளியை சேர்ந்தவர் மற்றும் உள்ளூர் என்பிசி யில் வேலை செய்கின்றார். இவரது தந்தை, சார்லஸ் ஜே கூப்பர், ஐரிஷ் வம்சாவளியை சேர்ந்தவர், மற்றும் மெர்ரில் லிஞ்ச் ஒரு பங்கு தரகர் பணியாற்றினார், (வயது 71, 2011 இறந்தார்). இவருக்கு ஹோலி என்ற ஒரு சகோதரி உண்டு. ஒரு கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவர் ஆவார்.

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

கூப்பர் 2006 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடிகை ஜெனிபர் எஸ்போசிடோ திருமணம் செய்துகொண்டார். மே 2007 ல், எஸ்போசிடோ விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். கூப்பர் Renee Zellweger உடன் நீண்ட கால உறவு இருந்தார். கூப்பர் மது குடிக்க கூடாது என்று தனது 29 வயது முதல் புறக்கணித்துள்ளார். கூப்பர் மார்ச் 2013 ஆண்டு மாடல் சுகி வாட்டர்ஹவுஸ் டேட்டிங் சென்றார்.

சின்னத்திரை தொகு

இவர் நடித்த சில தொடர்கள்:

ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
1999 செக்ஸ் அண்ட் தி சிட்டி ஜேக்
2000 குளோப் ட்ரெக்கர்
2000–2001 தி ஸ்ட்ரீட் கிளே ஹம்மொந்து 5 அத்தியாயங்கள்
2001–2006 அலைஸ் 46 அத்தியாயங்கள்
2003 மிஸ் மேட்ச் கேரி அத்தியாயம்: "I Got You Babe"
2004 டௌசிங் ஈவில் OSC அகேன்ட் மார்க் ரிவேர்ஸ் 6 அத்தியாயங்கள்
2004–2005 ஜேக் & பாபி டாம் வேக்ஸ்லெர் கிரஹாம் 14 அத்தியாயங்கள்
2007–2009 நிப்/டுக் எயிடன் ஸ்டோன் 6 அத்தியாயங்கள்
2009 சாட்டர்டே நைட் லைவ் ஹோஸ்ட்
2010 WWE ராவ் அவராகவே - விருந்தினர் 3-மணி பார்வையாளர் தேர்வு
2013 சாட்டர்டே நைட் லைவ் அவராகவே

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராட்லி_கூப்பர்&oldid=3205185" இலிருந்து மீள்விக்கப்பட்டது