பிரெஞ்சு வறுவல் செய்து விற்கும் இயந்திரம்

பிரெஞ்சு வறுவல் செய்து விற்கும் இயந்திரம் (French Fry Vending Machine) சூடான பிரெஞ்சு வறுவலை (French fries) விற்கும் ஒரு இயந்திரமாகும்.[1][2][3] இந்த வறுவலுக்கு சிப்சு என்று இன்னொரு பெயரும் உண்டு. ஆசுத்திரேலியா நாட்டில் பிரசிசன் வறுவல் உணவுகள் குழுமம் என்னும் நிறுவனத்தால் முதலில் 1982 ஆண்டு இது போன்ற ஒரு இயந்திரம் உருவாக்கப்பட்டது. இந்நிறுவனம் தற்பொழுது செயல்படவில்லை. வேறு சில நிறுவனங்களும் இது போன்ற இயந்திரங்களையும், மாதிரிகளையும் உருவாக்கின. நெதர்லாந்து நாட்டில் வேசனிங்கன் பல்கலைக்கழகத்திலும் இது போன்று ஒரு மாதிரி இயந்திரம் உருவாக்கப்பட்டது.

A Just Fries brand French fry vending machine at Central Station in Montreal, Canada
கானடா நாட்டில் மாண்டிரியல் நகரில் மைய நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பிரெஞ்சு வறுவல் விற்கும் இயந்திரம்
Side view of a Just Fries brand vending machine in Valenciennes, France
பிரான்சு நாட்டில் வேலன்சியர்சுவில் வைக்கப்பட்ட இயந்திரத்தின் பக்க பார்வை

வணிக முத்திரை, தயாரிப்பு, மாதிரிகள் தொகு

வரலாறு தொகு

பிரெஞ்சு வறுவல் என்ற பெயருடன் தற்பொழுது செயல்படாத ஆசுத்திரேலிய நிறுவனமான பிரசிசன் வறுவல் உணவு நிறுவனம் (தனி) முதன்முதலில் இதற்கான இயந்திரத்தை வடிவமைத்திருந்தது..[4] 1982 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் இந்த வடிவமைப்பை ஆசுத்திரேலியா அரசிடம் பதிவு செய்திருந்தது. [5].இவ்வியந்திரம் 60 வினாடிகளில் வறுவலைத் தயாரித்துத் தந்தது. இதற்காக 0.20 ஆசுத்திரேலிய டாலர்களை விலையாகப் பெற்றது.[6] வறுவல்களை வழங்கிய கோப்பையுடன் சிறிய உப்புப் பொட்டலத்தையும் தந்தது.[7]

1990 செப்டம்பா் மாதத்திற்கு பின்பு கவுசிங் விற்பனைக் குழுமம் என்னும் நிறுவனம் இது போன்ற ஒரு இயந்திரத்தை உருவாக்கி, அதற்கு திரு கிருச்பி என்று பெயர் சூட்டி, கல்லூரிகள், தொழிற்சாலை போன்ற பல இடங்களில் வைத்தது.[8]. வறுவல்கள் சூரியகாந்தி எண்ணெயில் 360 டிகிரி பாரன்கீட்டு சூட்டில் 40 வினாடிகள் வறுக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்டன. எண்ணெயை மாற்றி புதிய எண்ணெய் பயன்படுத்து முன் 500 முறை வறுவல்கள் வறுத்தெடுக்கப்பட்டன [9].இயந்திரம் பழுதடைந்தால் தானாக நின்று விடும் வசதியும் தீயணைப்புக்கருவிகள் இணைத்தும் உருவாக்கப்பட்டிருந்தன. [10]

சமகாலம் தொகு

2008 ஆம் ஆண்டில் சீன நாட்டில் செசுனியன் மாகாணத்தில் பியாண்டு தொழில் நுட்பத்தின் அடிப்படையில் ரோபோ வறுவல் இயந்திரம் உருவாக்கப்பட்டது. இவ்வியந்திரம் 95 வினாடிகளில் வறுவலைத் தயார் செய்தது.[1]பெல்சியம் நாட்டிலுள்ள பிரேக் டைம் சொலுசன் என்னும் நிறுவனம் பியன்டு தொழில் நுட்பத்தை விலைக்கு வாங்கியது.[11]பெல்சிய நாட்டுத் தொழில் முனைவோர் இவ்வியந்திரங்களைத் தயாரித்து [12]பிரச்சல் நகரில் 2012 கோடையில் சோதனை செய்து பார்த்தனர். மாட்டுக்கொழுப்பு அல்லது சமையல் எண்ணெயில் வறுவலை இவ்வியந்திரம் தயாரித்தது.[1] இவ்வியந்திரத்தின் எடை 750 பவுண்டாக இருந்தது. பிரேக் டைம் சொலுசன் நிறுவனம் மாட்டுக்கொழுப்பைப் பயன்படுத்தி இவ்வியந்திரத்தின் மூலம் வறுவல் செய்வதற்கு சுமார் ஒரு வருடம் எடுத்துக்கொண்டது.[13] 150 முறை வறுவல் தயாரித்தபின் இவ்வியந்திரத்தை சுத்தம் செய்ய வேண்டும்படியும் பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டும்படியும் இவ்வியந்திரம் வடிவமைக்கப்பட்டிருந்தது.[1] இவ்வியந்திரத்தில் நாற்றம் வருவதைக் குறைப்பதற்காக மூன்று வடிகட்டும் வசதியும் காற்றோட்ட வசதியையும் சேர்த்து மேம்பாடுகள் பின்னர் செய்யப்பட்டன.[14]. நியுயார்க் டைம்சு பத்திரிக்கை ரோபோ வறுவல் இயந்திரத்தை “ரோலசுராய் வறுவல் இயந்திரம்” என்று புகழ்ந்து எழுதியது.[15].[16] 2013 ஆகஸ்டு மாதம் இவ்வியந்திரத்தின் மூலம் வாங்கப்படும் ஒவ்வொரு கட்டு வறுவலுக்கும் 3.50 அமெரிக்க டாலர் விலையாக பெறப்பட்டது.[17] வாடிக்கையாளர் ஒவ்வொரு முறை வாங்கும் பொழுதும் தமது விருப்பத்திற்கேற்ப தக்காளி சாறோ அல்லது மேயோனசுவோ பெற்றுக்கொள்ளலாம் அல்லது அரிச்சாறும் பெற்றுக்கொள்ளலாம் [18]. இயந்திரம் வறுவலை எடுத்து உண்ண சிறிய முள்கரண்டியையும் கொடுக்கும்.[19].

இவென்ட் தொழில்நுட்பம் என்னும் உருச்சிய குழுமம் அமெரிக்கத் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சீனாவிலும், இசுரேலிலும் இது போன்ற இயந்திரங்களைத் தயாரித்து.[20] இவ்வியந்திரம் உறைய வைக்கப்பட்ட பிரான்சு வறுவல்களை சமையல் எண்ணெய்க்குப் பதிலாக சூடான காற்றைப் பயன்படுத்தி 45 வினாடிகளில் தயாரிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டிருந்தது.[21]

சுலோவோகியா நகரசந்தைகளில் குலிப்டோலிச்சி மிதுவாலில் உள்ள போட்டோலுக் என்னும் நிறுவனம் இது போன்ற இயந்திரத்தை விற்று வந்தது.[22]

10 ஆண்டுகள் முன்னேற்றத்திற்குப் பின்பு 2015 ஆம் ஆண்டு சனவரி மாதம் ஆசுத்திரேலியா நாட்டில் பெர்த் நகரில் காட்சிப் குழுமம் எண்ணெயிலிருந்து வறுவல் செய்யும் ஒரு இயந்திரத்தைச் செய்து வெளியிட்டது [23]. இதுபோன்று பல இயந்திரங்களை உருவாக்கி சந்தைப்படுத்த இருப்பதாக 2015 ஆண்டு இந்த நிறுவனம் அறிவித்தது.[24]. இதற்கு முன்னோடியாக நான்கு மாதிரி இயந்திரங்களை பெர்த் நகரிலும் அடிலேடு நகரிலும் சோதனை செய்து பார்த்தது [25]. இவ்வியந்திரங்கள் வறுவலையும் உணவு ருசிப்பொருள்களையும் வழங்கின.[26]. 2015 செப்டம்பர் மாதம் நெதர்லாண்டு நாட்டில் வேசிநிங்கள் பல்கலைக்கழகத்தில் மாணவர்களும் தொழில் முனைவோரும் இணைந்து உறைய வைத்த வறுவல்களைப் பயன்படுத்தி வறுவல் தயாரிக்கும் ‘தானியங்கி இயந்திரம்’ ஒன்றை அறிமுகப்படுத்தினர்.[2][3][27] வறுவலுடன் தக்காளிச்சாறு அல்லது மேயோன்னைசு போன்ற ருசி வழங்கும் பொருள்களும் அளிக்கப்பட்டன.[2] வறுவலை செய்து கொடுப்பதற்கு இவ்வியந்திரம் இரண்டு மணித்துளிகளை எடுத்துக் கொண்டது.[2][3]வருவல் ஒரு காகிதக் கோப்பையில் கொடுக்கப்பட்டது [28]. வறுவல் இயந்திரத்தில் -18 டிகிரி சென்டிகிரேடில் உறைய வைத்துப் பின் 180 சென்டிகிரேடில் எண்ணெயில் பொறிக்கப்பட்டு வழங்கப்பட்டது.[29][30] வறுவல்கள் சிதையாமலும் உடையாமலும் இருக்க சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பொறி ஏதுவாக இருந்தது [31]. . 2015 செப்டம்பர் மாத நிலவரப்படி ஒரே ஒரு மாதிரி இயந்திரம் வேசிநிங்கன் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டிருந்தது.[32] தொடுதிரை மூலம் தேவையைப் பதியவும், வேண்டிய முட்கரண்டியையும், கரண்டியையும் எடுத்துக்கொள்ள தனியாகப் பெட்டியும் இயந்திரத்தில் இணைக்கப்பட்டிருந்தன [33]. .

பார்வைக்கு வைக்கும் படங்கள் தொகு

ஆதாரங்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 Cushing, Belle (November 14, 2013). "This French Fry Vending Machine Is Poised for Global Domination". Grub Street. பார்க்கப்பட்ட நாள் October 29, 2015.
  2. 2.0 2.1 2.2 2.3 Fuhrmeister, Chris (September 3, 2015). "Finally, a Vending Machine That Dispenses Hot French Fries". Eater. பார்க்கப்பட்ட நாள் October 29, 2015.
  3. 3.0 3.1 3.2 Taylor, Kate (September 4, 2015). "There's Now a Vending Machine That Dispenses Hot French Fries". Entrepreneur. பார்க்கப்பட்ட நாள் October 29, 2015.
  4. Grindlay, Danielle (January 29, 2015). "Hot chip vending machine invented in SA 32 years ago". ABC Rural. Retrieved October 29, 2015.
  5. Grindlay, Danielle (January 29, 2015). "Hot chip vending machine invented in SA 32 years ago".ABC Rural. Retrieved October 29, 2015
  6. Grindlay, Danielle (January 29, 2015). "Hot chip vending machine invented in SA 32 years ago". ABC Rural. Retrieved October 29, 2015.
  7. Grindlay, Danielle (January 29, 2015). "Hot chip vending machine invented in SA 32 years ago". ABC Rural. Retrieved October 29, 2015.
  8. McClendon, Kristi (September 27, 1990). "Mixed reviews for Mr. Crispy". The Daily Collegian. Retrieved October 29, 2015
  9. McClendon, Kristi (September 27, 1990). "Mixed reviews for Mr. Crispy". The Daily Collegian. Retrieved October 29, 2015
  10. McClendon, Kristi (September 27, 1990). "Mixed reviews for Mr. Crispy". The Daily Collegian. Retrieved October 29, 2015
  11. Eagle, Jenny (November 25, 2013). "French fries vending machine ‘get rich quick’ scam?". Food Production Daily. Retrieved October 29, 2015.
  12. Blaustein, Michael (August 19, 2013). "Belgium gets Rolls Royce of vending machines – fresh french fries in 90 seconds flat". New York Post. RetrievedOctober 29, 2015
  13. Kirkova, Deni (August 26, 2013). "Now THAT'S what you call fast food! Belgian vending machine dispenses French fries in an instant". Daily Mail. Retrieved October 29, 2015.
  14. Blaustein, Michael (August 19, 2013). "Belgium gets Rolls Royce of vending machines – fresh french fries in 90 seconds flat". New York Post. RetrievedOctober 29, 2015
  15. Blaustein, Michael (August 19, 2013). "Belgium gets Rolls Royce of vending machines – fresh french fries in 90 seconds flat". New York Post. RetrievedOctober 29, 2015
  16. Krader, Kate (April 29, 2014). "How Well Do You Know Your Vending Machines? Take the Quiz!".Food & Wine. Retrieved April 5, 2016.
  17. Blaustein, Michael (August 19, 2013). "Belgium gets Rolls Royce of vending machines – fresh french fries in 90 seconds flat". New York Post. RetrievedOctober 29, 2015
  18. Kirkova, Deni (August 26, 2013). "Now THAT'S what you call fast food! Belgian vending machine dispenses French fries in an instant". Daily Mail. Retrieved October 29, 2015.
  19. Kirkova, Deni (August 26, 2013). "Now THAT'S what you call fast food! Belgian vending machine dispenses French fries in an instant". Daily Mail. Retrieved October 29, 2015.
  20. "About us". E-Vend Technology. Retrieved 29 October 2015.
  21. "Automated French Fry Vending". E-Vend Technology. Retrieved 29 October 2015.
  22. "French Fries Vending". FOTOLOOK. Retrieved29 October 2015.
  23. Wahlquist, Calla (January 29, 2015). "Hot chip vending machine created by company that believed it could fry". The Guardian. Retrieved October 29, 2015
  24. Wahlquist, Calla (January 29, 2015). "Hot chip vending machine created by company that believed it could fry". The Guardian. Retrieved October 29, 2015
  25. .Pollack, Hilary (January 29, 2015). "French Fry Vending Machines Could Be Coming to Your Office". Munchies: Food by VICE. Vice. RetrievedOctober 29, 2015
  26. .Pollack, Hilary (January 29, 2015). "French Fry Vending Machines Could Be Coming to Your Office". Munchies: Food by VICE. Vice. RetrievedOctober 29, 2015
  27. Katzmaier, David (September 9, 2015). "Vending machine dispenses fresh, hot fries". CNET. Retrieved October 29, 2015.
  28. Katzmaier, David (September 9, 2015). "Vending machine dispenses fresh, hot fries". CNET. Retrieved October 29, 2015.
  29. Chang, Lulu (September 7, 2015). "This French fry vending machine is the stuff dreams are made of".Digital Trends. Retrieved October 29, 2015.
  30. Bruno, Audrey (September 8, 2015). "This French Fry Vending Machine Might Change Fast Food Forever-You've Got to See What This New Vending Machine Does". Delish. Retrieved April 5, 2016.
  31. Katzmaier, David (September 9, 2015). "Vending machine dispenses fresh, hot fries". CNET. Retrieved October 29, 2015.
  32. Chang, Lulu (September 7, 2015). "This French fry vending machine is the stuff dreams are made of".Digital Trends. Retrieved October 29, 2015.
  33. Katzmaier, David (September 9, 2015). "Vending machine dispenses fresh, hot fries". CNET. Retrieved October 29, 2015.

வெளி இணைப்புகள் தொகு