பிழை வீச்சு

துடுப்பாட்டத்தில் பிழை வீச்சு என்பது முறையற்ற வீச்சுகளில் ஒன்றாகும். இதன் விளைவாக மட்டையாடும் அணிக்கு கூடுதலாக ஒரு ஓட்டம் வழங்கப்படுகிறது. மேலும் அந்த வீச்சு நிறைவில் ஒன்றாக சேர்க்கப்படாது. எனவே அதை ஈடுசெய்யும் வகையில் பந்துவீச்சாளர் கூடுதலாக பந்துவீச வேண்டும். இதன் வரையறைகள் துடுப்பாட்ட விதி 21இல் உள்ளது.[1]

பிழை வீச்சுக்கு அடுத்து வீசப்படும் பந்தில் ஓட்ட இழப்பைத் தவிர மற்ற முறைகளில் மட்டையாடுபவரை ஆட்டமிழக்கச் செய்ய இயலாது. எனவே மட்டையாளர் எவ்வித தயக்கமும் இன்றி பந்தை அடிக்கலாம். இது இலவச அடி என்று அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "{% DocumentName %} Law | MCC". www.lords.org. பார்க்கப்பட்ட நாள் 2019-12-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிழை_வீச்சு&oldid=2867105" இலிருந்து மீள்விக்கப்பட்டது