பில்ஹணா அல்லது கவியின் காதல் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. என். ராவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஆர். ராமசாமி, ஏ. ஆர். சகுந்தலா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1][2]

பில்ஹணா
இயக்கம்பி. என். ராவ்
தயாரிப்புமுபாரக் பிக்சர்சு, சென்னை
வசனம்எஸ். சுந்தராச்சாரி
நடிப்புகே. ஆர். ராமசாமி
ஏ. ஆர். சகுந்தலா
ஆர். பாலசரஸ்வதி
புளிமூட்டை ராமசாமி
கே. எஸ். அங்கமுத்து
எம். ஜெயசிறீ
பாடலாசிரியர்பாபநாசம் சிவன்
கலையகம்ப்ரகதி பிக்சர்சு
வெளியீடுசெப்டம்பர் 1948
நீளம்15605 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

முபாரக் பிக்சர்சு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படத்தின் வசனங்களை எஸ். சுந்தராச்சாரியாரும், பாடல்களை பாபநாசம் சிவனும் எழுதியிருந்தனர். இப்படத்தை இயக்கியவர் பாலகிருஷ்ணன் நாராயணன் நாயர் என்ற பி. என். ராவ். இவர் ரம்பையின் காதல், பூலோக ரம்பை, குமாஸ்தாவின் பெண், மதனகாமராஜன் போன்ற பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர்.[2]

பாடல்கள் தொகு

  • என் சசிகலா என்ற பாடலை கே. ஆர். ராமசாமி கொலைக்களத்தில் பாடியிருக்கிறார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "1948 வருசத்தைய வெளியீடுகள்". பேசும் படம்: பக். 29. சனவரி 1949. 
  2. 2.0 2.1 ராண்டார் கை (29 சூன் 2013). "Bilhana (1948)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/bilhana-1948/article4863299.ece. பார்த்த நாள்: 16 அக்டோபர் 2016. 
  3. "ஸ்டூடியோக்களைச் சுற்றி". பேசும் படம்: பக். 63. சூன் 1948. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பில்ஹணா&oldid=3748228" இலிருந்து மீள்விக்கப்பட்டது