பிரேவ் (2012 திரைப்படம்)

2012 ஆம் ஆண்டு அமெரிக்க இயங்கு பட கற்பனை திரைப்படம்

பிரேவ் (ஆங்கிலம்: Brave) என்பது 2012 ஆம் ஆண்டு வெளிவந்த கணினி மூலம் உருவாக்கப்பட்ட படங்களைக் கொண்ட அமெரிக்க கற்பனை திரைப்படமாகும். இதனை பிக்ஸர் அணிமேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்தது. வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் வெளியிட்டது. மார்க் ஆண்ட்ரூஸ் மற்றும் பிரண்டா சாப்மன் ஆகியோர் இயக்குனர்களாகவும், ஸ்டீவ் பர்செல் துணை இயக்குனராகவும் பணியாற்றினார். இந்த திரைப்படத்திற்கு கதையை சாப்மன் உருவாக்கினார். திரைக்கதையானது ஆண்ட்ரூஸ், பர்செல், சாப்மன் மற்றும் ஐரீன் மெக்கி ஆகியோரால் உருவாக்கப்பட்டது. இந்த திரைப்படத்தை கேத்தரின் சரபியன் தயாரித்தார். ஜான் லாசெட்டர், ஆண்ட்ரூ ஸ்டான்டன் மற்றும் பீட் டாக்டர் ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றினர். இந்த திரைப்படத்தில் உள்ள கதாபாத்திரங்களுக்கு கெல்லி மெக்டொனால்டு, பில்லி கானலி, எம்மா தாம்ப்சன், ஜூலி வால்டர்ஸ், ராபி கோல்ட்ரேன், கெவின் மெக்கிட் மற்றும் கிரைக் பெர்குசன் ஆகியோர் குரல் கொடுத்திருந்தனர். ஸ்காட்லாந்தின் உயர்நிலப் பகுதிகளில் நடைபெறுவதாக இந்த திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. மெரிடா என்ற பெயருடைய ஒரு இளவரசியின் கதையைப் பற்றி இத்திரைப்படம் கூறுகிறது. அவள் பாரம்பரிய வழக்கமான நிச்சயிக்கப்படுவதில் இருந்து விலக்கு பெற விரும்புகிறாள். இது அவளது ராஜ்ஜியத்தில் பிரச்சினைகளை உருவாக்குகிறது. பிக்ஸர் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முதல் மற்றும் ஒரே டிஸ்னி இளவரசி தற்போதுவரை மெரிடா தான். இந்த படம் வெளியாவதற்கு முன்னர் இறந்த ஸ்டீவ் ஜாப்ஸிற்கு இப்படம் அர்ப்பணிக்கப்பட்டது.

பிரேவ்
இயக்கம்மார்க் ஆண்ட்ரூஸ்
பிரண்டா சாப்மன்
தயாரிப்புகேத்தரின் சரபியன்
திரைக்கதைமார்க் ஆண்ட்ரூஸ்
ஸ்டீவ் பர்செல்
பிரண்டா சாப்மன்
ஐரீன் மெக்கி
இசைபேட்ரிக் டோய்ல்
நடிப்புகெல்லி மெக்டொனால்டு
பில்லி கானலி
எம்மா தாம்ப்சன்
ஜூலி வால்டர்ஸ்
ராபி கோல்ட்ரேன்
கெவின் மெக்கிட்
கிரைக் பெர்குசன்
ஒளிப்பதிவுராபர்ட் ஆண்டர்சன் (ஒளிப்பதிவு)
டேனியல் ஃபெயின்பெர்க் (ஒளியமைப்பு)
படத்தொகுப்புநிகோலஸ் சி. ஸ்மித்
கலையகம்வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ்
பிக்ஸர்
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ்
மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுசூன் 10, 2012 (2012-06-10)(சியாட்டில் சர்வதேச திரைப்பட விழா)
சூன் 22, 2012 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்1:40 மணி நேரம்[1]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$185 மில்லியன் (1,323 கோடி)[1]
மொத்த வருவாய்ஐஅ$540.4 மில்லியன் (3,864.7 கோடி)[2]

உசாத்துணை தொகு

  1. 1.0 1.1 "Brave (2012)". பாக்சு ஆபிசு மோசோ. பார்க்கப்பட்ட நாள் December 14, 2012.
  2. "Brave (2012)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் August 20, 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேவ்_(2012_திரைப்படம்)&oldid=2967351" இலிருந்து மீள்விக்கப்பட்டது