பில் டில்டென்

வில்லியம் டாடெம் டில்டன் || ( பிப்ரவரி 10, 1893 - யூன் 5, 1953) அமெரிக்க நாட்டு டென்னிசு வீரர் ஆவார். டென்னிசு உலகின் சிறந்த வீரராக கருதப்படுகிறார். இவர் 1920-25 என்று ஆறு ஆண்டுகள் உலக முதல் தர வீரராக இருந்தார். இவர் பத்து கிராண்ட் சிலாம் கோப்பைகள், ஒரு உலக கடும்தள சாதனையாளர் போட்டி, நான்கு புரோ சிலாம் உட்பட பதினைந்து பெரிய போட்டிகளின் கோப்பைகளை வென்றுள்ளார். விம்பிள்டன் கோப்பையை வென்ற முதல் அமெரிக்கர் இவரே, 1920இல் அக் கோப்பையை வென்றார். ஏழு அமெரிக்க சாதனையாளர் பட்டங்களை பெற்றுள்ளார்.

1920இன் பிற்பகுதியில் டில்டன் உலக டென்னிசில் செல்வாக்கை செலுத்தினார். 1912-29 வரையான தன் 18 ஆண்டுகால தொழில்முறையற்ற டென்னிசு வாழ்க்கையில் 192 போட்டிகளில் விளையாடி 138இல் கோப்பையை வென்றார். 1930இல் இறுதியாக விம்பிள்டனை வென்றார் பின் அவ்வாண்டே தொழில் முறை டென்னிசு வீரராக மாறினார்.

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

பில் டில்டன் பிப்ரவரி 10, 1893இல் பிலடெல்பியாவின் வடமேற்கு பகுதியிலுள்ள செர்மான்டவுனில் பணக்கார குடும்பத்தில் பிறந்தார்.அக்குடும்பத்தில் அவருக்கு முன் பிறந்த மூன்று குழந்தைகள் இறந்ததுவிட்டது. இவரின் தந்தை வில்லியம் டாலெம் டில்டென் கம்மளி வியாபாரியும் உள்ளூர் அரசியல்வாதியும் ஆவார். அவரது தாய் செலினா ஏ பியானோ வாசிப்பவர். நியூயார்க் மாநிலத்தின் தென் கிழக்கிலுள்ள காசுட்கில் மலைத்தொடரில் உள்ள கோடைகால வீட்டில் ஆறு அல்லது ஏழு வயதாக உள்ள போது டில்டெனுக்கு டென்னிசுடன் தொடர்பு ஏற்பட்டது. டில்டென்னுக்கு 18 வயதாக இருக்கும் போது பிரைட் நோய் என அறியப்பட்ட [1] சிறுநீரக நோய் பாதிப்புக்கு இவரது தாய் உள்ளானார். இதனால் இவர் இவரின் தந்தை உயிருடன் உள்ள போதே சில வீடுகள் தள்ளி உள்ள தந்தையின் சகோதரி வீட்டுக்கு அனுப்பப்பட்டார். இவரின் 22 வயதில் இவரின் தந்தையின் இழப்பும் மூத்த சகோதரர் அபெர்ட்டின் இழப்பும் இவரை கடுமையாக பாதித்தது. பல மாதங்கள் உள்ளத்தின் அழுத்தத்திலிருந்து அத்தையும் டென்னிசும் தந்த ஊக்கத்தால் பாதிப்பிலிருந்து மீண்டு வந்தார். தன் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்புகளால் விளையாட்டரங்கத்தில் பந்து எடுத்து தரும் பையன்களுடனும் டென்னிசு கற்க வரும் பையன்களுடனும் தந்தை மகன் உறவை பேணினார். டென்னிசு கற்க வந்த வின்னி ரிச்சர்ட்சு குறிப்பிடத்தகுந்தவர் என்று இவரின் வரலாற்றை எழுதிய பிராங்க் டிபோர்டு கூறுகிறார். உலகம் முழுவதும் பயணித்தாலும்தன் 1941 வரை அத்தை வீட்டிலேயே வசித்தார். அப்போது இவரது வயது 48 ஆகும். டில்டென் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலிருந்த படியே பாடம் படித்தவர். 1908இல் செருமான்டவுன் கழகத்திலும் பின் பிலடெல்பியா பல்கலைக்கழகத்திலும் சேர்ந்தார், பியர்சி கல்லூரியில் பட்டம் பெற்றார்.

தொழில் முறை ஆட்டம் தொகு

பணத்தேவையின் பொருட்டு 1930 டிசம்பர் 31இல் தொழில் முறை ஆட்டக்காரராக மாறி புரோ போட்டிகளில் விளையாடினார்..இப்போட்டிகள் 1927இல் இருந்தே தொடங்கியது. அடுத்த்த பதினைந்து ஆண்டுகளுக்கு ஆன்சு நியுசிலின் காரெல் கொசெல் போன்ற சில தொழில் முறை வீரர்களுடன் இணைந்து அமெரிக்கா ஐரோப்பா முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார், அரங்குகளுக்கு இவரைப் பார்ப்பதற்காகவே மக்கள் வந்தனர். முன்னால் இன்னாள் உலக முதல் தர வீரர்களாக விளங்கிய டான் பட்ச்சு பிரட் பெர்ரி எல்லிசுவொர்த் வைன்சு போன்றவர்களுக்கு எதிராகவும் ஆடினார். சுற்றுப்பயணத்தில் அதிகமாக டில்டெனே மக்களை கவர்பவராக இருந்தார். 1934ஆம் ஆண்டில் 41 வயதை அடைந்த டில்டென் தான் விளையாட்டில் முன்பே உச்சத்தை அடைந்துவிட்டதாக கருதினார் ஆனால் அவ்வாண்டு தன்னை விட 18 வயது இளையவரான எலிசுவொர்த் வைன்சுடனான ஆட்டத்தில் செல்வாக்கு செலுத்தினார். 1945ஆம் ஆண்டு 52 வயது நிரம்பிய டில்டென் தன் நெடுநாளைய இரட்டையர் இணையான வின்னி ரிச்சர்டுடன் இணைந்து தொழில்முறை இரட்டையர் சாதனையாளர் போட்டியை வென்றார். இந்த இணை 27 ஆண்டுகளுக்கு முன் 1918இல் தொழில்முறையில்லா அமெரிக்க இரட்டையர் சாதனையாளர் பட்டத்தை வென்றிருந்தது. டில்டென் செருமனியின் டேவிசுக் கோப்பை அணிக்கு பயிற்சியாளராக 1937இல் பணியாற்றினார். அமெரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் அது தோற்றது.

மேற்கோள்கள் தொகு

  1. https://www.britannica.com/science/Bright-disease
"https://ta.wikipedia.org/w/index.php?title=பில்_டில்டென்&oldid=3861857" இலிருந்து மீள்விக்கப்பட்டது