பிரேம்சந்த் ராய்சந்த்

இந்தியத் தொழிலதிபர்

பிரேம்சந்த் ராய்சந்த் (Premchand Roychand) இவர், 19 ஆம் நூற்றாண்டின் இந்திய தொழிலதிபர் ஆவார். இவர்,மும்பையின் "பருத்தி அரசன்" என்றும் "பில்லியன் அரசன்" என்றும் அழைக்கப்பட்டார்.

பிரேம்சந்த் ராய்சந்த் ஜெயின்
பிறப்புமார்ச் 1831
சூரத்து
இறப்புமார்ச்சு 1906 (அகவை 74–75)
தேசியம்இந்தியன்
பணிபங்குச் சந்தைத் தரகர், தொழிலதிபர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்ராஜபாய் கடிகார கோபுரத்தின் நன்கொடையாளர்

வாழ்க்கை தொகு

1831-ல் பிறந்த இவர் சூரதைச் சேர்ந்த சைன வணிகரான ராய்சந்த் தீப்சந்த் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். இவர், ஒரு சிறுவனாக இருந்தபோது இவரது குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது. இவர், எல்பின்ஸ்டோன் கல்லூரியில் கல்வி பயின்றார். ஆங்கிலம் பேசவும், படிக்கவும், எழுதவும் தெரிந்த முதல் இந்தியத் தரகராக பதிவுசெய்யப்பட்ட இவர் 1849 இல் பங்குச்சந்தைத் தரகராக பட்டியல்களில் நுழைந்தார். மூலதன சந்தைகளைத் தவிர, இவர் பங்குச் சந்தையில் பருத்தி மற்றும் பொன் வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க வணிக ஆர்வங்களைக் கொண்டிருந்தார். இவர் நேட்டிவ் ஷேர் & ஸ்டாக் புரோக்கர்ஸ் அசோசியேஷன் என்ற நிறுவனத்தில் உறுப்பினராக இருந்தார். இது இப்போது இந்தியாவின் இரண்டாவது பெரிய பங்குச் சந்தையான மும்பை பங்குச் சந்தையாகும். [1] ஏப்ரல் 1861 இல் அமெரிக்க உள்நாட்டுப் போரின் தொடக்கத்தால் தூண்டப்பட்ட பருத்தி ஏற்றம் காரணமாக இவர் கணிசமான இலாபத்தைப் பெற்றார். இது 1865 வரை இருந்தது. [2] [3]

மும்பையின் பேக் பே மறுசீரமைப்புத் திட்டத்திலும், இதுபோன்ற பிற முயற்சிகளிலும் இவர் தனது செல்வத்தின் பெரும்பகுதியை இழந்தார். [4] பின்னர் இவர் அதில் ஒரு பகுதியை மீண்டும் சம்பாதித்து, மனிதநேய முயற்சிகளுக்கு திரும்பினார். மும்பை பல்கலைக்கழகத்தில் உள்ள ராஜபாய் கடிகார கோபுரம் இவரது தாயின் பெயரால் நிறுவப்பட்டது. இதற்கு மார்ச் 1, 1869 இல் அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும் இதன் கட்டுமானம் 1878 நவம்பரில் நிறைவடைந்தது. கட்டுமானத்திற்கான மொத்த செலவு ₹550,000 ஆக இருந்தது. அக்காலத்தில் மொத்த கட்டுமான செலவில் ஒரு பகுதியான ₹200,000த்தை இவர் நன்கொடையாக வழங்கினார் [1] [5]

இவர், மும்பை மாகாணத்தில் மிகப்பெரிய வங்கியான மும்பை வங்கியின் இயக்குநராக இருந்தார். [6] மகளிருக்கான ஜே. பி. பெட்டிட் உயர்நிலைப்பள்ளி போன்ற பல பள்ளிகளிலும் இவர் முதலீடு செய்தார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் சிறந்த கலை மாணவர்களுக்காக "பிரேம்சந்த் ராய்சந்த் விருதை" யும் நிறுவினார். இவர் ஆசியச் சங்கத்திற்கும் நன்கொடை அளித்தார். [7] [8]

இவர் 1906 இல் இறந்தார். பைகுல்லாவில் உள்ள இவரது வீட்டிற்கு 'பிரேமோதயன்' என்று பெயரிட்டார். பின்னர் இது ரெஜினா பாசிஸ் கான்வென்ட் பள்ளி என ஆனது இது ஒரு அனாதை இல்லம் மற்றும் ஆதரவற்ற சிறுமிகளுக்கான பள்ளியாகும். [9] [10]

மேலும் படிக்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Mishra, Ashish K. "Premchand Roychand: Mumbai's original share king". Livemint. பார்க்கப்பட்ட நாள் 2016-07-27.
  2. Kaul, Vivek (2007-03-04). "Mumbai's first realty bust was in 1865 | Latest News & Updates at Daily News & Analysis". DNA India. பார்க்கப்பட்ட நாள் 2016-07-27.
  3. "Premchand Roychand and Bombay dreams" (in en). The Hindu Business Line. 2010-02-14. http://www.thehindubusinessline.com/todays-paper/tp-others/tp-variety/premchand-roychand-and-bombay-dreams/article983860.ece. 
  4. "An insane interlude in history". www.rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2017-07-18.
  5. Rakesh Kumar Bhatt (1 January 1995). History and Development of Libraries in India. Mittal Publications. பக். 39–40. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7099-582-1. https://books.google.com/books?id=Jbmdowzuv0QC&pg=PA39. 
  6. Three Merchants of Bombay: Business Pioneers of the Nineteenth Century. https://books.google.com/books?id=iUhvd13OoEwC&pg=PT122. 
  7. Sunavala, Nergish (2016-06-19). "Schools get architects to save a chapter of their own history - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 2016-07-27.
  8. "Premchand Roychand and Bombay dreams" (in en). http://www.thehindubusinessline.com/todays-paper/tp-others/tp-variety/premchand-roychand-and-bombay-dreams/article983860.ece. 
  9. "This home stood witness to the hands that built Bombay" (in en-US). The Indian Express. 2014-01-21. http://indianexpress.com/article/cities/mumbai/this-home-stood-witness-to-the-hands-that-built-bombay/. 
  10. "Premchand Roychand and Bombay dreams" (in en). The Hindu Business Line. 2010-02-14. http://www.thehindubusinessline.com/todays-paper/tp-others/tp-variety/premchand-roychand-and-bombay-dreams/article983860.ece. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேம்சந்த்_ராய்சந்த்&oldid=3030742" இலிருந்து மீள்விக்கப்பட்டது