பிளேஸ்டேசன்

பிளேஸ்டேசன் (Playstation)நிகழ்பட ஆட்ட இயந்திரம் 1990 ஆம் ஆண்டு சோனி நிறுவனத்தின் கணிணிப் பொழுதுபோக்கு குழுவின் தயாரிப்பில் வெளிவந்த இயந்திரமாகும். இவ்வியந்திரத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து சோனி நிறுவனம் தயாரித்த போக்கெட்ஸ்டேசன், பிளேஸ்டேசன் 2, பிளேஸ்டேசன் 3 போன்ற இயந்திரங்களை சோனி நிறுவனத்தினால் பல வருடங்கள் கழித்து வெளியிடப்பட்டது.பிளேஸ்டேசன் ஒன் என பெருவாரியாக அழைக்கப்படும் இவ்வியந்திரம் உலகின் பல பாகங்களிலும் உள்ள மக்களின் வரவேற்பைப் பெற்றது. மார்ச் 2005 ஆம் ஆண்டின் கணிப்பின்படி அதிகளவு மக்களால் வாங்கப்பட்ட நிகழ்பட ஆட்ட இயந்திரமாக விளங்குகின்றது பிளேஸ்டேசன். மார்ச்,2005 ஆம் ஆண்டின் கணிப்பின்படி சுமார் 100.49 மில்லியன் இயந்திரங்கள் இதுவரை விற்பனையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 2001 ஆம் ஆண்டு சோனி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி அமெரிக்க வீடுகளில் மூன்றில் ஒரு வீட்டினுள் வாழ்பவர்களால் இவ்வியந்திரம் உபயோகிக்கப்படுவது என்பதத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

பிளேஸ்டேசன்
தயாரிப்பாளர் சோனி
வகை நிகழ்பட ஆட்டம்
தலைமுறை ஜந்தாம் தலைமுறை (32-bit/64-bit era)
முதல் வெளியீடு டிசம்பர் 3 1994 (ஜப்பான்)
செப்டம்பர் 1 1995 (வட அமெரிக்கா)
செப்டம்பர் 29 1995 (ஜரோப்பா)
CPUCustom MIPS R3000
ஊடகம் சிடி-ரோம்
நினைவகம் நினைவு அட்டை
விற்பனை எண்ணிக்கை102 மில்லியன்(மார்ச் 2005)
அடுத்த வெளியீடுபிளேஸ்டேசன் 2

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளேஸ்டேசன்&oldid=3221496" இலிருந்து மீள்விக்கப்பட்டது